100வது கோல் அடித்த கிறிஸ்டியானா ரொனால்டோ
- ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டியில், தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்3-ல் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி உள்ளூர் அணியான சுவீடனுடன் மோதியது.
- விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 45 மற்றும் 72 வது றிமிடத்தில் கோல் அடித்த போர்ச்சுக்கல் அணி 2-0 என்ற கோல் வெற்றி பெற்றது. இந்த இரு கோல்களையும் அடித்த போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100- (165 ஆட்டம்) ஆக உயர்த்தினார்.
- மேலும் இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஐரோப்பிய வீரர் என்ற மகத்தான சாதனையை 35 வயதான ரொனால்டோ படைத்தார். உலக அளவில் ஈரான் முன்னாள் வீரர் அலி டாய் 109 கோல்கள் அடித்ததே சாதனையாக உள்ளது.
உலக தற்கொலை தடுப்பு தினம்
- உலக தற்கொலை தடுப்பு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தற்கொலையை தடுக்கும் விழிப்புணர்வு செய்தியை மக்களுக்கு கொண்டுசெல்லும் நோக்கில் தற்கொலை செய்து கொள்பவர்கள் யார், ஏன் அந்த அந்த முடிவை எடுக்கிறார்கள் என்ற விவரங்களை தேடினோம்.
- செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்களில் 23.4 சதவீதம் பேர் தினக்கூலி வேலையில் இருந்தவர்கள்.
- குறிப்பாக இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட 32,5631 தினக்கூலி தொழிலாளர்களில், 5,186 தொழிலாளர்கள் தமிழகத்தில் இறந்துள்ளனர் என பதிவாகியுள்ளது.
- தற்கொலை செய்துகொண்ட தினக்கூலி தொழிலாளர்கள் பலரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
- இந்தியாவில் சராசரியாக தினமும் 320 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்கிறது அரசாங்க அறிக்கை. அந்த 300 பேரில்தான் இந்த தினக்கூலி மக்கள் இருக்கிறார்கள்.
இந்தோ பசிபிக் பிராந்தியம்
- சீன ராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் புதன்கிழமை முதல் முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது.
- மெய்நிகர் முறையில் நடந்த இந்த கூட்டத்திற்கு இந்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் சிரிங்க்லா, பிரான்ஸ் வெளியுறவு செயலர், ஆஸ்திரேலிய வெளியுறவு செயலர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
- இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது. அமைதி, பாதுகாப்பு, வளம் மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதே கூட்டத்தின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.
- அதற்காக மூன்று நாடுகளும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வலுவான இருதரப்பு உறவுகளை கட்டமைத்து வருவதாகவும், இனி ஆண்டுக்கு ஒருமுறை முத்தரப்பு கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
- உலகளாவிய பொதுவான கடல் பகுதிகளில் முத்தரப்பு அளவிலும், பிராந்திய அளவிலுமான ஒத்துழைப்புகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.
தகவல் பாதுகாப்புக்காக 2-வது தரவு மையம்
- அரசு துறைகள் தங்கள் தகவல்தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை மக்களுக்கு அதிக அளவில்அளிக்க, தமிழகத்தின் 2-வது மாநிலதரவு மையம் அமைக்கப்படும்' என்று மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
- அதன்படி, சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவன வளாகத்தில் ரூ.74.69 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் 2வது அதிநவீன மாநில தரவு மையத்தை முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் நேற்று திறந்துவைத்தார்.
- 195 அடுக்குகள் (ரேக்ஸ்) கொண்ட இந்த தரவு மையம், தமிழகஅரசின் மென்பொருள் பயன்பாடுகள் மற்றும் இதர சேவைகளை பாதுகாப்பான முறையில் பதிவேற்றம் செய்து பயன்படுத்த உதவும்.
- மேலும், அரசு துறைகளுக்கு இடையே, அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே, அரசுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் இடையே இணையதள சேவைகளை வழங்கவும், அரசு துறைகளின்தொழில்நுட்பத் தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது.
- இதன் முதல்கட்டமாக, நவீன கணினி உருவாக்க மையம் (Centre for Development of Advanced Computing C-DAC) மூலம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட உள்ள கணினி அவசரகால பதிலளிப்பு குழுவின் (CERT-TN) இணையதளத்தை (https://cert.tn.gov.in) முதல்வர் தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழகத்தின் எல்லா அரசு துறைகளின் கணினி கட்டமைப்புகளை தணிக்கை செய்தல், பாதுகாத்தல், கண்காணித்தல் ஆகிய பணிகளில் இக்குழு முக்கிய பங்கு வகிக்கும்.
- இணைய தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பயனுள்ள இணைய பாதுகாப்பு தகவல் மற்றும் கருத்து கேட்பு ஆகிய வசதிகளை வழங்கும் விதத்தில் இந்தஇணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தடையற்ற இணையவழி சேவைகள், அரசு துறைகளின் தரவுகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.
'5ஜி' கூட்டு தொழில்நுட்பம்
- அதிவேக தொலைத் தொடர்பு சேவைக்கான '5ஜி' தொழில்நுட்பத்தில், இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து செயலாற்ற ஒப்பந்தம் செய்துள்ளன. புதிய தொழில்நுட்பம், நீர், வளர்ச்சி வாய்ப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது தொடர்பாக, இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- அமெரிக்காவின் சிலிக்கான் வேலி, இந்தியாவின் பெங்களூரு, இஸ்ரேலின், டெல் அவிவ் நகரங்கள், புதுமையான தொழில்நுட்பங்களின் மையங்கள் என்ற சிறப்பை பெற்றுள்ளன.
பதினெண் கீழ்க்கணக்கு பாடல்கள் - பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகள்
- உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில், தேர்வு செய்யப்பட்ட, 1,837 பாடல்களின், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிப்பெயர்ப்பு நுால்களை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம் வெளியிட்டார்.
- பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில், தேர்வு செய்யப்பட்ட நுால்கள், உலக மொழிகளான, பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலும், இந்திய மொழிகளான, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகியவற்றிலும், மொழி பெயர்க்கப்படும்.
- இப்பணிகளை, உலக தமிழாராய்ச்சி நிறுவனம் மேற்கொள்ளும்' என, 2016 செப்., 13ல், முதல்வராக இருந்த ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தார்.
- இதை செயல்படுத்த, தமிழக அரசு சார்பில், 15.30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், முதல்கட்டமாக, பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில், தேர்வு செய்யப்பட்ட, 1,837 பாடல்களின், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி பெயர்ப்பு நுால்களை, பிப்., 19ல், முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்டார்.
- அதன் தொடர்ச்சியாக, பிரெஞ்சு, ஜெர்மன் மொழி பெயர்ப்பு நுால் களை, தலைமை செயலகத்தில், முதல்வர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயகுமார், பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு
- தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி அருகேயுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடமாகிய ஆதிச்சநல்லூரில் கடந்த பல மாதங்களாக அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
- இதில், முன்னோர்கள் பயன்படுத்திய பொருள்கள், கட்டிடங்கள் அவர்களின் எலும்புக்கூடுகள் என பல தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.
- இந்நிலையில், முதன்முறையாக ஆதிச்சநல்லூர் அகழாய்வில் குழந்தையின் எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.