உலக ஆஸ்துமா தினம் (World Asthma Day)
- மே முதல் செவ்வாய் - உலக ஆஸ்துமா தினம் கொண்டாடப்படுகிறது.
- ஒருவருக்கு தொடர்ந்து சளி பிடித்தால் அவர்களுக்கு 50 முதல் 70 சதவீதம் வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது.
- இந்த நோயினால் உலகம் முழுவதும் 30 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர்.
- சிகரெட் புகை, காற்று மாசுபாடு, பாஸ்ட்புட், பவுடர், வாசனை திரவியம் பூசுதல் போன்ற காரணங்களால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது.
- ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் 1999ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்
- ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமானகும். இந்த துணை நிறுவனத்தின் 9.99 சதவீத பங்குகளை ஃபேஸ்புக் ஏற்கெனவே கையகப்படுத்தியுள்ளது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் அந்த துணை நிறுவனத்தில் 570 கோடி டாலரை (ரூ.43,574 கோடி) முதலீடு செய்துள்ளது.
- இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான சில்வர் லேக் பார்ட்னர்ஸ், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸில் 1.15 சதவீத பங்குகளை கையகப்படுத்தும் வகையில் ரூ.5,655.75 கோடியை முதலீடு செய்ய ஒப்புதல் தெரிவித்துள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
'Year of Awareness on Science and Health'
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்கீழ் செயல்படும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு கவுன்சிலானது உடல்நலம் மற்றும் இடர் தொடர்பு குறித்த ஒரு திட்டத்தை, 'Year of Awareness on Science and Health' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்தத் திட்டம், உடல்நலம் குறித்த நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், மக்களிடையே அறிவியல் மனநிலையையும் நலவாழ்வு நனவையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- COVID-19 நோய்த்தொற்றைச் சமாளிக்க சமுதாயத்தை சித்தப்படுத்துவதற்கான தீர்வுகளை வளர்ப்பதில் கல்வி, ஆராய்ச்சி, ஊடகங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளை ஈடுபடுத்தவும் இந்தத் திட்டம் திட்டமிட்டுள்ளது.
மே இறுதிவரை ஊரடங்கு நீட்டிப்பு - ஜப்பான்
- ஜப்பானில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் இறுதிவரை ஊரடங்கை நீட்டித்து அந்த நாட்டு பிரதமர் ஷின்சே அபே உத்தரவிட்டுள்ளார்.
- ஏப்ரல் 16ம் தேதி முதல் ஜப்பானில் 47 மாகாணங்களில் ஊரடங்கு நீட்டிக்கும் உத்தரவு வெளியானது. ஜப்பானில் கொரோனா வைரஸால் 14,877 பாதிக்கப்பட்டுள்ளனர். 487 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், 3,981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
- ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட இருந்தது. ஆனால், கொரோனா பிரச்சினையால், அது ஒத்தி வைக்கப்பட்டது.
அணிசேரா நாடுகள் உச்சிமாநாடு 2020
- அணி சேரா இயக்கம் என்பது எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும். இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாகவும் 17 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளனர்.
- இந்த இயக்கம் 1961ம ஆண்டு பெல்கிரேட்டில் உருவானது. பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே நடுநிலையில் வளரும் நாடுகள் செல்லவேண்டும் என்பதே இதன் மையக் கருத்தாக இருந்தது.
- இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவிகேற்றப்பின், 2016-ம் வெனிசுலாவில் நடந்த அணிசேரா நாடுகளின் பட்டியலில் கலந்து கொள்ளாமல் முதல்முறையாக தவிர்த்தார்.
- தொடர்ந்து, 18வது அணி சேரா நாடுகளின் மாநாடு கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றபோதும் மோடி பங்கேற்கவில்லை. இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக உள்ளதாக காரணம் கூறி, மோடி இந்த மாநாடுகளை தவிர்த்தார்.
- இந்த நிலையில், அணி சேரா நாடுகளின் மாநாடு அஜர்பைசான் அதிபர் இல்ஹாம் அலிவேவ் தலைமை இன்று வீடியோகான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. இதில் முதல் முறையாக மோடி பங்கேற்றார். கொரோனா பாதிப்புக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளதால், மோடி, இன்த கூட்டத்தில் பங்கேற்றார்.
மீகாங் நதி தகராறு
- சமீபத்தைய ஒரு ஆய்வின்படி, மீகாங் ஆறின் மீதான சீனாவின் நடவடிக்கைகள் நீண்ட காலமாக சர்ச்சைக்குரியதாக அமைந்துள்ளது.
- அமெரிக்க நிதியுதவி பெற்ற இந்த ஆய்வு புவியின் மீதான கண்கள் (Eyes on Earth) என்ற ஒரு ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தால் மேற்கொள்ளப் பட்டது.
- இந்த அறிக்கை ஐ.நா ஆதரவுடைய நீடித்த வளர்ச்சி கொண்ட நிலையான உள்கட்டமைப்பு கூட்டாண்மை மற்றும் கடைநிலை மீகாங் நதி முன்முயற்சி ஆகியவற்றால் இணைந்து வெளியிடப் பட்டுள்ளது.
- இது அமெரிக்காவுடன் கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாமும் இணைந்த ஒரு பன்னாட்டுக் கூட்டாகும்.
- மீகாங் நதி ஆறு நாடுகளின் வழியே பாய்கிறது.
- லங்காங் நதி என்றும் அழைக்கப்படும் இது சீனாவிலிருந்துத் தொடங்குகிறது. இது கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் பாய்கிறது.
- இது வியட்நாம் வழியாக தென் சீனக் கடலைச் சேர்கிறது.
- இந்த நதி தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உயிர்நாடியாக விளங்குகிறது.