New Development Bank
- கடந்த 2015 ஆம் ஆண்டுமுதல் தலைவராக இருந்து வந்த கே.வி காமத் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து ,பிரேசில் நாட்டைச் சேர்ந்த மார்கோஸ் ட்ரோஜோ (Marcos Troyjo) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜூலை 7 அன்று பதவியேற்கவுள்ளார்.
- மேலும்., துணைத்தலைவராக இந்தியாவை சேர்ந்த அனில் கிஷோராவும் (Anil Kishora) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
The Ickabog
- ஹாரி பாட்டர் நாவல் ஆசிரியர் ஜே.கே.ரவுலிங் ( J.K. Rowling ) ‘தி இக்கா பாக்’ ( The Ickabog) என்ற தனது புது புத்தகத்தை குழந்தைகளுக்காக இலவசமாக ஆன்லைனில் வெளியிட்டுள்ளார்.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா
- பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனாவின் (PMGKY - Pradhan Mantri Garib Kalyan Yojana) கீழ் ஏறத்தாழ 9 கோடியே 60 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
- இது முக்கியமாக PM-கிசான் என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
- PMGKY ஆனது பொது முடக்கத்தின் போது பாதிக்கப் பட்டிருக்கும் மக்களின் வாழ்வை எளிமைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- PM - கிசான் ஆனது 2019 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டுள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6000 தொகையானது மூன்று தவணைகளில் செலுத்தப் படுகின்றது.
- இந்தத் திட்டமானது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளை இலக்காகக் கொண்டு உள்ளது.
இந்திய அணிகலன்கள் குறித்த அறிக்கை
- உலகத் தங்க ஆணையமானது "சில்லறை வியாபாரத் தங்கக் கண்ணோட்டம் இந்திய அணிகலன்கள் அறிக்கை" என்ற தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- இந்த அறிக்கையின் படி, ஏறத்தாழ 37% இந்தியப் பெண்கள் அணிகலன்கள் வாங்கியதே இல்லை.v
- ஆடைகள் மற்றும் பட்டுச் சேலைகளுக்கு அடுத்து, "அலங்கார மற்றும் ஆடை அணியும் வாழ்க்கைப் பாணி" நுகர்வோர்களிடையே இரண்டாவது மிகவும் புகழ்பெற்ற பொருள் தங்க அணிகலன்கள் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
கங்கை ஓங்கில் (டால்பின்) சரணாலயம்
- பீகார் மாநில அரசானது பஹல்பூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமசீலா கங்கை ஓங்கில் சரணாலயத்தில் பாலூட்டிகளுக்கான இந்தியாவின் முதலாவது ஆய்வு மையத்தை அமைக்க இருக்கின்றது.
- பீகார் மாநிலமானது இந்தியாவில் இருக்கும் ஏறத்தாழ 2500-3000 கங்கை ஓங்கில்களில் பாதிக்கும் மேற்பட்ட ஓங்கில்களுக்கான வாழ்விடமாக விளங்கி வருகின்றது.
- கங்கை ஆற்று ஓங்கில் முக்கியமாக கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிகளிலும் இந்தியா, வங்க தேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் பாயும் அவற்றின் துணையாறுகளிலும் காணப்படுகின்றது.
- கங்கை ஆற்று ஒங்கில் ஆனது இந்திய அரசினால் தனது தேசிய நீர் விலங்காக 2009 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
- அப்போதைய இந்தியப் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான தேசிய கங்கை நதி நீர்ப் படுகை ஆணையத்தின் முதலாவது கூட்டத் தொடரில் இந்த முடிவானது எடுக்கப் பட்டுள்ளது.
- மேலும் இது இந்திய நகரான குவஹாத்தியின் அதிகாரப்பூர்வ விலங்காகவும் இருக்கின்றது.
சாரு கடற்காய்
- சாரு கடற்காய் என்பது, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கக் கடற்கரைகளில் இருக்கும் ஓர் ஊடுருவிய கடற்காயாகும்.
- இது மற்ற கடற்காய்களை வெளியேற்றி கேரளாவில் உள்ள உப்பங்கழிகளில் வேகமாக பரவி வருகின்றது.
- 2017 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் ஏற்பட்ட ஓக்கிப் புயலின் காரணமாக சாரு கடற்காயானது (மைடெல்லா ஸ்டிகாட்டா) வேகமாகப் பரவி வருகின்றது.
சர்வதேச ஐக்கிய நாடுகள் அமைதி காப்புப் படையினர் தினம் - மே 29
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "அமைதி காக்கும் பணியில் பெண்கள் - அமைதிக்கான ஒரு வழி" என்பதாகும்.
- இது பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைத் தீர்மானம் 1325 என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப்பட்டதின் 20வது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க உதவுகின்றது.
- 1948 ஆம் ஆண்டு மே மாதத்தில் 29 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது குறைந்த எண்ணிக்கையிலான ஐ.நா. ராணுவக் கண்காணிப்பாளர்களை மத்தியக் கிழக்கில் பணியில் அமர்த்த அனுமதி வழங்கி அதன் மூலம் முதலாவது ஐ.நா. அமைதிப் படைத் திட்டமானது ஏற்படுத்தப் பட்டது.
- ஒவ்வொரு அமைதி காக்கும் திட்டத்திற்கும் பாதுகாப்புச் சபையினால் ஒப்புதல் அளிக்கப் பட வேண்டும்.
- ஐ.நா. அமைதிப் படையினர் நீலத் தொப்பியினர் அல்லது நீலத் தலைக் கவசத்தினர் என்று அழைக்கப் படுகின்றனர்.