உலகக் குடும்ப மருத்துவர் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் மே 19ம் தேதி உலக குடும்ப மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளுக்குக் குடும்ப மருத்துவர்கள் வழங்கி வரும் பங்கையும் சேவையையும் முதன்மைப்படுத்த தேசிய கல்லூரிகள் கழகங்களின் உலக அமைப்பு (உலகக் குடும்ப மருத்துவர் அமைப்பு – WONCA) 2010ல் முதன் முதலாக இந்நாளை அறிவித்தது.
- அனைத்து நோயாளிகளுக்கும் தனிப்பட்ட, விரிவான மற்றும் தொடர் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் மருத்துவர்களுக்கு இருக்கும் திறனின் மையப் பங்கை அங்கீகரிக்க இந்நாள் ஓர் அற்புதமான வாய்ப்பாகும்.
- 2019 Theme: “Family doctors – caring for you for the whole of your life”
இந்திய வம்சாவளி சிறுமிக்கு விருது - டிரம்ப் பாராட்டு
- அமெரிக்காவில், மேரிலாண்டு நகரில் வசிக்கும், ஆந்திர தம்பதியின் மகள், ஸ்ரவ்யா அன்னப்ப ரெட்டி, 10. நான்காம் வகுப்பு மாணவியான இவர், சாரணர் குழு உறுப்பினராக உள்ளார்.
- இவர், லைலா கான், லாரன் மேட்னி என்ற சக தோழியருடன் இணைந்து, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கு, 100 பிஸ்கட் பெட்டிகளும், சுகாதார பணியாளர்களுக்கு, 200 வாழ்த்து அட்டைகளும் வழங்கியுள்ளார்.
- கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோருக்கு, பிஸ்கட் பரிசளித்து, இந்திய வம்சாவளி சிறுமியின் சேவையைப் பாராட்டி, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் விருது வழங்கி கவுரவித்தார்.
ஆகஸ்ட் 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு : ஆந்திர முதல்வர் அறிவிப்பு
- ஆந்திரப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
- நாடு முழுவதும் நான்காம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.
- மேலும் அந்தந்த மாநிலங்கள் கரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் சில தளர்வுகளை அறிவித்து வருகின்றன.
- இந்நிலையில், மாநிலத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
- மேலும், ஆந்திரத்தில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டுக் கூடங்கள் ஆகியவற்றைத் திறக்க தடை தொடரும் என்றும் கரோனா தொற்று குறைவாக உள்ள பகுதிகளில், கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பொதுப் போக்குவரத்து செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
EventBot
- இந்தியாவின் அவசரகால கணினி எதிர்வினை அணியானது (CERT - Computer Emergency Response of Team) "EventBot" என்று அழைக்கப்படும் ஒரு புதிய தீம்பொருளுக்கு எதிராக ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
- CERT அமைப்பின்படி இந்தத் தீம்பொருள் ஆனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உள்ள கைபேசிப் பயன்பாட்டாளர்களிடமிருந்து சுயவிவர நிதியியல் தொடர்பான தகவல்களைத் திருடுகின்றது.
- "EventBot" தீம்பொருளானது ட்ரோஜனைப் பரப்புகின்றது. CERT ஆனது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
WTO-ன் தலைமை
- உலக வர்த்தக அமைப்பின் தலைவரான பிரேசிலைச் சேர்ந்த ராபர்ட்டோஅளவெடோ என்பவர் அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.
- இவர் ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று தனது பொறுப்பிலிருந்து விலக இருக்கின்றார்.
- இவரது 2வது 4 ஆண்டு கால பதவிக் காலமானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய இருக்கின்றது.
COBAS 6800
- மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷ வர்தன் COBAS 6800 ஆர்டி பிசிஆர் உபகரணத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
- இந்த சாதனமானது முழுவதும் தானியங்கு தன்மையுடையதாகவும் உயர் செயல்திறன் கொண்ட ஆர்டி-பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ளக் கூடியதாகவும் உள்ளது.
- இந்தச் சாதனமானது நாட்டின் சோதனையிடும் திறனை அதிகரிக்க உதவ இருக்கின்றது.
- இது 1200 மாதிரிகளின் சோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் அறிவிக்கும் திறன் கொண்டது.
- இது தில்லியில் உள்ள தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தில் பொருத்தப் பட்டுள்ளது.
- இந்தச் சாதனமானது ஹெபடைடிடிஸ், சலமைடியா, எச்ஐவி, பாபிலோமா, எம்டிபி, சிஎம்வி, நைசீரியா போன்ற நுண்ணுயிரிகளைக் கண்டறியும் திறன் கொண்டது.
- இந்தச் சாதனமானது ரோச்சி நோய்க் கண்டறிதல் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டு உள்ளது.
திட்டம் 39A
- இது புது தில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிஅமைப்பான திட்டம் 39A எனும் அமைப்பினால் வெளியிடப்படும் ஒரு அறிக்கை ஆகும்.
- இந்த ஆய்வானது மத்தியப் பிரதேசம், தில்லி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசத்தினைத் தேர்ந்தெடுத்துள்ளது.
- மரண தண்டனைகள் இங்கு அதிகமாக வழங்கப்படுவதன் காரணமாக இந்த மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
- தில்லியில் உள்ள விசாரணை நீதிமன்றங்கள் சமூகத்தின் கூட்டு உளச்சான்றின் அடிப்படையில் மரண தண்டனையை வழங்குகின்றன.
- "சமூகத்தின் கூட்டு உளச்சான்று” என்ற கருத்தின் அடிப்படையில் மரண தண்டனை வழங்குவது நியாயம் என்ற வாதம் 1983 ஆம் ஆண்டு மச்சி சிங் (எதிர்) பஞ்சாப் அரசு என்ற வழக்கின் தீர்ப்பில் இந்திய உச்ச நிதிமன்றத்தினால் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.
- சமீபத்தில் கூட்டு உளச்சான்றானது 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திய வழக்கான முகேஷ் எதிர் தில்லி தேசியத் தலைநகர்ப் பகுதி அரசு என்ற தில்லி கூட்டுப் பாலியல் வழக்கில் 2017 ஆம் ஆண்டில் இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
- இந்த ஆய்வானது பச்சன் சிங் எதிர் பஞ்சாப் அரசு என்ற வழக்கின் 1980 ஆம் ஆண்டுத் தீர்ப்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட தண்டனைச் செயல்முறையை விசாரணை நீதிமன்றங்கள் கடைபிடிப்பதில்லை என்பதையும் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளது.
- இந்த வழக்கில், இந்திய உச்சநீதிமன்றத்தின் ஒரு அரசியலமைப்பு அமர்விடம் மரண தண்டனையின் அரசியலமைப்பு செல்லுபடித் தன்மை குறித்து முடிவெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது.
- 2015 ஆம் ஆண்டில் ஏ.பி.ஷா அவர்களின் தலைமையிலான சட்ட ஆணையமானது மரண தண்டனையை ஒழிக்கப் பரிந்துரைத்தது.
- எனினும், சட்ட ஆணையம் இந்தப் பரிந்துரையை தீவிரவாதச் செயல்கள் தொடர்பற்ற வழக்குகளுக்கு மட்டுமே வழங்கியுள்ளது.
ஆத்மநிர்பர் திட்டம் - இரண்டாவது நிதித் தொகுப்பு
- மத்திய நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் "ஆத்மநிர்பர்(தற்சார்பு) திட்டத்தின்" இரண்டாவது நிதித் தொகுப்பை அறிவித்துள்ளார். முக்கியமான நடவடிக்கைகள் :
- காலகட்டங்களில் இலவச உணவு தானியங்கள் அனைத்து இடப்பெயர்வுத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட இருக்கின்றன.
- இந்தியாவில் எந்தவொரு நியாய விலைக் கடையிலிருந்தும் இடப்பெயர்வுத் தொழிலாளர்களுக்குப் பொது வழங்கல் முறையை அனுமதிக்க தொழில்நுட்ப என்ற திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத வாக்கில் 100% தேசிய உள்ளடக்கலை அடைய முடியும்.
- ஈடு செய்யும் காடு வளர்ப்பு மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தின் கீழ் உள்ள ரூ. 6000 கோடி நிதியானது காடு வளர்ப்பு மற்றும் தோட்டப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட இருக்கின்றது.