உலக வங்கி
- சமூக பாதுகாப்பு திட்டத்துக்கு கடன் வழங்க இருப்பதாக அறிவிப்பு : உலக வங்கி
- ‘சமூக பாதுகாப்பு திட்டத்துக்காக இந்தியாவுக்கு 100 கோடி டாலர் (சுமார் ரூ.7,566 கோடி) கடன் உதவி அளிக்கப்படும்’’ என்று உலக வங்கி 15-5-2020 அன்று அறிவித்துள்ளது.
- இந்த 100 கோடி டாலரில் 55 கோடி டாலர் சர்வதேச மேம்பாட்டு சங்கம் (ஐடிஏ) மூலமாகவும், 20 கோடி டாலர் சர்வதேச மறுசீரமைப்பு வங்கி மூலமாகவும் அளிக்கப்படுகிறது.
- உலக வங்கியின் இயக்குநர்: ஜூனைத் அஹ்மத்
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல்
- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயலானது உருவாங்கியுள்ளது.
- இந்த புயலுக்கு “அம்பான்” (Amphan) என்று பெயரிடப்பட்டுள்ளது.
- சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கு 670 கிமீ தொலைவில் இந்த உம்பன் புயல் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- இந்த புயலுக்கு “அம்பான்” என பெயர் வைத்தது தாய்லாந்து என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பின் தலைமை
- ஜப்பானின் பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் உலக சுகாதார அமைப்பின் (WHO - World Health Organization) தலைமைப் பதவியை இந்தியா ஏற்க இருக்கின்றது.
- இந்தியா இப்பதவியை அடுத்த 3 ஆண்டுகளுக்கு வகிக்க இருக்கின்றது.
HOPE (Helping Out People Everywhere)
- வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் அளிக்கவும் உத்தரகண்ட் மாநில அரசு HOPE (Helping Out People Everywhere) எனும் வலைதளத்தை தொடங்கியுள்ளது.
- இந்த திட்டமானது Mukhya Mantri Swarojgar Yojana என்ற திட்டத்துடன் இணைத்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
உணவுப் பொட்டலங்கள் வழங்கும் மாநிலம்
- பொது முடக்கம் காரணமாக வேலையிழந்து தவிக்கும் தொழிலாளா்களுக்காக உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் பொது சமையலறை திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டுள்ள ‘ரொட்டி வங்கி’ மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.
- இதுபோன்ற ரொட்டி வங்கிகள் ஏற்கனவே குஜராத், பீகார் மற்றும் பஞ்சாபில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
‘சச்சேத்’ ரோந்து கப்பல்
- நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ‘சச்சேத்’ ரோந்து கப்பலை தயாரித்த நிறுவனம்
- கோவா கப்பல் கட்டும் தளதில்(GSL) உருவாக்கப்பட்ட ‘சச்சேத் (ICGS Sachet)’ ரோந்து கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் 15-05-2020 அன்று காணொலிக் காட்சி வாயிலாக நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
- மேலும், சி-450, சி-451 ஆகிய அதிவிரைவு கப்பல்களின் செயல்பாட்டையும் அவா் தொடக்கிவைத்தாா்.
- சி-450, சி-451 அதிவிரைவு கப்பல்கள் குஜராத்தின் ஹஜீரா பகுதியில் உள்ள எல் அண்டு டி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டன.
- ரோந்து கப்பலானது காணொலிக் காட்சி வாயிலாக நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா இல்லாத முதல் நாடு
- ஐரோப்பா கண்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத முதல் நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஐரோப்பாவின் ஸ்லோவெனியா நாடு, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டதாக அறிவித்துள்ளது.
சிக்கிம் இந்தியாவுடன் இணைந்த தினம்
- சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலமாகும்.
- தனி நாடாக விளங்கிய சிக்கிம் 1975ம் ஆண்டு மே 16ம் தேதி மக்கள் வாக்கெடுப்பின் மூலமாக இந்தியாவின் 22வது மாநிலமாக இணைந்தது.
- சிக்கிமின் தலைநகர் கேங்டாக் ஆகும். நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி ஆகும்.
தற்சார்பு மீதான பிரதமரின் அறிவிப்புகள்
- இந்தியப் பிரதமர் 21 ஆம் நூற்றாண்டில் உலகத்தை வழி நடத்தவிருக்கும் தற்சார்பு இந்தியாவின் 5 தூண்களை அறிவித்துள்ளார். பொருளாதாரமானது கூடுதல் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய ஒரு வளர்ச்சியையும் கொண்டு வர இருக்கின்றது.
- கட்டமைப்பு வளர்ச்சியானது நவீன இந்தியாவின் அடையாளமாக இருக்கின்றது.
- அடிப்படை அமைப்பானது கடந்த நூற்றாண்டின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதோடு மட்டுமல்லாமல், 21 ஆம் நூற்றாண்டின் கனவுகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாகவும் தொழில்நுட்பத்தால் செயல்படக் கூடியதாகவும் உள்ளது.
- இந்தியாவின் மக்கள் தொகையானது நமது வலிமையாகவும் தற்சார்பு இந்தியாவிற்கான ஒரு ஆற்றல் மூலாதாரமாகவும் இருக்கின்றது.
- தேவை : விநியோகச் சங்கிலி மற்றும் அதற்கான தேவையானது பொருளாதாரத்தை வளர்ச்சி பெறச் செய்ய இருக்கின்றது.
- இது அதன் முழுத் திறனையும் அடைவதற்கான வலிமையை வழங்க இருக்கின்றது.
பார்வையாளர் நாடாக தைவான்
- அமெரிக்க செனட் சபையானது உலக சுகாதார அமைப்பில் (WHO -World Health Organization) தைவானைப் பார்வையாளர் நாடாக ஆக்கும் வகையில் சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
- இது தொடர்பாக, இதற்கான ஆதரவைப் பெறுவதற்காக ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், ஜப்பான், இஸ்ரேல் மற்றும் கொரியக் குடியரசு ஆகிய நாடுகளுக்கிடையே ஒரு மாநாடு நடத்தப் பட்டது.இந்த மாநாட்டில் இந்தியாவும் கலந்து கொண்டது.
- தற்பொழுது தைவான் சீனக் குடியரசினால் ஆளப் படுகின்றது.
- எனினும், சீனா தனது "ஒற்றை சீனா என்ற கொள்கையின்" கீழ் தைவானை தன்னுடன் இணைக்கப்பட்ட ஒரு பகுதியாக உரிமை கோருகின்றது. மறுபுறம் தைவான் மக்கள் தனி நாடு கோருகின்றனர்.
PM CARES நிதி
- கோவிட் - 19 நோய்த் தொற்றிற்காக PM CARES நிதியிலிருந்து ரூ.3100 கோடியானது ஒதுக்கப் பட்டுள்ளது.
- இது பிரதமரால் நிர்வகிக்கப் படுகின்றது.இதன் மற்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோராவர்.
- இந்தியாவின் தலைமைக் கணக்குப் பதிவாளர் இந்த நிதியைத் தணிக்கை செய்யஅனுமதிக்கப் படுவதில்லை . தணிக்கை நோக்கத்திற்காக இந்த அறக்கட்டளை உறுப்பினர்களால் தனிச்சுதந்திர தணிக்கையாளர்கள் அதற்கு நியமிக்கப் படுகின்றனர்.
- இந்த நிதியானது நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து நன்கொடையாக வசூலிக்கப் படுகின்றது.