Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 May 2020 10th May 2020


உலக வலசை போதல் தினம்

  • உலக வலசை போதல் தினம் மே 10ம் நாள் கொண்டாடப்படுகிறது.
  • வலசை போதல் (Animal migration) என்பது பல இனங்களைச் சேர்ந்த பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை ஒட்டி புலம் பெயருவதைக் குறிக்கும்.
  • எல்லா விலங்குகளும் பறவைகளும் வெப்பநிலை வேறுபாட்டை உள்ளூர உணர்கின்றன.
  • பறவைகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக வலசை போகின்றன.
  • வலசை போகும் பறவைகள் பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து தாங்கள் சேருமிடத்தைக் கண்டறிகின்றன.
  • வலசை போகும் பறவைகளைப் பாதுகாப்பது, அதன் இருப்பிடத்தைப் பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த 2006ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஈரானின் புதிய நாணயம்

  • ஈரான் தனது நாணயத்தை மறு பெயரிட்டு மறு மதிப்பிட முடிவு செய்துள்ளது.
  • ஈரானின் பணமானது அடுத்து "டோமன்" என்று அழைக்கப்பட இருக்கின்றது.
  • ஈரானின் தற்போதைய நாணயம் “ரியால்" என்று அழைக்கப்படுகின்றது.
  • தற்பொழுது 1 டோமன் ஆனது 10,000 ரியாலுக்குச் சமமாகும்.
  • இது ரியாலில் 4 சுழியங்களின் குறைப்பைக் குறிக்கின்றது.
  • ஜெக்ரான் என்பது மற்றொரு நாணய மதிப்பாகும்.
  • 100 ஜெக்ரான் சேர்ந்தது 1 டோமனாகும்.

'கைலாஷ்-மானசரோவர் யாத்ரா இணைப்பு சாலை

  • கைலாஷ்-மானசரோவர் செல்வதற்கான லிப்புலேக் கணவாயை இணைக்கும் 80 கி.மீ நீளமுள்ள இணைப்பு சாலையை காணொளி மூலம் பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
  • இந்த சாலையானது தர்ச்சூலாவில் (உத்தரகண்ட்) இருந்து லிப்புலேக் (சீனா எல்லை) வரை அமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு பிராணவாயு திட்டத்தை அறிமுகம் :

  • சுவாச ஆரோக்கியத்தை சுயமாக பரிசோதிக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பெங்களூரு பிராணவாயு திட்டத்தைஅறிமுகப்படுத்துகிறது .
  • பெங்களூரில் சிட்டி கார்ப்பரேஷனால் தொடங்கப்பட்ட பிராணவாயு திட்டம் வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டால் நிலைமையை மோசமாக்கும்.
  • எந்தவொரு நோயையும் முன்கூட்டியே கண்டறிவதற்கு சுய பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து ஊடகங்களில் விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
  • கடுமையான சுவாச நோய் அல்லது SARIகாரணமாக COVID. 19 காரணமாக பல இறப்புகள் பதிவாகியுள்ளன.
  • பிராணவாயு விழிப்புணர்வு திட்டம் என்பது அவர்களின் இரத்தத்தில் குறைந்த ஆக்ஸிஜன் அளவு உள்ளவர்களுக்கு அவர்களின் நோய்கள் அபாயகரமானதாக மாறும் முன்பே தங்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ள உதவும் ஒரு முயற்சியாகும்.

    'கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி

    • கரோனா தொற்றைக் கண்டறியக் கூடிய கருவி ஒன்றை மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் உள்நாட்டிலேயே வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
    • புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த கருவியின் மூலம் இரண்டரை மணி நேரத்தில் 90 ரத்த மாதிரிகளை சோதனை செய்து, அதன் முடிவுகளைப் பெற முடியும்.
    • இந்த சோதனை முடிவுகளின் மூலம், அடுத்த கட்ட சிகிச்சைக்கான முடிவுகளை மருத்துவ வல்லுநா்களால் மேற்கொள்ள முடியும். கரோனா தொற்றைக் கண்டறிவதற்காக புணேயிலுள்ள தேசிய வைராலஜி நிறுவனம் முற்றிலுமாக உள்நாட்டிலேயே இந்தக் கருவியை உருவாக்கியுள்ளது.

    ஜூன் 9 வரை லாக்டவுன் நீடிப்பு - மலேசியா

    • மலேசியாவில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை எனப்படுகிற லாக்டவுன் கடந்த மார்ச் 18-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
    • தற்போதைய நிலையில் மலேசியாவில் கொரோனா தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
    • மலேசியாவில் கொரோனாவால் 4,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 108 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
    • தற்போது அமலில் உள்ள லாக்டவுன் மே 12-ந் தேதியுடன் முடிவடைகிறது.
    • இந்த நிலையில் மலேசியாவில் ஜூன் 9-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் மொஹிதீன் யாசின் அறிவித்துள்ளார்.

    'ஜூன் 1 வரை நீடிப்பு - பிரிட்டன்

    • கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரிட்டனில் ஊரடங்கை ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
    • சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திவருகிறது.
    • இந்நிலையில் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பரவியுள்ள கொரோனாவைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
    • 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன.
    • கடந்த மார்ச் 23 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
    • இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியது, பிரிட்டனில் ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.
    • ஜூலை 1முதல் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது என்றார்.
Share with Friends