Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 May 2020 31st May 2020


New High Commissioner

  • கத்தார் நாட்டிற்கான இந்திய தூதராக பதவி வகித்து வந்த பெரியசாமி குமரன் ( Periasamy Kumaran ) சிங்கப்பூர் நாட்டிற்கான இந்தியாவின் புதிய ஹை கமிஷனராக ( High Commissioner of India to The Republic Of Singapore) சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேலும், கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் – தீபக் மிட்டல்

டேக் இட் ஈசி திட்டம்

  • தேர்வெழுதும் பள்ளி மாணவர்களின் பதற்றத்தைக் குறைக்க டேக் இட் ஈசி என்னும் திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அதாவது 92666 17888 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்தால், சில நிமிடங்களில் செல்பேசிக்குத் தானியங்கி அழைப்பு ஒன்று வருகிறது. அதில் டேக் இட் ஈசி என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை ஒன்று சொல்லப்படுகிறது. சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் இந்தக் கதை நீடிக்கிறது.

‘ரோஸ்கர் சேது’ ( Rozgar Setu ) திட்டம்

  • ‘ரோஸ்கர் சேது’ ( Rozgar Setu ) என்ற பெயரில் ஊரடங்கினால் பிற மாநிலங்களிலிருந்து திரும்பி வந்த தனது மாநிலத்தை சேர்ந்த திறன் தொழிலாளர்களுக்கு (Skilled Workers) வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மத்தியப் பிரதேச அரசு செயல்படுத்த உள்ளது.
  • மேலும் சமீபத்தில் மத்தியஅரசு அறிவித்திருந்த ஸ்வாமித்வா (SVAMITVA – Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) திட்டத்தையும் சேர்த்து செயல்படுத்த உள்ளது.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின்(NABARD)

  • ஜூலை 12, 1982 அன்று தொடங்கப்பட்ட தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

புகையிலை இல்லா தின விருது

  • பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் பான் மசாலா, குட்கா, இ-சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை தடை செய்ய சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டு சங்கம் (Socio-Economic and Educational Development Society (SEEDS)) மேற்கொண்ட முயற்சிகளுக்காக, உலக சுகாதார அமைப்பு (WHO) புகையிலை இல்லா தின விருது-2020 -ஐ வழங்கியுள்ளது.
  • உலக புகையிலையில்லா தினம் (World No-Tobacco Day) மே 31 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மையக்கருத்து – TobaccoExposed

சிடோ கன்ஹு முர்மு பல்கலைக்கழகம்(SKMU)

  • சிடோ கன்ஹு முர்மு பல்கலைக்கழக(SKMU) துணைவேந்தராக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த “சோனாஹரியா மின்ஸ்” (Sonajharia Minz) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இதன்மூலம் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்ட முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
  • முதல் பழங்குடியின பெண் பைலட் – அனுபிரியா மதுமிதா லக்ரா
  • சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற முதல் பழங்குடியினப் பெண் – ஸ்ரீதன்யா சுரேஷ்

இராணுவ பாலின வழக்கறிஞர் விருது

  • தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் (யு.என்.எம்.ஐ.எஸ்.எஸ்) பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரியும், பெண் அமைதி காக்கும் மேஜர் சுமன் கவானி, ஐக்கிய நாடுகளின் மதிப்புமிக்க இராணுவ பாலின வழக்கறிஞர் விருதுக்கு (2019) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

‘அக்னிபிரஸ்தா’ ஏவுகணைப் பூங்கா

  • அக்னிபிரஸ்தா’ ஏவுகணைப் பூங்காவை (Missile Park ‘Agneeprastha’) , ஐஎன்எஸ் கலிங்காவில் (INS Kalinga) அமைப்பதற்காக 29-5-2020 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
  • 1981 முதல் இன்று வரையிலான ஐஎன்எஸ் கலிங்காவின் ஏவுகணை வரலாற்றிணை காட்சிப்படுத்துவதை ‘’ அக்னிபிரஸ்தா’’ நோக்கமாகக் கொண்டுள்ளது.
Share with Friends