Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 May 2020 23rd May 2020

FME

  • அகில இந்திய அளவில் அமைப்புசாரா தொழிற்துறைக்காக "நுண் உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் தொழிற் நிறுவனங்களின் உருவாக்கத்திற்கான திட்ட ம் (FME - Formalization of Micro food processing Enterprises)" என்ற மத்திய அரசினால் ஆதரிக்கப்படும் ஒரு புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • இது இலட்சிய நோக்கு மாவட்டங்களில் தற்பொழுது இருக்கும் நுண் உணவுப் பதப்படுத்தல் தொழில்முனைவோர்கள், மகளிர் தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் ஆகியோரால் வாங்கப்படும் கடன் அணுகுதலை அதிகரிக்க உதவுகின்றது.
  • இது தொகுப்பு ரீதியான ஒரு அணுகுமுறையைக் கொண்டிருக்கின்றது. இது அழுகிப் போகும் உணவுப் பொருட்கள் மீது கவனம் செலுத்த இருக்கின்றது.
  • இது 5 ஆண்டு காலத்திற்கு, அதாவது 2020-21லிருந்து 2024-25 வரையிலானகாலகட்டத்திற்குச் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
  • இது மத்திய அரசினால் ஆதரிக்கப்படும் ஒரு திட்டமாகும்.
  • இதற்கான செலவினமானது மத்திய அரசு மற்றும் மாநில அரசினால் 60 : 40 என்ற அளவில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது .

ECLGS

  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வாங்குபவர்கள் ஆகியோருக்காக அவசரகால கடன் தொடர் உறுதித் திட்ட த்திற்கு (ECLGS - Emergency Credit Line Guarantee Scheme) மத்திய அரசு தனது ஒப்புதலை வழங்கி உள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் விருப்பமுள்ள முத்ரா கடன் வாங்குபவர்கள் ஆகியோருக்கு ரூ.3 இலட்சம் கோடி அளவிலான கூடுதல் கடனிற்காக 100% கடன் உத்தரவாதமானது தேசியக் கடன் உத்தரவாத அறக்கட்டளை நிறுவனத்தினால் வழங்கப் படுகின்றது.

பிரதான் மந்திரி மத்சய சம்பாதா யோஜனா

  • இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தனது ஒப்புதலை வழங்கி உள்ளது.
  • இது நீலப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான ஒரு திட்டமாகும்.
  • இது அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு, அதாவது 2020-21 நிதியாண்டிலிருந்து 2024-25 ஆம் நிதியாண்டு வரையிலான காலத்திற்குச் செயல்படுத்தப்பட இருக்கின்றது. மத்திய மீன்வள, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால் வளத் துறை அமைச்சகமானது இதனைச் செயல்படுத்தும் அமைப்பாகும்.
  • இது மத்திய அரசுத் திட்டம் (cs - Central Sector Scheme) மற்றும் மத்திய அரசினால் ஆதரிக்கப்படும் திட்டம் (css - Centrally Sponsored scheme) ஆகிய 2 கூறுகளின் மூலம் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
  • மத்திய அரசுத் திட்டம் (Cs) - முழுத் திட்டத்திற்கான செலவும் மத்திய அரசினால் மேற்கொள்ளப்படும் (100% மத்திய அரசு நிதியுதவி).
  • css கூறானது பயனாளியைச் சாராத மற்றும் பயனாளியைச் சார்ந்த என்ற 2 துணைக் கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • இதன் கீழ், முழுத் திட்டத்திற்கான செலவினமும் மத்திய மற்றும் மாநில அரசினால் பயனாளியைச் சாராத துணைக் கூறின் அடிப்படையில் பின்வருமாறு பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
  • வட கிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள் - 90% மத்திய அரசினாலும் 10% மாநில அரசினாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
  • இதர மாநிலங்கள் - 60% மத்திய அரசினாலும் 40% மாநில அரசினாலும் பகிர்ந்து கொள்ளப் படுகின்றது.
  • ஒன்றியப் பிரதேசங்கள் (சட்டமன்றம் கொண்டுள்ளவை மற்றும் சட்டமன்றம் இல்லாதவை) - 100% நிதி மத்திய அரசினால் அளிக்கப்படுகின்றது.

உலக ஆமைகள் தினம் (May 23)

  • 1990ஆம் ஆண்டு அமெரிக்க ஆமை மீட்புக் குழுவை சூசன் டெல்லம் மற்றும் மாஷல் தாம்ப்ஸன் என்னும் தம்பதியினர் தோற்றுவித்தனர்.
  • விலங்குகளின் மீது ஆர்வம் கொண்ட இந்த தம்பதியினர் 2000ஆம் ஆண்டிலிருந்து ஆமை தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் இந்தப் பிராணியை அழிவிலிருந்து மீட்கும் பொருட்டு விழிப்புணர்வு உண்டாக்குவதைப் பணியாகக் கொண்டுள்ளார்கள். 1972ம் ஆண்டு வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் படி அழிந்து கொண்டிருக்கும் இனமாக அறிவிக்கப்பட்டது. மாணவர் கடலாமை பாதுகாப்பு கூட்டமைப்பு என்பது 1971ம் ஆண்டு ரோமுலஸ் வித்தேகர் மற்றும் வள்ளியப்பனால் தொடங்கப்பட்டது. ஆமைகள் மிகப் பழங்கால உயிரினமாகும்.இவை சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. சிறப்பு அமைப்பு கொண்ட ஒரு கவசத்தால் ஆன ஓட்டினால் இதன் உடல் மூடப்பட்டுள்ளது. இந்த ஆமை இனம் தற்போது விரைவாக அழிந்து வருகிறது. அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

அகாப்பே சித்திர மாக்னா

  • இது கோவிட் - 19 நோய்த் தொற்று கண்டறிதலின்போது பயன்படுத்தப்படும் காந்த நானோ துகளை அடிப்படையாகக் கொண்ட ஆர்என்ஏ பிரிப்பு உபகரணமாகும்.
  • இது கொச்சினில் உள்ள அகாப்பே நோய் கண்டறிதல் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தினால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இந்த உபகரணமானது சார்ஸ் - cov2 நோய்த் தொற்றினைக் கண்டறிவதற்காக ஆர்டி-எல்ஏஎம்பி, ஆர்டி-க்யூபிசிஆர், ஆர்டி-பிசிஆர், இதர வெப்பமானிகள், பிசிஆர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நெறிமுறைகளுக்கு ஆர்என்ஏ பிரிப்பிற்காக வேண்டி பயன்படுத்த முடியும்.
Share with Friends