Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 September 2020 4th September 2020


சுகாதார சட்டத் திருத்தத்திற்கு பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்

  • தமிழக அரசின் பொது சுகாதார சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்க வழிவகை செய்யும் வகையில் பொது சுகாதாரச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • அதன்படி, முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவை இச்சட்டத்தின்படி குற்றமாக கருதப்படும்.
  • கரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கை

  • புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் ஒரு 7 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
  • அந்தக்குழுவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் எஸ்.பி.தியாகராஜன், பி.துரைசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தாமரைச்செல்வி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Times Higher Education - World University Ranking 2021

  • ”டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2021’ (Timers Higher Education - World University Ranking 2021) ல் இந்திய பல்கலைக்கழகங்களில் முதல் மூன்று இடங்களை முறையே, இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூரு (Indian Institute of Science, Bengaluru) , ஐ.ஐ.டி, ரோபார் மற்றும் ஐ.ஐ.டி. இந்தூர் ஆகியவை பெற்றுள்ளன.
  • உலக அளவில் , முதல் மூன்று இடங்களை முறையே ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து, ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகம், அமெரிக்கா மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கா ஆகியவை பெற்றுள்ளன.

Global Innovation Index 2020

  • 13 வது உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு பட்டியல் 2020 (Global Innovation Index 2020) ல் இந்தியா 48-ம் இடத்தைப் பிடித்துள்ளதன் மூலம், முதல் முறையாக முதல் 50 நாடுகளில் ஒன்றாக நுழைந்துள்ளது. இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே சுவிட்சர்லாந்து, ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
  • உலக அறிவுசார் சொத்து நிறுவனம், கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் இன்சீட் பிசினஸ் ஸ்கூலும் இணைந்து 2020-ம் ஆண்டுக்கான உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு பட்டியலை வெளியிட்டிருக்கின்றன.

ஏகே-47 203

  • இந்தியாவில் அதிநவீன ஏகே-47 203 ரக துப்பாக்கிகளைத் தயாரிப்பதற்காக, இந்தியா, ரஷியா இடையே மிக முக்கியமான தளவாட உற்பத்தி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இந்த துப்பாக்கிகளை இந்தியாவின் ஆயுத தளவாட தொழிற்சாலை(ஓஎஃப்பி), ரஷியாவின் ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான கலஷ்னிகோவ் கன்சொ்ன், அந்நாட்டு அரசின் ஆயுத ஏற்றுமதி நிறுவமான ரோசோபோரோன் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள இந்தியா-ரஷியா ஃரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் கூட்டு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
  • இதில், இந்திய ஆயுதத் தளவாட தொழிற்சாலையின் பங்களிப்பு 50.5 சதவீதமாகவும், கலஷ்னிகோவின் பங்களிப்பு 42 சதவீதமாகவும், ரோசோபோரோனின் பங்களிப்பு 7.5 சதவீதமாகவும் இருக்கும்.
  • இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலம், கோா்வாவில் பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு திறந்துவைத்த ஆயுதத் தளவாடத் தொழிற்சாலையில் இந்த துப்பாக்கிகள் தயாரிக்கப்படும்.
  • தற்போதைய ஏகே-47 ரக துப்பாக்கிகள் கடந்த 1996-ஆம் ஆண்டில் இருந்து இந்திய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளன.

’பிரஸ் டிரஸ்ட் ஆஃ இந்தியா’

  • ’பிரஸ் டிரஸ்ட் ஆஃ இந்தியா’ (Press Trust of India) அமைப்பின் புதிய தலைவராக ஆவீர் சர்க்கார் ( Aveek arkar) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், ஆனந்தா பஷார் (Ananda Bazar) பத்திரிக்கைக் குழுமத்தின் துணைத்தலைவராக உள்ளார்.

Share with Friends