"கேடயம்” செயல் திட்டம்
- திருச்சி சரக காவல்துறை மற்றும் இண்டர்னேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணைந்து திருச்சி சரகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் “கேடயம்” என்ற செயல் திட்டம் 21-9-2020 அன்று தொடங்கப்பட்டது.
- இத்திட்டமானது திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
வேலையற்ற நபா்களுக்கு இணைய வழியில் கல்வி
- தமிழகத்தில் 50 ஆயிரம் வேலையற்ற நபா்களுக்கு இணைய வழியில் கல்வி மற்றும் திறன் பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்காவின் ‘கோா்ஸெரா’ (Coursera) இணையவழி கற்றல் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு செய்துள்ளது.
2020-ம் ஆண்டுக்கான AZ Award
- 2020-ம் ஆண்டுக்கான ஏஇசட் (AZ Award) விருதுகளில் சமூகப் பயன்பாடு கட்டிடப் பிரிவில் மக்களின் விருப்பத் தேர்வாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வேளாண் துறை தொடர்பான ‘கிருஷி பவன்’ என்ற கட்டிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை போர்க்கப்பலில் 2 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- ஹெலிகாப்டர்களை போர்க்கப்பல் தளத்தில் இருந்து இயக்கப் போகும் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த முதல் பெண் விமானிகள் என்ற பெருமையை சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் சப் லெப்டினன்ட் ரித்தி சிங் பெறுகிறார்கள்.
கோதுமை, பாா்லி & பருப்புக விலை உயா்வு
- கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.50 உயா்த்தப்பட்டு ரூ.1,975-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மசூா் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.225 உயா்த்தப்பட்டு ரூ.5,100-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- கடுகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.225 அதிகரிக்கப்பட்டு ரூ.4,650-ஆகவும், பாா்லிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.75 அதிகரிக்கப்பட்டு ரூ.1,600-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
- பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.300 உயா்த்தப்பட்டு ரூ.5,100-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், குசம்பப்பூவுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.112 உயா்த்தப்பட்டு ரூ.5,327-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், 2020 (The Farmers' Produce Trade and Commerce (Promotion and Facilitation) Bill, 2020) மற்றும் விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2020 (The Farmers (Empowerment and Protection) Agreement of Price Assurance and Farm Services Bill, 2020) ஆகிய மசோதக்களை மாநிலங்களவையில் 20-9-2020 அன்று நிறைவேற்றப்பட்டது. vஏற்கனவே,2020 செப்டம்பர் 17 அன்று மக்களவையால் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.முன்னூறுக்கும் குறைவாக பணியாளர்க்களை கொண்டுள்ள நிறுவனங்கள் ஊதியம் இல்லா விடுப்பு (லே-ஆப்) அளிப்பதற்கு இனி அரசின் அனுமதி பெறத் தேவையில்லை என விதி விலக்களிக்கும் தொழில் உறவு வரைவு மசோதா 2020, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, உலகின் மிக நீளமான சுரங்கம் எனும் பெருமையை இமாசல பிரதேச மாநில பிரதேசத்தில் மணாலியில் இருந்து, லே நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள ‘அடல்’ சுரங்கம் பெற்றுள்ளது.
ஃபிரைட் சேவா ( “Freight Seva” )
- ஃபிரைட் சேவா" ( “Freight Seva” ) என்ற பெயரில், சரக்கு போக்குவரத்தை அதிகரிப்பதற்கும் , வாடிக்கையாளர்களுக்கு விரைவான தகவல்களை வழங்குவதற்குமான மொபைல் செயலியை தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.
175 ஜிகாவாட் சூரிய சக்தி ஆற்றல்
- இந்திய அரசு 2022 ஆம் ஆண்டில் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் இலக்கை நிர்ணயித்துள்ளது, ( ஹைட்ரஜன் இந்த இலக்கில் சேர்க்கப்படவில்லை). இதில் 100 ஜிகாவாட்ஸ் சூரிய சக்தி, 60 ஜிகாவாட் காற்று, உயிரி எரிபொருட்களிலிருந்து 10 ஜிகாவாட் மற்றும் நீர் சார்ந்த திட்டங்களிலிருந்து 5 ஜிகாவாட் ஆகியவை அடங்கும்.
MCP Linz MCP Linz” என்ற சரக்கு கப்பல் மூலம் இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையில் முதல் நேரடி சரக்கு படகு சேவை(Cargo Ferry Service ) 21-9-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த படகு சேவை இந்தியாவின் தூத்துக்குடி மற்றும் கொச்சி நகரங்களையும் மாலத்தீவின் குலுதுஃபுஷி ( Kulhudhuhfushi) மற்றும் மாலி துறைமுகங்களுக்கிடையேயும் நடைபெறுகிறது. உலக ரோஜாப்பூ தினம் Ig நோபல் பரிசு 2020 இந்தியாவின் முதல் CRISPR கோவிட் -19