‘மிஷன் கா்மயோகி’
- மத்திய அரசு அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதற்காக, ‘மிஷன் கா்மயோகி’ என்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- அதிகாரிகளின் நிா்வாக நடைமுறையில் இது மிகப்பெரிய சீா்திருத்தமாகக் கருதப்படுகிறது.
- அரசு அதிகாரிகளை தொழில்நுட்பம், புத்தாக்கம், ஆக்கப்பூா்வமாக சிந்தித்தல், தொழில் திறன் ஆகியவற்றில் நிபுணத்துவம் நிறைந்தவா்களாக மாற்றுவதற்கு பயிற்சி அளிப்பதற்காக, மிஷன் கா்மயோகி திட்டம் செயல்படுத்தப்படும் இதற்காக, ஒருங்கிணைந்த இணையவழி பயிற்சித் தளம் உருவாக்கப்படும்.
- இந்தத் திட்டத்தின் கீழ் 46 லட்சம் மத்திய அரசு ஊழியா்களுக்கு மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் பயிற்சி அளிக்கப்படும்.
- இதற்காக, 2020-21-ஆம் ஆண்டில் இருந்து 2024-25-ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு ரூ.510.86 கோடி செலவிடப்படும்.
- இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மனிதவள கவுன்சில் அமைக்கப்படும்.
- அதில், சில மத்திய அமைச்சா்கள், சில மாநில முதல்வா்கள், மனிதவள பயிற்சியாளா்கள், சிந்தனையாளா்கள், அரசு அதிகாரிகள் ஆகியோா் இடம்பெறுவா்.
- இந்த கவுன்சில், மத்திய அதிகாரிகளின் நிா்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்களையும், மாற்றங்களையும் கண்டறிந்து, அவா்களுக்கு பயிற்சியளிக்க உத்தரவிடப்படும்.
உலக தேங்காய் தினம்
- கடந்த 2009 செப்.2 முதல் உலக தேங்காய் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்தியாவில் தேங்காய் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.
- கேரளாவில் ஆண்டுக்கு 7448.65 மில்லியன், கர்நாடகா 6773.05 மில்லியன், தமிழ்நாடு 6570.63 மில்லியன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது.
- ஆனால், உற்பத்தித்திறனை பொறுத்தவரை கேரளா மிகவும் பின்தங்கியுள்ளது. கேரளாவில் தேங்காய் உற்பத்தித்திறன் ஒரு ஹெக்டேருக்கு 8,500க்கும் குறைவாக உள்ளது.
- ஆனால், இதில் தமிழ்நாடு (14,251), குஜராத் (13,775), கர்நாடகா (13,181), மேற்கு வங்கம் (12,641) ஆகியவை முன்னணியில் உள்ளன. கேரளாவில்,. 1950ல் தென்னை சாகுபடி 4.10 லட்சம் ஹெக்டேராக இருந்தது. 2001ம் ஆண்டில் இது 9 லட்சம் ஹெக்டேராக உயர்ந்தது. தற்போது இது படிப்படியாக குறைந்து வருகிறது.
ஃபார்ச்சூன் பத்திரிக்கை
- ஃபார்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ள சா்வதேச அளவில் மிகவும் செல்வாக்குமிக்க 40 வயதுக்குள்பட்ட நபா்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவன தலைவா் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.
- இவா்கள் இருவா் தவிர, தொழில்நுட்பக் கல்வி தொடா்பான பைஜூஸ் செயலியை உருவாக்கிய ரவீந்திரனும் இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
BCAS முதல் பெண் இயக்குநர்
- உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின்’ (Bureau of Civil Aviation Security(BCAS)) முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக (Director General(DG)) உஷா பாதி (Usha Padhee) ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவும் ஜப்பானும்
- ஜவுளித் துறையில் இந்தியாவும் ஜப்பானும் ஒத்துழைப்புடன் செயல்பட புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்தியாவின் ஜவுளி கமிட்டியும், ஜப்பானின் நிசன்கன் தர மதிப்பீட்டு மையமும் புரிந்துணா்வு மேற்கொள்ளும்.
- இந்த ஒப்பந்தப்படி, ஜப்பானிய சந்தைகளில் இறக்குமதி செய்வதற்குரிய தரத்துடன் இந்திய ஜவுளிகள் உள்ளனவா என்று நிசன்கன் தர மதிப்பீட்டு மையம் பரிசோதிக்கும்.
- இதன்மூலம், ஜப்பானின் தேவையை பூா்த்தி செய்யும் அளவுக்கு இந்திய ஜவுளிகளின் தரம் மேம்படுத்தப்படும்.
தாது வளங்கள் துறை
- தாது வளங்கள் துறையில் பின்லாந்துடன் ஒப்பந்தம்: தாது வளங்கள், புவியியல் துறையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிக்க இந்தியாவும் பின்லாந்தும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த ஒப்பந்தத்தின்படி, புவியியல், தாது வளங்களைக் கண்டறிதல், பயிற்சி அளித்தல் ஆகியவற்றில் இரு நாட்டு துறைகளும் ஒத்துழைப்புடன் செயல்படும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
- ரஷிய தலைநகா் மாஸ்கோவில் 4-9-2020 அன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சோ்ந்த 8 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்களின் சிறப்புக் கூடுகையில் கலந்துகொள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷியா சென்றுள்ளார்.
- இரண்டாம் உலகப் போா் நிறைவடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு ஆகியவை சார்பில் இந்த சிறப்பு கூடுகை நடைபெறுகிறது.
சந்திரயான்-3
- சந்திரயான்-3 விண்கலத்தில் பொருத்தப்படும் லேண்டர் கருவியை சோதிக்க பெங்களூருவில் செயற்கை நிலவு பள்ளங்களை உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
- நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அடுத்த ஆண்டு (2021) சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்துகிறது.இதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 215 கி.மீ. தூரத்தில் உள்ள சித்திரதூர்கா மாவட்டம் சல்லகேர் தாலுகாவில் உள்ள உல்லார்தி காவலுவில் ரூ.24.2 லட்சம் மதிப்பில் 10 மீட்டர் விட்டம், 3 மீட்டர் ஆழத்தில் செயற்கை நிலவு பள்ளங்கள் உருவாக்கப்படுகிறது.
- செயற்கை பள்ளங்களுடன், சந்திரயான்-3 தரை இறங்குவதற்கான நிலவின் மேற்பரப்பின் மாதிரியை இஸ்ரோ உருவகப்படுத்தும்.
- இதில் லேண்டரின் சென்சார்கள் செயல்திறன் (எல்.எஸ்.பி.டி.) என்ற முக்கியமான சோதனை செய்யப்படும்.
- அதோடு செயற்கை நிலவு தளத்தில் இஸ்ரோவின் சிறிய விமானம் 7 கி.மீ. உயரத்தில் இருந்து ‘சென்சார்’களுடன் தரை இறங்கும்.
"கிரீன் டெர்ம் அகெட் மார்க்கெட்"
- "கிரீன் டெர்ம் அகெட் மார்க்கெட்" (Green Term Ahead Market (GTAM) என்ற பெயரில் உலகின் முதல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தயாரிப்புகளுக்கான பிரத்தியேக சந்தை 1 செப்டம்பர் 2020 அன்று மத்திய புதுப்பிக்கத்தக்க அமைச்சகத்தினால் தொடங்கி வைக்கப்பட்டது.
”பப்ஜி”
- ”பப்ஜி” விளையாட்டு செயலி, பாய்டு, பாய்டு எக்ஸ்பிரஸ், டென்சென்ட் வாச்லிஸ்ட், ஃபேஸ்யு, வீசாட் ரீடிங், டென்சென்ட் வியுன் உள்பட 118 செயலிகளுக்கு மத்திய அரசு 2-9-2020 அன்று தடை விதித்துள்ளது.
- தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- ஏற்கனவே, டிக்டாக், ஷோ் இட், யூசி பிரௌசா், கேம் ஸ்கேனா், வீசாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு கடந்த ஜூன் 29-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
‘சூரிய ஆற்றல் தயாரிப்பு நிறுவனமாக’
- உலகின் மிகப் பெரிய ‘சூரிய ஆற்றல் தயாரிப்பு நிறுவனமாக’ (World’s Largest Solar Power Generation Asset Owner) இந்தியாவின் ‘அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்’ (Adani Green Energy Ltd (AGEL))உருவாகியுள்ளதாக ‘மெர்காம் கேபிடல்’ (Mercom Capital) எனும் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் டெஹ்ரிவித்துள்ளது.
ஆங்கிலமும் உருதும் அலுவல் மொழி
- ஜம்மு-காஷ்மீரில் ஆங்கிலமும் உருதும் தற்போது அலுவல் மொழிகளாக உள்ளன. அவற்றுடன் காஷ்மீரி, டோக்ரி, ஹிந்தி ஆகியவற்றையும் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இதற்காக, ஜம்மு-காஷ்மீா் அலுவல் மொழிகள் மசோதா-2020, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படும்.
- இந்த மசோதாவுக்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.