Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 May 2020 29th May 2020


SERS உணர்தல்

  • நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமானது மாலிப்டினம் டைசல்பைடின் கலப்புத் தன்மை கொண்ட இராமன் நிறப்பிரிகை (Mos2, ஒரு கனிமப் பொருள்) என்ற தங்க நானோ துகள்களுடன் மேற்பரப்பு - மேம்படுத்தப்பட்ட அலங்கரிக்கப்பட்ட ஒரு நானோ அமைப்பை உருவாக்கியுள்ளது (SERS - SurfaceEnhanced Raman Spectroscopy).
  • SERS என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு உணர்திறன் நுட்பமாகும்.
  • இதில் மூலக்கூறுகள் வெள்ளி (அ) தங்க நானோ துகள்கள் போன்ற நெளி உலோக மேற்பரப்புகளில் உறிஞ்சப்படும் போது அவை நெகிழ்வற்ற ஒளிச்சிதறலால் பெரிதும் மேம்படுகின்றன.
  • SERS கண்டறிதலானது அதன் மிக அதிக உணர்திறன் மற்றும் கைரேகை அங்கீகாரத் திறன் ஆகியவற்றின் காரணமாக பல்வேறுப் பகுப்பாய்வின் கண்டறிதலுக்காக வளர்ந்து வரும் மிக வலிமை வாய்ந்த ஒரு கூறாக விளங்குகின்றது.

விரைவான நிலையற்ற நீல ஒளியியல் (FBOT)

  • ரேடியோ அலைநீளங்களில் வேகமாகவும் பிரகாசமாகவும் கனமாகவும் இருக்கும் ஒரு புதிய வானியல் நிலையற்ற நிலையானது கண்டறியப் பட்டுள்ளது.
  • அமெரிக்காவின் வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான குழுவானது இதனை எக்ஸ் கதிர் மற்றும் ரேடியோ அலைநீளங்களில் சேகரிக்கப்பட்ட மூன்றாவது வரைவான நிலையற்ற நீல ஒளியியல் (FBOT - Fast blue optical transient) என்று தீர்மானித்துள்ளது.
  • பூமியிலிருந்து 500 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு சிறிய விண்மீன் தொகுதியில் வானியல் அறிஞர்களால் 2016 ஆம் ஆண்டில் கண்ணிற்குப் புலப்பட்ட ஒரு பிரகாசமான வெடிப்பினைக் கண்டறிந்த நிகழ்விற்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது.
  • மிகவும் புகழ்பெற்ற FBOT என்பது A72018cow (The cow) - நியூட்ரான் நட்சத்திரம் அல்லது கருந்துளையின் உருவாக்கம் எனத் தோன்றிய ஒரு அரிய நிகழ்வு ஆகும்.

ஆர்டி-விளக்கை அடிப்படையாகக் கொண்ட சோதனை

  • அறிவியல் மற்றும் தொழில்துறை மையத்தின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான இந்திய நிறுவனம் (CSIR- IIIM/Council of Scientific & Industrial Research - Indian Institute of Integrative Medicine) மற்றும் ரிலையன்ஸ் தொழிற்துறை நிறுவனம் ஆகியவை இணைந்து கொரானா வைரஸ் நோய்த் தொற்றிற்காக இந்தச் சோதனையை உருவாக்கியுள்ளன.
  • ஆர்டி-விளக்குச் சோதனை என்பது தலைகீழ் டிரான்ஸ்கிரிப்டேஸ்-வளையத்தை மையமாகக் கொண்டுள்ள மத்திய சமவெப்பப் பெருக்கம் என்பதைக் குறிக்கின்றது.
  • உட்கரு அமிலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தச் சோதனையானது நோயாளிகளின் நாசி மற்றும் தொண்டைச் சளி மாதிரியிலிருந்து மேற்கொள்ளப் படுகின்றது.
  • தற்பொழுது கோவிட் - 19 சோதனையானது நிகழ்நேர - பிசிஆர் மூலம் மேற்கொள்ளப் படுகின்றது.
  • இதன் உபகரணங்கள் அயல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் படுகின்றன.
  • மேலும் இது அதிக செலவு மிக்கதாகவும், அதிக மனித சக்தி தேவைப்படுவதாகவும் உள்ளது. மறுபுறம், ஆர்டி-விளக்குச் சோதனையானது குறைந்தபட்ச நிபுணத்துவத்துடன் அடிப்படை ஆய்வக அறிவுடன் ஒற்றைக் குழாயைக் கொண்டு மேற்கொள்ளப் படுகின்றது.

மேக வரைபடம்

  • கனடா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தைச் சேர்ந்த வானியல் துறை வல்லுநர்கள் ஒரு மேக வரைபடத்தை உருவாக்கியுள்ளனர்.
  • இது வியாழன் கோளைப் போன்று இருக்கும் வெப்பமான வெளிக்கோள்களில் எந்த வகையான மேகம் இருக்கும் என்பதைக் கணிக்க உதவ இருக்கின்றது.

FSDC

  • சமீபத்தில் மத்திய அரசானது டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீது அதிகரிக்கப்பட்டு வரும் கவனத்தைக் கருத்தில் கொண்டு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளரை நிதியியல் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆணையம் (FSDC - Financial Stability and Development Council) என்ற அமைப்பிற்குள் கொண்டு வந்துள்ளது.
  • FSDC ஆனது 2010 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டதாகும்.
  • இது மத்திய நிதி அமைச்சரால் தலைமை தாங்கப் படுகின்றது.
  • இதன் உறுப்பினர்கள் பின்வருமாறு
  • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
  • நிதித்துறை செயலாளர் மத்தியப் பொருளாதார விவகாரங்கள் துறை
  • செயலாளர், நிதியியல் சேவைகள் துறை 0 தலைமைப் பொருளாதார ஆலோசகர், மத்திய நிதி அமைச்சகம்
  • இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவர்.

சம்பா சுரங்கப் பாதை

  • இது உத்தரகாண்டின் ரிஷிகேஷ்-தாராசு ரோடு தேசிய நெடுஞ்சாலையில் மிக அதிக மக்கள் தொகை பரவல் கொண்ட சம்பா நகரத்தின் கீழ், எல்லைச் சாலைகள் அமைப்பினால் (BRO - the Border Roads Organisation) அமைக்கப்பட்ட 440 மீட்டர் நீளம் கொண்ட ஒரு சுரங்கப் பாதையாகும்.
  • இந்த சுரங்கப் பாதையானது மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள BROவினால் அமைக்கப் பட்டுள்ளது.
  • இது சார்தாம் பரியோஜனா என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி ஆகிய இந்து சமய புனிதத் தளங்களை இணைக்கும் வகையில் 900 கிலோ மீட்டர் தொலைவுள்ள நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் மற்றும் அகலப்படுத்தும் ஒரு முயற்சியாகும்.
  • இந்தத் திட்டமானது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தினால் மேற்கொள்ளப் படுகின்றது.

ஜம்மு காஷ்மீருக்கான சட்டப்படியான வாழ்வகம் குறித்த விதிகள்

  • மத்திய உள்துறை அமைச்சகமானது 2010 ஆம் ஆண்டின் சட்டமான “ஜம்மு காஷ்மீர் குடிமைப் பணிகள்" (அதிகாரப் பரவலாக்கம் மற்றும் ஆள்சேர்ப்புச் சட்டம்) என்ற ஒரு சட்டத்தைத் திருத்தியுள்ளது.
  • இது “நிரந்தக் குடியிருப்பாளர்கள்" என்ற கூற்றுக்கு மாற்றாக அதனை "ஜம்மு காஷ்மீர் ஒன்றியத்தின் சட்டப்படியான வாழ்வகம்" என்பதைக் கொண்டு மாற்றியுள்ளது.
  • இது ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (மாநில சட்டங்களை ஏற்றுக் கொள்ளுதல்) ஆணை, 2020-ன் மூலமாக சட்டப்படியான வாழ்வகத்தை மறுவரையறை செய்கின்றது.
  • 2010 ஆம் ஆண்டின் சட்டமானது “மாவட்ட, கோட்ட மற்றும் மாநில" அளவிலான பதவிகளைக் கொண்டுள்ள குடிமைப் பணிகளை அவர்களுக்கு உரித்தாக அறிவித்தது.
  • இதற்கு முன்பு, ஜம்மு காஷ்மீரின் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் மட்டுமே அரசிதழ் பதிவு பெற்ற மற்றும் அரசிதழ் பதிவு பெறாத பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.
  • "சட்டப்படியான வாழ்வகம்" என்ற சான்றிதழை வழங்குவதற்கான அதிகாரமானது.தாசில்தாரிடம் (வருவாய் அதிகாரி) உள்ளது.
  • சட்டப்படியான வாழ்வகம் பற்றி :
    • சட்டப்படியான வாழ்வகம் - ஒரு நபர் தனது நிரந்தர வாழ்விடமாக ஒரு நாட்டை குறிப்பதைக் குறிக்கின்றது.
  • இது ஒருவர் தனது நிரந்தர இல்லத்தை ஒரு இடத்தில் ஏற்படுத்துவதைக் குறிக்கின்றது.
  • அங்கு அவர் நிரந்தரக் குடியிருப்பாளராகக் கருதப்படுகின்றார்.
  • ஒருவரின் சட்டப்படியான வாழ்வகத்திற்கு ஒரு உதாரணம் ஒருவர் வசிக்கும் சொந்த மாநிலமாகும்.
Share with Friends