PM - KISAN திட்டம்
- மத்திய வேளாண் துறை அமைச்சகமானது PM - கிசான் திட்டத்தின் கீழ் ரூ.18,517 கோடியைப் பயனாளிகளுக்கு விடுவித்துள்ளது.
- இந்த நிதியானது பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன் யோஜனா என்பதின் ஒரு பகுதியாக விடுவிக்கப் பட்டுள்ளது.
- பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவானது 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று தொடங்கப் பட்டது.
- இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் ஒரு ஆண்டில் 3 தவணைகளில் ரூ.6000 என்ற நிதியுதவியானது அளிக்கப்படுகின்றது.
உலகளாவிய வன வளங்கள் குறித்த ஆய்வு - 2020
- இது ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் வெளியிடப்படுகின்றது.
- இது 1990 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 236 நாடுகள் மற்றும் நிலப் பிரதேசங்களில் உள்ள வனங்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்துள்ளது.
- உலகமானது 1990 ஆம் ஆண்டு முதல் 178 மில்லியன் ஹெக்டேர் பரப்பிலான வனத்தை இழந்துள்ளது. இது லிபியாவின் நிலப்பகுதிக்குச் சமமானதாகும்.
- ஆப்பிரிக்கக் கண்டமானது 2010-2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நிகர வன இழப்பில் ஒரு மிகப்பெரிய வருடாந்திர இழப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்து தென் அமெரிக்கா உள்ளது.
- மறுபுறம், 2010-2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நிகர வனப்பகுதி அதிகரிப்பை ஆசியா கொண்டுள்ளது. இதற்கு அடுத்து ஓசியானியா மற்றும் ஐரோப்பா உள்ளன. உலகின் மொத்த வனப் பகுதி 4.06 பில்லியன் ஹெக்டேராகும்.
- இது மொத்த நிலப்பரப்பில் 31 சதவீதமாகும். உலக வனங்களின் மிகப்பெரிய விகிதமானது வெப்ப மண்டல (45%) காடுகளாக உள்ளது.
- இதற்கு அடுத்து வடதுருவக் காடுகள், மித வெப்ப மண்டலக் காடுகள், மற்றும் உப வெப்ப மண்டலக் காடுகள் உள்ளன.
- மொத்த அளவில் 54%ற்கு மேற்பட்ட உலகக் காடுகளானது ரஷ்யக் கூட்டமைப்பு, பிரேசில், கனடா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 5 நாடுகளில் மட்டுமே காணப் படுகின்றது.
- விகிதாச்சார அடிப்படையில் அதிக அளவிலான தோட்டக் காடுகள் தென் அமெரிக்காவில் உள்ளன. அதே சமயம் இது ஐரோப்பாவில் குறைவாக உள்ளது.
அரிசியின் நேரடி விதைப்பு
- தொழிலாளிகளின் பற்றாக்குறை காரணமாக "அரிசியின் நேரடி விதைப்பை" ஏற்றுக் கொள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் ஊக்கப்படுத்தப் பட்டு வருகின்றனர்.
- இந்த முறையில், எந்தவொரு நாற்றுப் பண்ணை ஏற்பாடும் செய்யப் படுவதில்லை .
- அதற்கு மாற்றாக, விதைகள் சக்தி வாய்ந்த இழுவை இயந்திரத்தின் உதவியுடன் நிலப் பகுதியில் நேரடியாக விதைக்கப் படுகின்றன. இது 25% வரை நீரைச் சேமிக்க உதவுகின்றது.
- இது உரங்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தித் திறனை ஊக்குவிக்கின்றது.
- இதன்மூலம் மண் வளத்திற்கு குறைந்தபட்ச அளவிலான இடர் மட்டுமே ஏற்படுகின்றது.
சர்வதேச அருங்காட்சியக தினம்
- 1978ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே 18 சர்வதேச அருங்காட்சியக தினமாக கொண்டாடப்படுகிறது.
- அருங்காட்சியகங்கள் கல்வி வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகிக்கின்றன.
- உலகளவில் சர்வதேச அருங்காட்சியக ஆலோசனை சபை என்கிற அமைப்பு இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது.
- இந்த அமைப்புடன் உலகில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் தொடர்பு வைத்துள்ளன.
- அமெரிக்காவில் அட்லாண்டாவில் உள்ள “தி கிங் சென்டர்’ என்ற மியூசியம், உலகில் உள்ள மியூசியங்களிலேயே தலைசிறந்த மியூசியமாக கருதப்படுகிறது.
- 2019 Theme: Museums as Cultural Hubs: The Future of Tradition.
சட்டமேலவை உறுப்பினராகப் பதவியேற்பு - உத்தவ் தாக்கரே
- மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சட்டமேலவை உறுப்பினராக இன்று (திங்கள்கிழமை) பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
- மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 9 சட்டமேலவை உறுப்பினர் இடங்கள் காலியாக இருந்தன.
- இதற்கான தேர்தல் மே 14-ஆம் தேதி நடைபெற்றது.
- இதில் 9 இடங்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உள்பட சரியாக 9 பேர் மட்டுமே போட்டியிட்டதால், போட்டியிட்ட அனைவரும் போட்டியின்றித் தேர்வாகினர்.
- இந்த நிலையில், மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார் உத்தவ் தாக்கரே.
- அப்போது சட்டமேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரே பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.
- இதையடுத்து, ஆளுநர் பகத் சிங் கோஷியாரி உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தில்லியில் 20 பயணிகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி - அரவிந்த் கேஜரிவால்
- புது தில்லியில் 20 பயணிகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
- தில்லியில் இன்றைய நிலவரப்படி கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,054 பேராகும்.
- இவர்களில் 4485 பேர் குணமடைந்துள்ளனர். 160 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
- புது தில்லியில் ஊரடங்கு காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று அறிவித்தார்.
- அதில், தில்லியில் 20 பயணிகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
- பேருந்துக்குள் ஏறும் முன்பு பயணிகளுக்கு உடல்வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
- சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றப்படும்.
- தில்லியில் கட்டுமானப் பணிகளைத் தொடர அனுமதி அளிக்கப்படுகிறது.
- தற்போது தில்லியில் இருக்கும் தொழிலாளர்களைக் கொண்டு மட்டுமே பணிகள் நடைபெற வேண்டும்.
- தனியார் நிறுவனங்கள் முழு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
- அதே சமயம், பெரும்பாலான தொழிலாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும். சந்தைகள் திறந்திருக்கும்.
- ஆனால், கடைகளுக்கு வழங்கப்பட்ட எண்ணை அடிப்படையாக வைத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் கடைகள் திறக்கப்படும்.
- விளையாட்டரங்குகள் திறக்கப்படும். பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.