CARD திட்டம்
- நிதி ஆயோக் மற்றும் உயிரியல் தொழில்நுட்பத்துறை ஆகிய இரண்டும் இணைந்து கட்டுப்படியாகக் கூடிய மற்றும் விரைவான நோயறிதலுக்கான ஒரு கூட்டமைப்பை (CARD - Consortium for Affordable & Rapid Diagnostics) அறிமுகப் படுத்தியுள்ளன.
- கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளை உருவாக்கும் இந்தியாவின் திறனை விரிவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- CARD திட்டத்தின் முதல் குறிக்கோளானது, கோவிட் -19 தொற்றுக்கு வேண்டி குறைந்த பட்சம் 10 மில்லியன் விரைவான நோய் எதிர்ப்பொருள் சோதனைகளை ஜூலை மாதத்திற்குள் மேற்கொள்வதாகும்.
முதல் துணியாலான முகமூடி
- டெல்லி இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் புத்தாக்க நிறுவனம் ஒன்று நுண்ணுயிர்க்கு எதிரான முகமூடியைக் கண்டறிந்துள்ளது. இதனை 50 முறை கழுவப் பட்டு மீண்டும் பயன்படுத்தப் படலாம்.
- ஐ.ஐ.டி டெல்லியில் உள்ள நானோசேஃப் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் கோவிட் -19 தொற்றுக்கு எதிராகப் போராட பாதுகாப்பு முகமூடிகளை உருவாக்கி உள்ளது.
- NSAFE முகமூடியானது 99.2% அளவிற்கு பாக்டீரியா வடிகட்டலை வழங்குகிறது.
- நுண்ணுயிர்க்கு எதிராக மற்றும் துவைக்கக் கூடிய அளவில் முதல் துணி அடிப்படையிலான முகமூடி இதுவாகும்.
ஒளிக் கண்டுபிடிப்பான்
- மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையத்தின் (JNCASR - Jawaharlal Nehru Centre for Advanced scientific Research) விஞ்ஞானிகள், பொருளாதார மற்றும் ஆற்றல் திறன் கொண்ட மெல்லிய அளவிலான ஒரு ஒளிக் கண்டுபிடிப்பானை உருவாக்கியுள்ளனர்.
- இந்த மெல்லிய ஒளிக் கண்டுபிடிப்பானது பாதுகாப்புப் பயன்பாடுகளுக்காக தங்கம் - சிலிக்கான் இடைமுகத்தைப் பயன்படுத்துகிறது.
- பலவீனமான மற்றும் சிதறிய ஒளியைக் கண்டறிய இந்தத் தொழில்நுட்பம் உதவக் கூடும். எந்தவொரு ஒளி மின்னணுவியல் சுற்றுப் பாதையிலும் ஒளிக் கண்டுபிடிப்பான்கள் மிக முக்கியமான அங்கம் வகிக்கின்றன.
வங்காளப் புலி
- 2019/20 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின் படி சுந்தர வனக்காடுகளில் ராயல் வங்காளப் புலிகளின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளதாக மேற்கு வங்க வனத்துறை அறிவித்துள்ளது. சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் கீழ், ராயல் வங்காளப் புலிகளானது அழிந்து வரும் உயிரினங்களாக பட்டியலிடப்பட்டுள்ளது.
- இந்தியாவில் 4,262 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள சுந்தரவனக் காடுகளில் சதுப்புநிலப் பகுதி மட்டும் 2,125 சதுர கி.மீ ஆகும். இது உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடு மற்றும் தெற்காசியாவின் மிகவும் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும்.
- இது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- சுந்தரவனக் காடுகள் வங்கப் புலிகளின் தாயகமும் ஆகும்.
- இந்தியாவின் மொத்த அலையாத்தி (மாங்குரோவ்) காடுகளின் பரப்பில் இந்தியாவின் சுந்தரவனக் காடுகள் மட்டும் 60 சதவிகித பரப்பைக் கொண்டுள்ளன.
- இது இந்தியாவின் 27வது ராம்சார் தளமாகும்.
- இது இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட ஈரநிலமாகும் (4,23,000 ஹெக்டர்கள்). இது மிகவும் வெகுவாக அருகிவரும் வடக்கு நதி வகை ஆமை, அருகிவரும் ஐராவதி டால்பின் மற்றும் பாதிக்கப்படக் கூடிய வேட்டையாடும் பூனை போன்ற அதிக அளவிலான, அரிதான மற்றும் உலகளவில் ஆபத்துக்குள்ளான உயிரினங்களுக்கான புகலிடமும் ஆகும்.
இந்தியாவின் சிறந்த விமான நிலையம்
- இந்தியா மற்றும், மத்திய ஆசியாவின் சிறந்த விமான நிலையமாக, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், 3வது முறையாக தேர்வாகி உள்ளது.
- உலகம் முழுவதும் 550 விமானநிலையங்களின் வாடிக்கையாளர் சேவை, வசதிகளை மதிப்பிட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
- இதில் மத்திய ஆசியா மற்றும் இந்தியாவின் '2020ம் ஆண்டின் சிறந்த விமான நிலையமாக' பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வாடிக்கையாளர்களால் 3வது முறையாக தேர்வானது.
தேசிய தொழில்நுட்ப தினம்
- தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்ப உலகில் எந்த நாடு அணுசக்தியில் சாதித்துள்ளதோ அதுவே உலகின் பலமிக்க நாடாக கருதப்படும் நிலையுள்ளது.
- எனவே, மறைந்த முன்னாள் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மற்றும் விஞ்ஞானி சிதம்பரம் மற்றும் குழுவினரின் கடும் முயற்சியில் இந்தியாவின் அணுகுண்டு வெடிப்பு சோதனையானது 1998ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதிதான் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
- அதன் காரணமாக உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது நாடாக இணைந்தது. மேலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட திரிசூல் ஏவுகணை மற்றும் ஹன்சா-3 என்னும் அதிநவீன விமானம் ஆகியவையும் இதே மே 11ம் தேதிதான் முதல் முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- எனவே, மேற்கண்ட காரணங்களுக்காக 1999ம் ஆண்டு முதல் மே 11ம் தேதியானது தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.