ஆர்டர் ஆஃப் ரைசிங் சன் (உதய சூரியனின் ஆணை) விருது
- ஜப்பான் அரசானது மணிப்பூர் மருத்துவரான தங்ஜம் தபாலி சிங்குக்கு 'ஆர்டர் ஆஃப் ரைசிங் சன்' எனும் விருதை வழங்கியுள்ளது.
- இந்தியாவில் ஜப்பானைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்தவும் உதவிய அவருக்கு இது வழங்கப் பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது போரிடப்பட்ட இம்பால் போரின் 70வது ஆண்டு நிறைவு விழாவை சிங் ஏற்பாடு செய்திருந்தார்.
- இந்த விருதை ஜப்பானியப் பேரரசர் மீஜி 1875 ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார்.
- இது சர்வதேச உறவுகளில் சாதனைகள், ஜப்பானியக் கலாச்சாரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நலன் புரிதல் அல்லது தமது துறைகளில் சாதனைகள் புரிந்தவர் ஆகியோருக்கு வழங்கப் படுகிறது.
ஸ்வஸ்த் வாயு
- அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுவின் கீழ் இயங்கும்
- பெங்களூருவை மையமாகக் கொண்ட தேசிய விண்வெளி ஆய்வகங்கள் நிறுவனம் ஸ்வஸ்த் வாயு என்ற பெயரில் ஒரு பைபாப் (BIPAP) செயற்கை சுவாசப் பெருக்கி கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது.
- கோவிட் -19 நோயின் தீவிர தாக்குதலிற்கு உட்படாத மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தேவைப்படாத நோயாளிகளுக்குப் பயன்படும் இது உடலின் வெளிப்புறத்தில் பொருத்தப்படும் ஒரு சுவாச ஆதரவு சாதனமாகும். பைபாப் என்பது (BiPAP - Bilevel Positive Airway Pressure) ஒரு வகை நேர்மறை அழுத்த சுவாசக் கருவியாகும்.
- இது 36 நாட்கள் என்ற குறுகிய காலத்திற்குள் வடிவமைக்கப்பட்டுள்ளது .
- இதில் ஆக்ஸிஜன் செறிவூட்டியை வெளிப்புறமாக இணைப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன.
- இந்த செயற்கை சுவாசக் கருவி சோதனை மற்றும் அளவுத் திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தினால் (National Accreditation Board for Testing and Calibration Laboratories )அங்கீகரிக்கப்பட்டுள்ளது .
பொதுக் கணக்குக் குழு தலைவர்
- மக்களவையில் காங்கிரஸ் தலைவரான ஆதீர் ரஞ்சன் சவுத்ரி மீண்டும் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். ஒவ்வோர் ஆண்டும், மக்களவை சபாநாயகர் பொதுக் கணக்குக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களை மீண்டும் அமைப்பார்.
- இது பாரம்பரியமாக பிரதான எதிர்க்கட்சியின் பிரதிநிதியால் தலைமை தாங்கப்படுகிறது.
- பொதுக் கணக்குக் குழு பாராளுமன்றத்தின் மிக அதிகாரம் வாய்ந்த ஒரு குழுவாகும். தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வழங்கும் அனைத்து அறிக்கைகளையும் பரிசீலித்து அதன் மீது அரசாங்கத்திற்குப் பரிந்துரைகளை வழங்க இதற்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது.
- அரசின் எந்தவொரு கணக்குகள் மற்றும் நிதி ஓட்டம் மற்றும் அதன் முறைகேடு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து அது தொடர்பாக எந்தவொரு அரசாங்க அதிகாரிகளையும் தனியார் நபர்களையும் விசாரிக்க அழைப்பாணை விடுத்து அதனை இந்தக் குழு ஆராயலாம்.
- எந்தவொரு விஷயத்தையும் தேர்வு செய்து அதனை விவாதிக்க இதன் தலைவருக்கு அதிகாரம் இருந்தாலும், அதில் உள்ள வாக்களிக்கும் முறை ஆளும் கட்சிக்கு அவ்வறிக்கையின் மீதான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
இந்தியா முன்னிலை 2020 - சூரிய ஒளி சக்தி
- மெர்காம் இந்திய ஆராய்ச்சியகம் சமீபத்தில் இந்த தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- இந்தியா 2019 ஆம் ஆண்டில் 7.3 ஜிகாவாட் கொள்திறன் அளவிற்கு சூரிய ஒளி மின்சக்தியை நிறுவி, அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு உலகின் மூன்றாவது பெரிய சூரிய ஒளிசக்திக்கான சந்தையாக தனது இடத்தைப் பிடித்துள்ளது.
- 2019 ஆம் ஆண்டு டிசம்பரின் இறுதியில் சுமார் 35.7 ஜிகாவாட் அளவிற்கு ஒட்டு மொத்த சூரிய ஒளி சக்தி நிறுவல்களை நாடு கொண்டிருந்தது.
- 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் நிலவரப்படி அதானி நிறுவனமானது ஒட்டு மொத்த சூரிய ஒளி சக்தி நிறுவல்களின் அடிப்படையில் மிகப்பெரிய திட்ட உருவாக்குநராக இருந்தது. ஒட்டு மொத்த சூரிய ஒளி சக்தியின் கூரை நிறுவல்களிலும் சரி 2019 ஆம் ஆண்டிற்கான கூரை நிறுவல்களிலும் சரி டாடா பவர் சோலார் நிறுவனமானது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
- 2019 ஆம் ஆண்டில் நாட்டின் முன்னணி சூரிய அலை மின்மாற்றி வழங்குநராக ஹுவாவே (Huawei) நிறுவனம் அமைந்தது.
இந்தியா-சீனா எல்லைத் தகராறு
- இந்திய மற்றும் சீனப் படையினர்கள் சமீபத்தில் உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் இரண்டு இடங்களில் மோதிக் கொண்டுள்ளனர்.
- இந்த சம்பவங்கள் சிக்கிமில் உள்ள நாகு லா எனும் பகுதியிலும், லடாக்கின் பாங்கோங் சோ ஏரிக்கு அருகே உள்ள பகுதியிலும் நடந்துள்ளன.
- நாகு லா செக்டாரானது முகுதாங் அல்லது சோ லாமு டீஸ்டா நதி துவங்குமிடம்) எனும் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.
- பாங்கோங் சோ என்பது டெதிஸ் புவிப் பெருங்குழிவுனால் உருவான ஒரு உப்பு நீர் ஏரியாகும்.
- இந்த நீர்நிலைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ளது, மீதமுள்ளவை சீனக் கட்டுப்பாட்டில் உள்ளது.
உலக தொலைத்தொடர்பு தினம்
- உலக தந்தி சங்கம் 1865ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
- இதுவே 1934ஆம் ஆண்டில் உலக தொலைத் தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- இச்சங்கம் துவக்கப்பட்டதன் நினைவாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் மே – 17 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது.
- இவ்வமைப்பு மாறிவரும் காலம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை உள்வாங்கி இன்று தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களில் ஐ.நாவின் ஒருங்கிணைக்கும் அமைப்பாகவும் உலகளவில் பன்னாட்டு அரசுகளும் தனியார் அமைப்புகளும் இணைந்து புதிய பிணையங்களையும் சேவைகளையும் மேம்படுத்தும் மையமாகவும் விளங்குகிறது.
- உலகம் முழுவதும் தொலைத்தொடர்பை ஏற்படுத்தி, உலக மக்களிடம் ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளது.
- 2019 Theme: Bridging the standardization gap