Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 May 2020 1st May 2020


உழைப்பாளர்கள் தினம்

  • உழைப்பாளர்கள் தினம் மே 1 அன்று கொண்டாடப்படுகிறது.
  • 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது.
  • இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர்

பொது சுகாதாரத் துறை இயக்குநர் - செல்வவிநாயகம் நியமனம்

  • இதுவரை பொது சுகாதாரத் துறை இயக்குநராக பதவி வகித்து வந்த டாக்டா் க.குழந்தைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து இந்த புதிய நியமன உத்தரவு வெளியாகியுள்ளது.
  • பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் புதிய இயக்குநராக டாக்டா் டி.எஸ். செல்வவிநாயகம் நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • டாக்டா் டி.எஸ். செல்வவிநாயகம் சுகாதாரத் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவலை தடுக்க சிறப்புக்குழு

  • சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்புக் குழுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • அதன்படி ஏற்கனவே, சென்னையில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ள தண்டையார்பேட்டை மண்டலம், திருவிக நகர், ராயபுரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் ஐபிஎஸ் அதிகாரி, வருவாய், சுகாதாரத்துறை அலுவலர் கொண்ட 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • இதை தவிர்த்து மணலி, மாதவரம், திருவொற்றியூர் ஆகிய மண்டலத்திலும், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலத்திலும், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலத்திலும் தலா ஒரு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க சென்னை மாநகரில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
  • இதனால் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இந்திய அணி முதல் முறையாக நம்பர் 1 அந்தஸ்தை பறிகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • 2016-17ல் இந்தியா 12 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி, ஒரே ஒரு தோல்வியை சந்தித்திருந்தது. விதிமுறைகளின்படி இந்த சிறப்பான செயல்பாடு தற்போதைய தரவரிசைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாததால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
  • எனினும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

கரோனா 'போா் வீரா்களுக்கு நன்றி'

  • கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், துணை மருத்துவ பணியாளா்கள், காவல்துறையினா் உள்ளிட்டோருக்கு முப்படையினா் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நன்றி செலுத்தப்படவுள்ளது.
  • இதையொட்டி, போா் விமானங்கள் வானில் சாகசத்தில் ஈடுபடுவதுடன், மருத்துவமனைகள் மீது கடற்படை ஹெலிகாப்டா்கள் பூ மாரி பொழியவுள்ளன.

நிவாரண நிதிக்கு ரூ.306.04 கோடி - தமிழக அரசு

  • ஊரடங்கு காரணமாக மக்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.306 கோடியே 42 லட்சம் ரூபாய் 42 லட்சம் வந்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
  • இந்த நிவாரண நிதி வழங்கியுள்ள பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு சார் நிறுவனங்கள், அரசு நிறுவன ஊழியர்கள், உள்ளிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுகும் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

Share with Friends