ஆசிரியா் ஓய்வு வயது 59 ஆக உயா்வு
- தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 வயதாக உயா்த்தி முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
- இந்த உத்தரவு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியா்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
- தமிழகத்தில் 14 லட்சம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், 4 லட்சத்துக்கும் கூடுதலான ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் உள்ளனா். இவா்களில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அதாவது 2020-ஆம் ஆண்டில் இருந்து 2022-ஆம் ஆண்டு வரையில் மட்டும் சுமாா் 20 சதவீத ஊழியா்கள் பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளனா்.
- கரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழக அரசு எதிா்கொண்டு வரும் நிதிச் சிக்கல்களை கையாளும் வகையில், அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 59-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
- இந்த உத்தரவு மே 31-ஆம் தேதியில் இருந்து ஓய்வு பெறவுள்ள அனைவருக்கும் பொருந்தும். அதாவது மே 31-ஆம் தேதியன்று ஓய்வு பெறவுள்ளவா்கள், அடுத்த ஆண்டு மே 31-இல் ஓய்வு பெறுவா்.
வீட்டுக் கடன் வட்டி குறைப்பு
- ஓராண்டுக்கான எம்.சி.எல்.ஆர் 2020 மே 10 முதல், நடைமுறைக்கு வரும். ஆண்டுக்கு 7.40 சதவீதத்திலிருந்து 7.25 சதவீதமாக எம்.சி.எல்.ஆர் விகிதம், குறைக்கப்படும். இது எஸ்பிஐ வங்கியின் தொடர்ச்சியான 12வது எம்.சி.எல்.ஆர் குறைப்பு ஆகும்.
- எம்.சி.எல்.ஆர் குறைப்புக்குப் பிறகு, தகுதிவாய்ந்த வீட்டுக் கடன் கணக்குகளின் (எம்.சி.எல்.ஆருடன் இணைக்கப்பட்டுள்ளது) 30 ஆண்டுகள் செலுத்தும் காலத்தைக் கொண்ட ரூ. 25 லட்சம் வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகை ரூ.255 வரை குறையும் என்றும், எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
- குறைந்து வரும் வட்டி விகித்திலிருந்து மூத்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில் 'எஸ்பிஐ வீகோ டெபாசிட்' என்ற பெயரில் சிறப்பு டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்வதாக எஸ்பிஐ கூறியுள்ளது. இதன் மூலம் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலான மூத்த குடிமக்கள் டெபாசிட் திட்டங்களுக்கு கூடுதலாக 0.30 சதவீதம் வட்டி கிடைக்குமாம். இந்த திட்டம் செப்டம்பா் 30 வரை அமலில் இருக்கும்.
- ஆனால், 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 0.20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மே 12-ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வரவுள்ளது.
ஏடிஜிபி - கே.சி.மஹாளி நியமனம்
- தமிழக காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவின் தலைமை பதவியான ஏடிஜிபி பணியிடம் நீண்ட நாள்களாக காலியாக இருந்தது.
- இந்நிலையில் மத்திய அரசுப் பணிக்குச் சென்று திரும்பிய கே.சி.மஹாளியை, தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
பி.ஏ.சி., தலைவராக ஆதிர் ரஞ்சன் நியமனம்
- நாடாளுமன்ற பொது கணக்கு குழுவின் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். பார்லி., சபாநாயகர் ஓம் பிர்லா ஆதிர் ரஞ்சனை நியமனம் செய்து இது குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
- 2020 மே 1 ம் தேதி முதல் 2021 ஏப்.30ம் தேதி வரையில் இப்பதவியில் அவர் நீட்டிப்பார். இந்திய அரசாங்கத்தின் செலவினங்களுக்காக பார்லி.,யால் வழங்கப்படும் தொகைகள், அரசாங்கத்தின் வருடாந்திர நிதி கணக்குகள் மற்றும் சபை முன் வைக்கப்பட்டுள்ள பிற கணக்குள் போன்றவற்றை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டது தான் நாடாளுமன்ற பொது கணக்கு குழு.
- ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்படும் இந்த குழுவின் தலைவர் பதவி எதிர்கட்சிக்கு வழங்கப்படும். பொது கணக்கு குழு 22 உறுப்பினர்களை கொண்டுள்ளது.
- மக்களவையில் இருந்து 15 உறுப்பினர்களும், மாநிலங்கள் அவையில் இருந்து ஏழு உறுப்பினர்களும் பதவி வகிப்பர். தற்போதைய மக்களை குழுவில் பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் - ஜெயந்த் சின்ஹா, அஜய் (தேனி) மிஸ்ரா, சுதீர் குப்தா, தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், சத்ய பால் சிங், சுபாஷ் சந்திர பஹேரியா, விஷ்ணு தயால் ராம், ஜகதம்பிகா பால் மற்றும் ராம் கிருபால் யாதவ்.
- மேலும் பிற கட்சிகளை சேர்ந்தவர்களான டி ஆர் பாலு, ராகுல் ரமேஷ் ஷெவாலே, ராஜீவ் ரஞ்சன் சிங், பாலஷோவ்ரி வல்லபனேனி மற்றும் பார்த்ருஹரி மஹ்தாப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- தொடர்ந்து ராஜ்யசபாவில் இருந்து ராஜீவ் சந்திரசேகர், சி எம் ரமேஷ், நரேஷ் குஜ்ரால், சுகேந்து சேகர் ராய் மற்றும் பூபேந்தர் யாதவ். ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளது.
- ஆதிர் ரஞ்சன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மேலும் இவர் ஒருவர் மட்டுமே காங்.,சார்பில் தேர்வு குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
சொட்டு நீர்ப் பாசனம்
- 2019 - 20 ஆம் நிதியாண்டில், சொட்டு நீர்ப்பாசன விரிவாக்கத்தில் தேசிய அளவில் தமிழ்நாடு (2,06,853.25 ஹெக்டேர்) முதலிடத்தில் உள்ளது.
- இதற்கு அடுத்து கர்நாடக மாநிலம் 1,41,103.56 ஹெக்டேருடன் 2வது இடத்திலும் குஜராத் மாநிலம் 1,08,322.00 ஹெக்டேருடன் 3வது இடத்திலும் உள்ளன.
- இது பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா (PMKSY - Pradhan Mantri Krishi Sinchayee Yojana) என்ற ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக எட்டப் பட்டுள்ளது.
- இது நீர் சேமிப்புத் தொழில்நுட்பங்களின் மீது கவனம் செலுத்துவதன் மூலம்
- iசிறு துளி அதிக விளைச்சல்" என்ற கருத்தாக்கத்தை ஊக்கப் படுத்தும் ஒரு திட்டமாகும்.
மிகவும் புகழ்பெற்ற மத்திய வங்கி
- உலகில் உள்ள அனைத்து மத்திய வங்கிகளிடையே அதிக எண்ணிக்கையிலான சுட்டுரை பின்தொடர்பவர்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI - Reserve Bank of India) கொண்டுள்ளது. 7.45 லட்சம் நபர்கள் இதன் சுட்டுரையைப் பின்தொடர்கின்றனர்.
- iசுட்டுரையில் மிகவும் புகழ்பெற்ற மத்திய வங்கியாக உருவெடுத்துள்ள இது அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
- RBIற்கு அடுத்த இடத்தில் இந்தோனிசிய வங்கி உள்ளது.
- மூன்றாவது இடத்தில் மெக்சிகோவின் தலைமை வங்கியான பேன்கோ டி மெக்சிகோ என்ற வங்கி உள்ளது.
சர்வதேச அரபி மொழி புனைவுப் பரிசு - 2020
- அப்தெலோகப் அய்சோய் (Abdelouahab Aissaoui) என்பவரின் "ஸ்பார்ட்டான் கோர்ட்" என்ற புனைவானது 13வது சர்வதேச அரபி மொழி புனைவுப் பரிசினை வென்று உள்ளது.
- இப்பரிசை வென்ற முதலாவது அல்ஜீரிய நாட்டவர் அய்சோய் ஆவார்.
- இது ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் கூட்டமைப்பினால் ஆதரிக்கப் படுகின்றது. இந்தப் பரிசானது இலண்டனில் உள்ள புக்கர் பரிசுக் கூட்டமைப்பினை அதன் வழிகாட்டியாகக் கொண்டும் அபுதாபியில் உள்ள கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையினால் ஆதரிக்கப் பட்டும் வருகின்றது.