சிலப்பதிகாரப் பூங்கா
- கண்ணகி, கடச்சனேந்தலில்(கடை சிலம்பு ஏந்தல்) இருந்து மதுரைக்கு நடந்து சென்றதாக சிலப்பதிகாரம் குறிப்பிடும் இடமான தற்போது உள்ள மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் சிலப்பதிகாரப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
- சிலப்பதிகாரப் பூங்கா ஜூன்-1 அன்று திறக்கப்பட உள்ளது.
வங்கி தோழி (BC Sakhi Yojana) திட்டம்
- கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், வங்கிகளில் நிலவும் நெரிசலை குறைக்கவும் உத்தரபிரதேச அரசு ரூ.480 கோடி மதிப்பில் வங்கி தோழி என்ற திட்டத்தை துவங்கியுள்ளது.
- வங்கித்தோழி என்ற இந்த புதிய பணியில் 58 ஆயிரம் பெண்கள் நியமிக்கப்பட உள்ளனர், மேலும் இவர்களுக்கு மாதம் 4000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட உள்ளது.
புதிய பொதுத் துறை தனியார்மயமாக்கல் கொள்கை
- புதிய பொதுத் துறைக் கொள்கையானது பொதுத் துறைகளை மூலோபாய மற்றும் மூலோபாயமற்றவை என வகைப்படுத்தும்.
- மூலோபாயத் துறைகளில் உள்ள மத்தியப் பொதுத் துறை நிறுவனங்களில் அதிகபட்சம் நான்கு மற்றும் குறைந்தபட்சம் ஒன்று என்ற அளவில் அரசாங்கம் அதைத் தக்க வைத்துக் கொள்ளும்.
- மூலோபாயமற்ற துறைகளில் உள்ள மற்ற அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும் ஒன்று தனியார்மயமாக்கப் படும் அல்லது ஒன்றிணைக்கப்படும் அல்லது அதனை வைத்திருக்கும் தலைமை நிறுவனங்களின் கீழ் அவை கொண்டு வரப்படும்.
- இது மத்திய அரசின் நிர்வாகச் செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- இந்தியாவில் மூலோபாயத் துறை பொதுத் துறை நிறுவனங்கள் பின்வருமாறு
- பாதுகாப்பு உபகரணங்களுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள்
- பாதுகாப்பு விமானம் மற்றும் போர்க் கப்பல்கள்
- அணு ஆற்றல்
- விவசாயம், மருத்துவம் மற்றும் மூலோபாயமற்றத் தொழில்துறைக்கு வேண்டிய கதிர்வீச்சின் பயன்பாடுகள்
- இரயில் துறை
- மத்திய அரசின் 51% பங்குகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் பொதுத் துறை நிறுவனங்களாக அறியப் படுகின்றன.
- தனியார்மயமாக்கல் என்பது உரிமை, மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டை மாற்றுவதின் மூலம், அந்தத் துறைகளைப் பொதுத் துறையிடமிருந்து தனியார் துறைக்கு மாற்றுவதாகும்.
பால்டிக் பயணக் குமிழி
- உள்நாட்டில் கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் நல்ல அளவிலான வெற்றியைக் காட்டிய நாடுகள் அல்லது பிராந்தியங்களை மீண்டும் இணைப்பதை இந்த பயணக் குமிழியை உருவாக்குதல் என்ற திட்டம் உள்ளடக்குகிறது.
- அத்தகைய ஒரு குமிழி ஒரு குழுவின் உறுப்பு நாடுகள் ஒருவருக்கொருவர் வர்த்தக உறவுகளை மறுதொடக்கம் செய்யவும் பயணம் மற்றும் சுற்றுலாவை திறந்து விடவும் அனுமதிக்கும்.
- பால்டிக் நாடுகள் தங்கள் எல்லைகளை ஒருவருக்கொருவர் திறந்து அவ்வகையான ஒரு “பயணக் குமிழியை" உருவாக்க உள்ளன.
- பால்டிக் நாடுகள் என்பவை வடக்கு ஐரோப்பாவிலும் பால்டிக் கடலின் கிழக்கு கடற்கரையிலும் உள்ள நாடுகளாகும்.
- எஸ்தோனியா, லித்துவேனியா மற்றும் லாட்வியா ஆகியவை பால்டிக் நாடுகளாக குறிப்பிடப் படுகின்றன.
- ரஷ்யா, சுவீடன், டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, லாட்வியா, ஜெர்மனி, போலந்து, லித்துவேனியா ஆகியவை பால்டிக் கடலை எல்லையாகக் கொண்ட நாடுகளாகும்.
இஸ்ரேல் பிரதமர்
- இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்திற்கு இஸ்ரேல் பாராளுமன்றமான நெசெட்டில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப் பட்டது.
- இது நெதன்யாகுவின் ஐந்தாவது பதவிக் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
- மேலும் இது அவரது தொடர்ச்சியான நான்காவது ஆட்சிக் காலமாகும்.
- நெதன்யாகு பதவியேற்ற பின்னர் பென்னி காண்ட்ஸ் மாற்றுப் பிரதமராகவும் எதிர்காலப் பிரதமராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
பாதுகாப்புச் சோதனை உள்கட்டமைப்புத் திட்டம்
- பாதுகாப்புச் சோதனை உள்கட்டமைப்புத் திட்டத்தைத் தொடங்க மத்திய அரசானது ஒப்புதல் அளித்துள்ளது.
- இது உள்நாட்டுப் பாதுகாப்பு உபகரணம் மற்றும் விண்வெளி உபகரணம் ஆகியவற்றின் உற்பத்திக்கு ஊக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள திட்டங்களுக்கு 75% வரை அரசு நிதி உதவியின் நோக்கில் வழங்கப் படும்.
- மீதமுள்ள 25% திட்ட செலவைச் சிறப்பு நோக்குக் குழுவைக் கொண்ட நிறுவனம் ஏற்க வேண்டும்.
- அதன் பங்குதாரர்கள் இந்தியத் தனியார் நிறுவனங்கள் மற்றும்மாநில அரசுகளாக இருக்க வேண்டும்.
- ஒரு சிறப்பு நோக்குக் குழு என்பது நன்கு வரையறுக்கப்பட்ட, ஒரே மற்றும் குறுகிய நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு சட்ட நிறுவனமாகும்.
- மத்திய அரசு 2019 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தில் பாதுகாப்புத் தொழில்துறைப் பெருவழிப் பாதைகளை அமைத்துள்ளது.
- லக்னோ , கான்பூர், ஆக்ரா, அலிகார், சித்திரகூட் மற்றும் ஜான்சி ஆகியவை உத்தரப்பிரதேசத்தின் பாதுகாப்புத் தொழில்துறைப் பெருவழிப் பாதைகளுள் அடங்கும்.
- தமிழகத்தின் பாதுகாப்புத் தொழில்துறைப் பெருவழிப் பாதைகளுள் சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியவை அடங்கும்.
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா
- 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்ட மூத்தக் குடிமக்களின் நலனுக்காகவும் முதியோர்களின் வருமான உத்தரவாதத்திற்கான பாதுகாப்பைச் செயல்படுத்தவும் பயன்படும் ஒரு பிரத்தியேகமான ஓய்வூதியத் திட்டமாகும்.
- பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் ஒருவர் அதிகபட்சமாக ரூபாய் 15 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம்.
- இதன் காலவரையறை 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
- இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு இந்த திட்டத்தை இயக்குவதற்கான சிறப்புரிமை வழங்கப் பட்டுள்ளது.
சிண்டெமிக்
- கோவிட் -19 தொற்று நோயை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு (எப்பொழுதும் உள்ள நோயாக மாறக் கூடும் - என்டெமிக்) என்று உலக சுகாதார அமைப்பானது அறிவித்துள்ளது.
- நோய்களின் அதிகரித்த சுமையை உலகம் எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளதால் சிண்டெமிக் (கூட்டுநோய்) என்ற நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
- சிண்டெமிக் (கூட்டுநோய்) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொற்றுநோய்கள் ஒரு மக்கள்தொகையின் மீது அந்த நோய்களின் அதிகரித்தச் சுமையை உருவாக்க ஒருங்கிணைந்த முறையில் இணைந்து கொள்ளும் ஒரு சூழ்நிலை ஆகும்.
ஃபெரல் குதிரை (Feral horse)
- அசாமில் உள்ள திப்ரு-சைகோவா தேசியப் பூங்காவினுள் நிலத்திற்கடியில் இந்திய எண்ணெய் (ஆயில் இந்தியா) நிறுவனமானது நீர்மக் கரிமங்களை (ஹைட்ரோகார்பன்) துளையிட்டு எடுத்து சோதனைச் செய்வதை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான ஒரு முக்கிய சுற்றுச்சூழல் அனுமதியை சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்துப் பெற்றுள்ளது.
- ஃபெரல் குதிரைகளுக்கு மூல ஆதாரமாக விளங்கும் இந்தியாவின் ஒரே பகுதி இந்தப் பூங்காவாகும்.
- ஃபெரல் குதிரை என்பது உண்மையான ஒரு காட்டுக் குதிரை அல்ல.
- தற்போது இருக்கும் ஒரே உண்மையான காட்டுக் குதிரையானது மத்திய ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரெஸ்வால்ஸ்கியின் குதிரை (Przewalski's horse) மட்டுமே ஆகும்.
- ஆஸ்திரேலியா மட்டுமே உலகில் ஃபெரல் குதிரைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டு உள்ளது.
மீ அன்னபூர்ணா திட்டம்
- மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சமூகத்தின் நலனுக்காக இத்திட்டம் Integrated Risk Insurance என்ற காப்பீடு இடைத்தரகர் நிறுவனத்தினால் துவங்கப்பட்டுள்ளது.