கில்ஜிட் - IMD
- இந்திய வானிலை அமைப்பானது (IMD - Indian Meteorological Department) ஜம்மு-காஷ்மீருக்கான தனது வானிலைத் துணை மண்டலத்தில் ஜம்மு-காஷ்மீர், கில்ஜிட்-பலூசிஸ்தான், லடாக் மற்றும் முசபராபாத் ஆகிய பகுதிகளை இணைக்கத் தொடங்கியுள்ளது.
- இந்த மாற்றமானது கில்ஜிட்-பலூசிஸ்தான் பகுதியில் தேர்தலை நடத்தும் பாகிஸ்தானின் முடிவை அடுத்து மேற்கொள்ளப் பட்டுள்ளது.
ஹைபோக்சியா
- சமீபத்தில் மருத்துவப் பயிற்சியாளர்கள் அமைதி அல்லது மகிழ்ச்சிகர செய்தி.
- ஹைபோக்சியா என்ற ஒரு நிலை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருக்கின்றனர்.
- இதில், கோவிட் - 19 நோயாளிகள் மிகக் கடுமையான குறைந்த அளவிலான ரத்த ஆக்ஸிஜன் அளவைக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு சுவாசக் கோளாறுப் பிரச்சினை போன்ற அறிகுறிகள் எதுவும்' தென்படவில்லை .
- ஹைப்போக்சியா என்பது இரத்தம் மற்றும் உடல் திசுக்களுக்கு தேவைப்படும் போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்கப்படாத பெரு பற்றாக்குறையுள்ள நிலை ஆகும்.
- துடிப்பு ஆக்ஸிமீட்டர் என்று அழைக்கப்படும் ஒரு மருத்துவச் சாதனமானது அமைதியான ஹைப்போக்சியாவின் முன்கூட்டிய கணிப்பிற்குப் பயன்படுத்தப் படுகின்றது.
டாக்கிஸ் - இத்தாலிய நிறுவனம்
- டாக்கிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் உலகின் முதலாவது கொரானா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாகக் கூறி உள்ளனர்.
- இந்த திறன்மிகு கொரானா வைரஸ் தடுப்பு மருந்தானது முதல்முறையாக மனித உயிரணுக்களில் இந்த வைரஸைக் கட்டுப்படுத்துகின்றது.
- அனைத்துத் திறன்மிகு கொரானா வைரஸ் தடுப்பு மருந்துகளும் "ஸ்பைக்" (முள்புரதம்) என்ற டிஎன்ஏ புரதத்தின் ஒரு மரபணுப் பொருளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.
- ஸ்பைக்" என்பது மனித உயிரணுக்களுக்குள் நுழைவதற்காக கொரானா வைரசால் பயன்படுத்தப்படும் ஒரு மூலக்கூறு முனை ஆகும்.
நிஹாக் : இமாச்சலப் பிரதேசம்
- இமாச்சலப் பிரதேச அரசானது “நிஹாக்" என்ற ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க இருக்கின்றது.
- நாட்டின் பிற பகுதிகளில் இருந்து அம்மாநிலத்திற்கு வரும் குடும்ப உறுப்பினர்களுக்குக் கல்வி அளித்தலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆயுஷ் கவச் செயலி : உத்தரப் பிரதேசம்
- மாநில அரசானது மருந்து குறித்த அறிவுரைகளை மக்கள் பெறுவதற்கு உதவுவதற்காக "ஆயுஷ் கவச்" என்ற ஒரு செயலியைத் தொடங்கி உள்ளது.
- இது பண்டைய முறைகளான ஆயுர்வேதம் மற்றும் யோகா ஆகியவற்றின் மூலம் மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதற்காக அவர்களுக்கு உதவ இருக்கின்றது.
இஸ்ரேலில் தாகூர் பெயரில் தெரு : பிறந்த நாளில் கவுரவம்
- வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், மனித குலத்திற்கு அவர் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்பை போற்றிடவும்,அவரது 159-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில் இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு தாகூர் என சூட்டப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் சிறப்பு தூதர் : உலக சுகாதார அமைப்பு
- லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் உலக சுகாதார பேராசிரியராக பணியாற்றும் டாக்டர் டேவிட் நபரோ, உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் சிறப்பு தூதராகவும் செயலாற்றி வருகிறார்.
தானியங்கி முகக்கவசம் விற்பனை இயந்திரம்: தமிழகம்
- 5 ரூபாய் நாணயத்தை செலுத்தி முகக் கவசம் பெற்றுக்கொள்ளும் வகையில் தானியங்கி முகக்கவசம் விற்பனை இயந்திரம் சமீபத்தில் தமிழகத்தில் முதல் முறையாக தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது.