Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 September 2020 12th September 2020


அமெரிக்கா & மாலத்தீவு ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம்

  • அண்டை நாடான சீனா, இந்திய பெருங்கடல் மற்றும் தென் சீன கடல்பகுதியில், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மாலத்தீவுக்குக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இதில், அமெரிக்க ராணுவ அமைச்சகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான, துணை அமைச்சர் ரீட் வெர்னரும், மாலத்தீவு ராணுவ அமைச்சர் மரியா திதியும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம், இருதரப்பு உறவுகளை, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என நம்புகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

4ஆவது அரபு நாடானது பஹ்ரைன்

  • தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் கடந்த மே 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • தமிழக தொல்லியல் துறையின் அகழாய்வு கள இயக்குநர் பாஸ்கர், தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் ஆய்வு மாணவர்கள், தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • ஆதிச்சநல்லூரில் 72 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அகழாய்வு பணியில் தற்போது மக்கள் வாழ்விடங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
  • இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தோண்டப்பட்ட குழியில் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் வடிகால் குழாய் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட வடிகால் போலவே இந்த அமைப்பும் காணப்படுகிறது. இதன் மூலம் இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனை தொல்லியல் துறையினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

2100-ம் ஆண்டில் 1,100 கோடி

  • உலக மக்கள்தொகை 2100-ம் ஆண்டில் 1,100 கோடியைத் தாண்டும் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
  • இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற இடத்தை 2100-ல் பிடிக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது.
  • இரண்டாவது, மூன்றாவது இடங்களில் நைஜீரியா, சீனா இடம்பெறும். இந்த நூற்றாண்டின் முடிவில் உலக மக்கள்தொகை எப்படியும் 1,100 கோடியைத் தாண்டும் என்று 2015-ம் ஆண்டிலேயே ஐ.நா. சபை கணித்தது குறிப்பிடத்தக்கது.
  • தற்போது உலக மக்கள்தொகை 780 கோடியாக உள்ளது. ஐநாவின் ஆய்வுப்படி 2030-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 805 கோடியாக அதிகரிக்கும். 2050-ம் ஆண்டில் 970 கோடியாக உயரும். 2100-ம் ஆண்டில் 1090 கோடியை எட்டும். தனிமனித ஆயுட்காலம் உயருவதன் விளைவாக மொத்த மக்கள் தொகையில் கால் பகுதியினர் 65 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பார்கள். அதேபோல மக்கள்தொகைப் நெருக்கத்தின் அளவீடும் மாறும். இதில் 2100-ம் ஆண்டு வாக்கில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு நைஜீரியாவில் 856.3 பேரும், இந்தியாவில் 331.6 பேரும், பாகிஸ்தானில் 281.2 பேரும் வசிக்கும் நிலை ஏற்படும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு

  • சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு (International Solar Alliance (ISA)) முதலாவது உலக சோலார் தொழில்நுட்ப உச்சிமாநாடு (World Solar Technology Summit) 8-9-2020 ல் இணையவழியில் நடைபெற்றது.
  • இதனை சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI)) இணைந்து நடத்திய இந்த மாநாட்டை பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இந்த உச்சி மாநாட்டின் போது, ’சோலார் காம்பஸ் 360’ (Solar Compass 360) என்ற பெயரில் சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆராய்ச்சி இதழ் தொடங்கப்பட்டது.
  • ”I JOSE” (ISA Journal on Solar Energy) என்ற பெயரில் சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பின் சூரிய ஆற்றல் ஆராய்ச்சி இதழ் தொடங்கப்பட்டது.
  • 121 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு 2015 ஆம் ஆண்டில், பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டின் போது இந்தியாவினால் முன்மொழியப்பட்டு தொடங்கப்பட்ட அமைப்பாகும். இதன் தலைமையிடம் ஹரியானா மாநிலம் குருகிராமில் (Gurugram) அமைந்துள்ளது.

"கோவிஷீல்ட்" பரிசோதனை நிறுத்தம்

  • இந்தியாவில் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தம்: இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனைகள் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளதாக செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • தன்னார்வலர் ஒருவருக்குக் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

”இ-கோபாலா செயலி”

  • ”இ-கோபாலா செயலி” ”இ-கோபாலா செயலி” ( e-Gopala App ) : விவசாயிகள் நேரடியாகப் பயன்படுத்துவதற்கான விரிவான இன மேம்பாட்டு சந்தை மற்றும் கால்நடை பராமரிப்பை ஊக்குவிக்கும் வகையில் இ-கோபாலா செயலியை பிரதமர் மோடி அவர்கள் 10-9-2020 அன்று தொடங்கிவைத்தார்.

ராம் பகவான் விமான நிலையம்

  • அயோத்தியில் ராம் பகவான் என்ற பெயரில் விமான நிலையம் அமைய உள்ளது. அதற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்படுகிறது.

"வந்தே பாரத்"

  • "வந்தே பாரத்” திட்டத்தின் மூலம், இதுவரையில், 13.74 லட்சம் (கரோனா தொற்றின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிய) இந்தியர்கள் விமானங்களின் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இந்த திட்டத்தில் ஏர் இந்தியா விமானம், தனியார் மற்றும் வெளிநாட்டு விமானம், வெளிநாட்டு சிறப்பு விமானம் மற்றும் கப்பல்கள் என அனைத்தும் அடங்கும் என கூறினார்.
  • இந்தத் திட்டம் தற்போது 6-ம் கட்டத்தில் உள்ளது. இது செப்டம்பர் 1-ல் தொடங்கி அக்டோபர் 24 வரை 1,007 சர்வதேச விமானங்களில் 2 லட்சம் பேரை இந்தியாவிற்கு அழைத்து வரவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு

  • இந்தியாவில் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை குழந்தைகள் இறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உலக நாடுகளில் கடந்த 1990-ஆம் ஆண்டில் 1.25 கோடி 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் இறந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டில் 52 லட்சமாக குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்தியாவில் 5 வயதை எட்டுவதற்குள் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 34 லட்சத்திலிருந்து 8.24 லட்சமாகக் குறைந்தது.
  • கடந்த 1990-ஆம் ஆண்டில் இந்தியாவில் 1,000 குழந்தைகளுக்கு 126 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 34-ஆகக் குறைந்தது. இதன் மூலமாக சுமார் 30 ஆண்டுகளில் இந்தியாவில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் ஆண்டுதோறும் 4.5 சதவீதம் குறைந்துள்ளது.
  • அதே வேளையில், இந்தியாவில் பிறந்து ஒரு வயதை எட்டுவதற்குள் இறக்கும் குழந்தைகளின் விகிதம் கடந்த 1990-ஆம் ஆண்டில் (1,000 குழந்தைகளுக்கு) 89-ஆக இருந்தது. இந்த விகிதம் கடந்த ஆண்டில் 28-ஆகக் குறைந்தது. அதே காலகட்டத்தில், பிறந்து 28 நாள்களுக்குள் இறந்த குழந்தைகளின் விகிதம் (1,000 குழந்தைகளுக்கு) 57 என்ற எண்ணிக்கையில் இருந்து 22-ஆகக் குறைந்துள்ளது.
  • இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் மேம்பட்டுள்ளதன் காரணமாகவே குழந்தைகள் இறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளது. மேலும், குழந்தைகள் எடை குறைவாக பிறப்பதைத் தடுப்பது, பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களைத் தடுப்பது, குழந்தைகளுக்கு போதுமான கால இடைவெளிகளில் தடுப்பூசி போடுவது உள்ளிட்டவற்றை இந்தியா திறம்பட மேற்கொண்டு வருகிறது

'சுக்கா, மிளகா சமூகநீதி'

  • 'சுக்கா, மிளகா சமூகநீதி' என்ற பெயரில் புதிய புத்தகத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் எழுதியுள்ளார்.

AITA

  • "அனைத்திந்திய டென்னிஸ் சங்கத்தின் "(All India Tennis Association(AITA)) தலைவராக அனில் ஜெயின் (Anil Jain) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Share with Friends