Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 May 2020 26th May 2020

ReStart - திட்டம்

  • சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் 1100 கோடி செலவில் ReStart என்னும் திட்டத்தை ஆந்திரப்ரதேஷ் அரசு அறிவித்துள்ளது.

விளையாட்டு - “தொழில்”

  • இந்தியாவில் முதன்முறையாக மிசோரம் மாநில அரசு, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், விளையாட்டு துறைகளில் அதிக முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும், “விளையாட்டு”க்கு “தொழில்” அந்தஸ்தை வழங்கியுள்ளது.

சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது

  • நியூயார்க் அறிவுசார் சொத்துச் சட்ட சங்கத்தால், ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர் விருதானது, ஐபிஎம் தாம்சன் வாட்சன் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வரும் இந்திய-அமெரிக்க ஆராய்ச்சியாளர் ராஜீவ் ஜோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது.

INDIA - இராணுவ போர் விளையாட்டு மையம்

  • உகாண்டா நாட்டு ராணுவத்திற்கு(UPDF), இந்திய ராணுவம் சுமார் 2 கோடி மதிப்பில் INDIA என்ற பெயரில் இராணுவ போர் விளையாட்டு மையத்தை அமைத்து கொடுத்துள்ளது.
  • இதனை மே-24 அன்று உகாண்டா ஜனாதிபதி யோவரி முசவேனி திறந்துவைத்தார்.

குடோல் முன்னெடுப்பு

  • ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் இளைஞர் விவகாரங்கள் குறித்த தூதுவர் கோவிட் - 19 நோய்த் தொற்றிற்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்திற்காக வேண்டி உலகளாவிய 10 முன்னெடுப்புகளில் மணிப்பூரின் குடோலையும் பட்டியலிட்டு உள்ளார்.
  • குடோல் என்பது "Ya_ALL' என்ற இம்பாலில் உள்ள ஒரு அரசுசாரா அமைப்பின் மூலம் கூட்டாக இணைந்து நிதியளிக்கப்படும் ஒரு முன்னெடுப்பாகும்.
  • ன் வாழும் சமூகம், தினக் கூலித் தொழிலாளர்கள், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் ஆகியோரின் உணவு, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை உறுதி செய்ய உதவ இருக்கின்றது.

அரசின் கடன் குறித்த நிலை அறிக்கை

  • மத்திய நிதித்துறை அமைச்சகமானது 2018-19 ஆம் ஆண்டிற்கான அரசின் கடன் குறித்த நிலை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • மத்திய அரசின் கடனானது 2017-18 ஆம் ஆண்டில் 45.8% என்ற அளவிலிருந்து 2019 ஆம் ஆண்டில் 45.7% என்ற குறைந்த அளவில் சரிந்துள்ளது.
  • அயலகக் கடனானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7% ஆகும்.
  • இந்தியாவில் தற்போதையக் கடனானது ரூ.1.3 கோடி கோடிகளாக உள்ளது.
  • ஏறத்தாழ 94% என்ற அளவில் மத்திய அரசின் கடன்கள் உள்நாட்டுக் கடன்களாக உள்ளன.
  • இந்த அறிக்கையின்படி, மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் ஒட்டு மொத்தக் கடன் அளவானது 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 58.7% என்பதிலிருந்து 2019 ஆம் ஆண்டில் 58.6% ஆகக் குறைந்துள்ளது.

உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய வேளாண் முறைகள் (GIAHS)

  • சமீபத்தில் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது (FAO - Food and Agriculture Organization) சீனா, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் 4 தேயிலை சாகுபடித் தளங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய வேளாண் முறைகளாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • GIAHS (Globally Important Agricultural Heritage Systems) ஆனது வேளாண் பாரம்பரிய முறைகளைப் பாதுகாத்து, ஆதரவளிப்பதற்காக FAOவினால் தொடங்கப் பட்டதாகும். GIAHS ஆனது வேளாண் பன்முகத் தன்மை, இடர் தாங்கும் சூழல் அமைப்புகள் மற்றும் மதிப்புமிக்க கலாச்சாரப் பாரம்பரியங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள அழகியல் சார்ந்த தலைசிறந்த நில அமைப்புகளாகும்.
    • இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 3 GIAHS தளங்கள் பின்வருமாறு:
    • கேரளாவில் கடல் மட்டத்திற்குக் கீழே மேற்கொள்ளப் படும் குட்டநாடு வேளாண் முறை
    • ஒடிசாவின் கோராபுட் பாரம்பரிய வேளாண்மை
    • காஷ்மீரின் பாம்பூர் குங்குமப்பூ பாரம்பரிய வேளாண்மை
  • FAO என்பது பட்டினியை ஒழித்தல், ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தல் ஆகியவற்றிற்கான சர்வதேச அளவிலான முயற்சிகளை வழிநடத்தும் ஐக்கிய நாடுகளின் ஒரு சிறப்பு நிறுவனமாகும்.

அலெக்சாந்தர் டால்ரிம்பிள் விருது

  • இந்திய அரசின் தேசிய நீர்ப்பரப்பியல் துறை வல்லுநரான துணைக் கடற்படை அதிகாரி வினய் பத்வாருக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப் பட்டது.
  • இந்திய நீர்ப்பரப்பியல் துறை மற்றும் மிகப் பரந்த இந்தியப் பெருங்கடல் பகுதியில் இவரது தலைசிறந்தப் பங்களிப்பிற்காக இந்த விருதானது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இது ஐக்கிய இராஜ்ஜியத்தின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
  • இது கடற்படையின் முதலாவது நீர்ப்பரப்பியல் துறை வல்லுநரான அலெக்சாந்தர் டால்ரிம்பிள் என்பவரின் நினைவாக இந்தப் பெயரிடப்பட்டுள்ளது.

புத்திமாரி நதி

  • இது இந்தியாவில் அசாமில் உருவாகும் ஒரு நதியாகும்.
  • இது பிரம்மபுத்திரா நதியின் துணை நதியாகும்.
  • இது வெள்ளம் மற்றும் அதிக வண்டல் சுமைக்குப் பெயர் பெற்றது.
  • சமீபத்தில் ஏற்பட்ட ஆம்பன் புயலிற்குப் பிறகு இதில் வெள்ளம் ஏற்பட்டதாக செய்தி வெளியானது.

உலக எஃகு அறிக்கை

  • உலக எஃகுச் சங்கமானது உலக எஃகு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் கச்சா எஃகு உற்பத்தியானது 65 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியா தற்போது அதன் தேசிய எஃகு கொள்கை 2017 என்ற கொள்கையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
  • இந்தக் கொள்கையின் கீழ், இந்தியா தனது எஃகு உற்பத்தியை 2030 ஆம் ஆண்டிற்குள் 300 மில்லியன் டன்னாக உயர்த்த உள்ளது.
  • எஃகு உற்பத்தியில் சீனா 1.7% சரிவைக் கண்டுள்ளது.
  • சீனா உற்பத்திச் சரிவை எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

Share with Friends