Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 May 2020 20th May 2020

உலக தேனீக்கள் தினம்.

  • சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்பதற்குப் பெரியவர்கள் அடிக்கடி சொல்லும் உதாரணம், 'தேனீ மாதிரி உழைக்கணும்' என்பதாகவே இருக்கும்.
  • பூக்களில் இருந்து தேனீக்கள் சேகரித்து , தேனடை மூலமாகக் கொடுப்பது 'தேன் '.
  • உலகின் மிகச் சிறந்த இயற்கை மருத்துவப் பொருளாகக் கருதப்படுகிறது.
  • தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு முக்கியப் பங்கு ஆற்றுபவை தேனீக்கள்.
  • உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது போன்ற பணிகளை வேலைக்காரத் தேனீக்கள் செய்கின்றன.
  • தேன் கூட்டைப் பராமரிப்பது இதர ஆண் தேனீக்களின் வேலை.
  • 'அயல் மகரந்தச் சேர்க்கை' எனும் நிகழ்வு நடைபெற்று, நிறைய வனப்பரப்பு உருவாகிறது.
  • அந்த வகையில் தேனீக்களை பசுமைப் போராளிகள் எனலாம்.

சசேத் கப்பல்

  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இந்தியக் கடலோரக் காவற் படைக் கப்பலான சசேத் என்ற கப்பலையும் சி-451 மற்றும் சி-450 என்ற 2 இடைமறிப்புப் படகுகளையும் கோவாவில் பாதுகாப்புப் படையின் பணியில் இணைத்துள்ளார்.
  • சசேத் கப்பல் ஆனது 5 கடலோரக் காவல் கண்காணிப்புக் கப்பல் தொகுதிகளின் முதலாவது கப்பலாகும்.
  • இது கோவா கப்பல் கட்டும் தளத்தினால் உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப் பட்டுள்ளது.

உட்செலுத்தக் கூடிய பட்டு-பட்டிழைப் புரதத்தை அடிப்படையாகக் கொண்ட ஹைட்ரோ கூழ்மம் (ஹைட்ரோ ஜெல்)

  • மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையமானது (JNCASR - Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research) நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலினை உட்செலுத்தக் கூடிய பட்டு-பட்டிழை புரதத்தை அடிப்படையாகக் கொண்ட ஹைட்ரோ ஜெல்லை (silk-fibroin based hydrogel) உருவாக்கியுள்ளது.
  • இது உயிரி-ஒத்த சேர்க்கைகளை (biocompatible additives) பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது நீண்ட காலத்திற்கு இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கின்றது.
  • பட்டிழைப் புரதம் என்பது நீரில் கரையாத ஒரு புரதமாகும்.
  • பட்டிழைப் புரதமானது பட்டுப் புழுவினால் உருவாக்கப் படுகின்றது.
  • பட்டு தனது மூல நிலையில் செரிசின் மற்றும் பிப்ரியான் ஆகிய 2 புரதங்களைக் கொண்டுள்ளது.

GOAL திட்டம்

  • மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சரான அர்ஜுன் முண்டா என்பவர் முகநூல் நிறுவனத்துடன் இணைந்து "GOAL" என்ற ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளார்.
  • GOAL திட்டம் என்பது "தலைவர்களாக நிகழ்நேரத்திற்கு மாறுதல்" என்பதாகும்.
  • இந்தத் திட்டமானது டிஜிட்டல் முறையில் பழங்குடியின இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் ஊதியக் குறைப்பு

  • சமீபத்தில் இந்தியக் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் கோவிட் - 19ற்கு எதிரான நடவடிக்கையில் இந்திய அரசிற்கு உதவுவதற்காக தனது ஊதியத்தில் 30% வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
  • 2018 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையானது நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவரின் ஊதியங்களை உயர்த்தியுள்ளது.
  • தற்பொழுது, இந்தியக் குடியரசுத் தலைவரின் மாதாந்திர ஊதியமானது முந்தைய 1.5 இலட்சத்திலிருந்து 5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மேலும், துணைக் குடியரசுத் தலைவரின் ஊதியமானது 1.10 இலட்சத்திலிருந்து 4 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மாநில ஆளுநரின் ஊதியமானது 3.5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • குடியரசுத் தலைவரின் பதவிக் காலத்தின் போது அவரின் ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளைக் குறைக்கக் கூடாது என்று சரத்து 59 கூறுகின்றது.
  • ஆனால் இந்த சூழ்நிலையில், குடியரசுத் தலைவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் இந்தத் தொகையை நன்கொடையாக வழங்குகின்றார்.
  • அவரது ஊதியத்தின் மீது அத்தொகை பிடித்தம் செய்யப்படவில்லை.
  • இதே சரத்தானது குடியரசுத் தலைவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை வாடகைக் கட்டணம் எதுவுமின்றிப் பயன்படுத்தவும் அனுமதிக்கின்றது.

உலக அளவியல்(Metrology) தினம்

  • நாம் இவ்வுலகில் காணக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய அனைத்துமே நிறை, மீட்டர், அடி, கொள்ளளவு என்று சர்வதேச அளவியலை சார்ந்து உள்ளன.
  • முதன் முதலாக 1875ம் ஆண்டு 17 நாடுகள் ஒன்று சேர்ந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே அளவினை பயன்படுத்த சர்வதேச அளவியலை உருவாக்கினர்.
  • இதன் மூலமாக வேகமாக வளர்ந்து வரும் வணிக யுகத்தில் மூலப் பொருட்களை சார்ந்து வெவ்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஓரிடத்தில் ஒன்றிணைக்க சர்வதேச அளவியல் பயன்படுகிறது.
  • மேலும் இயந்திரங்கள், மருத்துவத்துறை, விண்வெளி மற்றும் அறிவியல் துறை ஆகியவற்றில் தயாரிக்கப்படும் சாதனங்களை துல்லியமாக அளவிட ஒளியினைக் கொண்டு அளவிடும் ஒளியியல் தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • அளவியலின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே-20ல் உலக அளவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
  • 2019 Theme: The International System of Units – Fundamentally better.

Share with Friends