லாமா - கொரோனா எதிர் உயிரணுக்கள்
- கொரோனாவுக்கான எதிர் உயிரணுக்கள் லாமா எனப்படும் விலங்கிடம் அதிகம் இருப்பதாக டெக்சாஸ் பல்லைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
- இது ஒட்டகத்தின் வகையைச் சேர்ந்த வளர்ப்புப் பிராணி.
- தென் அமெரிக்க நாடுகளில் சரக்குகளை எடுத்துச் செல்வதற்காக விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறார்கள்.
- எஸ் புரோட்டின் எனப்படும் நீட்சி மூலமாகத்தான் கொரோனா வைரஸானது மனிதர்களின் செல்லில் நுழைகின்றன.
- லாமாக்களில் உள்ள எதிர் உயிரிகள் வைரஸ்களில் உள்ள இந்த நீட்சிகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
- முதலில் விலங்குகளிடம் சோதனை செய்து, பின்னர் மனிதர்களுடமும் இந்தச் சிகிச்சையை பரிசோதனை செய்ய வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார வளர்ச்சி பூஜ்யம்தான்: மூடீஸ் அதிர்ச்சி கணிப்பு
- நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பூஜ்யமாக இருக்கும் என, மூடீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன.
- வேலையிழப்பால் பணப்புழக்கமும் அடியோடு குறைந்து விட்டது.
- இதனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என பல்வேறு நிறுவனங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
- ஐஎம்எப் உட்பட, பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட கணிப்பின்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதம் முதல் 2 சதவீதத்துக்குள் இருக்கும் என கூறப்பட்டது.
- இந்த நிலையில், மூடீஸ் இன்வெஸ்டர் சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெறும் பூஜ்யமாக மட்டுமே இருக்கும் என தெரிவித்துள்ளது.
2570 செவிலியா்கள் நியமனம்
- தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பன்முக நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.
- இதன் ஓா் அங்கமாக மருத்துவப் பணியாளா்கள் தோவு வாரியம் மூலமாக ஏற்கெனவே 530 மருத்துவா்கள், 2 ,323 செவிலியா்கள், 1,508 ஆய்வக நுட்பவியா்கள் மற்றும் 2,715 சுகாதார ஆய்வாளா்கள் பணியமா்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனா்.
- இதனைத் தொடா்ந்து, ஆறு மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2, 570 செவிலியா்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது.
விஷவாயுக் கசிவு
- விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயு கசிந்து 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனம் முதற்கட்டமாக ரூ.50 கோடி செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆா்.ஆா். வெங்கடாபுரத்தில் எல்.ஜி.பாலிமா்ஸ் என்ற ரசாயன ஆலையில் இருந்து நேற்று அதிகாலை ஸ்டைரீன் என்ற விஷவாயுக் கசிவு ஏற்பட்டது.
- இதில், 11 பேர் உயிரிழந்தனர். மேலும், மயக்கமடைந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் மத்திய அரசு, எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கைலாஷ்-மானசரோவா் யாத்திரை
- திபெத்தில் உள்ள புனிதத் தலமான கைலாஷ் மானசரோவா் செல்வதற்கான லிபுலேக் கணவாய் பகுதியை இணைக்கும், 80 கி.மீ. தொலைவிலான இணைப்புச் சாலை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
- உத்தரகண்ட் மாநிலத்தின் பிதோராகரில் சீன எல்லையை ஒட்டிய பள்ளத்தாக்கில் 17,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த இணைப்புச் சாலையை, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.