Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 September 2020 6th September 2020


Ease of doing business ranking 2019

  • இந்தியாவில் எளிதாக தொழில் நடத்துவதற்கு உகந்த மாநிலங்களின் பட்டியல் 2019 ( ease of doing business ranking 2019) ல் தமிழகம் 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
  • இப்பட்டியலில், கடந்த 2018 ஆம் ஆண்டில் தமிழகம் 15 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

State Business Reform Action Plan 2019

  • மாநில தொழில் சீர்திருத்த செயல் திட்டம்- 2019 (State Business Reform Action Plan 2019) அடிப்படையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள, எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் ,முதல் ஐந்து இடங்களை முறையே ஆந்திர பிரதேசம், உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் பெற்றுள்ளன.

நாகை மாவட்டம் முதலிடம்

  • இ - சஞ்சீவி இணையதள மருத்துவ சேவையில் தமிழகத்தில் நாகை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி கொள்கை மாநாடு

  • புதிய கல்வி கொள்கை குறித்த கவர்னர்கள் மாநாடு 7-9-2020 அன்று நடைபெறுகிறது.
  • ‘உயர்கல்வியை மேம்படுத்துவதில் தேசிய கல்வி கொள்கையின் பங்கு’ என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாட்டில் மாநில கவர்னர்கள், கல்வி மந்திரிகள், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார்கள்.

"SPICE+"

  • "SPICE+" என்ற பெயரில் புதிதாக தொழில்தொடங்குவோர்கள் தங்களது நிறுவனத்தை பதிவு செய்வதை எளிதாக்குவதற்கான இணையதள படிவ வசதியை (Web Form) மத்திய நிறுவனங்கள் விவகார அமைச்சகம் தொடங்கியுள்ளது.

”பேசிக்”

  • ”பேசிக்” ( (BASIIC)) எனப்படும் ‘அணுகல் மற்றும் பாதுகாப்பான இந்திய நகரங்களை கட்டமைத்தல்’ (Building Accessible Safe Inclusive Indian Cities (BASIIC) ) திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம் (National Institute of Urban Affairs (NIUA)) மற்றும் ஐ.ஐ.டி.ரூர்க்கீ (Indian Institute of Technology Roorkee (IIT-R)) 4-9-2020 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

‘இந்தியாவின் இளம் குழந்தைகளின் நிலை’

  • ‘இந்தியாவின் இளம் குழந்தைகளின் நிலை’ அறிக்கையை 4-9-2020 அன்று துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ளார்.
  • ‘மொபைல் கிரீச்சஸ்’ (Mobile Creches) எனும் அமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், இளம் குழந்தை விளைவு குறியீடு ( Young Child Outcomes Index (YCOI) ) மற்றும் இளம் குழந்தை சுற்றுச்சூழல் குறியீடு (Young Child Environment Index (YCEI)) ஆகிய இரண்டு குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • இவ்வறிக்கையின் படி, இளம் குழந்தை விளைவுகளின் குறியீட்டின் அடிப்படையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் முதல் ஐந்து இடங்களை முறையே, கேரளா, கோவா, திரிபுரா, தமிழ்நாடு மற்றும் மிஷோராம் ஆகியவை பெற்றுள்ளன.

National Institute of Tribal Research (NITR)

  • தேசிய பழங்குடி ஆராய்ச்சி நிறுவனத்தை (National Institute of Tribal Research (NITR)) புது தில்லியிலுள்ள இந்திய பொது நிர்வாக கல்வி நிறுவனத்தின் (Indian Institute of Public Administration (IIPA)) வளாகத்தில் அமைப்பதற்காக மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் இந்திய பொது நிர்வாக கல்வி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

”எம்.டி.நியூ டைமண்ட் கச்சா எண்ணெய் கப்பல்”

  • ”எம்.டி.நியூ டைமண்ட் கச்சா எண்ணெய் கப்பல்” பனாமா நாட்டைச் சேர்ந்த எம்.டி. நியூ டைமண்ட் என்ற டேங்கர் வகை கப்பல் குவைத் நாட்டின் மீமினா அல்ஹைதி துறைமுகத்திலிருந்து சுமார் 2 .70 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்திற்கு புறப்பட்ட போது, 3-9-2020 அன்று இலங்கையின் தென் கிழக்கே வந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
  • இலங்கை கடலோரக் காவல் படையினர் மற்றும் இந்திய கடலோரக் காவல் படை இணைந்து, தீயில் பெரும்பகுதியை அணைக்கட்டு தீ விபத்துக்கு உள்ளான ‘எம்டி நியூ டைமண்ட் கப்பல்’ பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்திய கடலோர காவல்படை இன்று தெரிவித்துள்ளது .

”கிரண்”

  • ”கிரண்” (“KIRAN”) என்ற பெயரில், மன நல மறுவாழ்விற்கான 24 மணி நேர இலவச தொலைப்பேசி (1800-500-0019) ஆலோசனை சேவையை மத்திய சமூகநல அமைச்சர் தாவர்சந்த் கெக்லாட் (Thaawarchand Gehlot) 7-9-2020 அன்று தொடங்கி வைக்கிறார்.

Share with Friends