உலக பத்திரிகைச் சுதந்திர தினம் (World Press Freedom Day)
- பத்திரிகை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஐக்கிய நாடுகள் சபையும் இதனை அங்கீகரித்து 1973ஆம் ஆண்டு மே 3 ஐ உலக பத்திரிகை சுதந்திர தினமாக அறிவித்தது.
- அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும் என யுனெஸ்கோ கூறுகிறது. மேலும் பத்திரிகையையும், பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்கிறது.
திறன்மிகு குப்பைக் கூடை
- மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தினால் (IIT - Indian Institute of Technology) ஆதரிக்கப் படும் "அந்தாரிக்ஸ்" என்ற ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமானது "திறன்மிகு குப்பைக் கூடை அமைப்பை" வடிவமைத்துள்ளது.
- இது மருத்துவமனைகள், அதன் வளாகங்கள், பொது இடங்கள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட மண்டலங்களில் உற்பத்தியாகும் கழிவுகளின் மூலம் கோவிட் - 19 பரவலைத் தடுப்பதற்காகப் பணியாற்றுகின்றது.
- “ஏர் பின்" அல்லது காற்றுக் கூடை என்று அழைக்கப்படும் இந்த கூடையானது ITமதராஸினால் வடிவமைக்கப் பட்டுள்ளது. இது திறன் பேசிகளின் மூலம் கழிவுகள் சேரும் நிலைகளின் மீது இயந்திரத்தினாலான கண்காணிப்பை அனுமதிக்கின்றது.
மலர் தூவி முப்படையினர் நன்றி தெரிவிப்பு
- கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோர் முன்கள போர் வீரர்களாக இருந்து நாட்டிற்கு சேவை செய்து வருகின்றனர்.
- அவர்களுக்கு முப்படை சார்பில் நன்றி தெரிவிக்கப்படும் என முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார்.இதன்படி, நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் போர் விமானங்கள் அணிவகுப்பு நடத்தின.
- தொடர்ந்து, போலீசாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. டெல்லி ராஜபாதை மீது சுகாய், மிக்-29, ஜாகுவார் போர் விமானங்கள் அணிவகுப்பு நடத்தின.
- இதே போல, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமானப்படை விமானங்கள் அணிவகுப்பு நடத்தியும், ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவியும் மரியாதை தெரிவிக்கப்பட்டது. முக்கிய மருத்துவமனைகள் முன்பாக பேண்ட் வாத்தியங்கள் வாசித்தும் முப்படையினர் மரியாதை தெரிவித்தனர்.
- சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடலோர காவல்படை கப்பல்கள் கரையருகே நிலைகொண்டு கொரோனா போர் வீரர்களை கவுரவித்தன. கடற்படையின் மேற்கு பிரிவைச் சோந்த 5 கடற்படை கப்பல்களிலும், கிழக்கு பிரிவைச் சேர்ந்த 2 போர் கப்பல்களிலும் இரவு 7.30 மணி முதல் 11.59 மணி வரை விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டது.
- அனைத்து கப்பல்களிலும் இரவு 7.30 மணியளவில் சைரன் ஒலியுடன், ஒளிப் பிழம்புகள் எரியச் செய்யப்பட்டன.
நானோ - நுண்ணுயிர் கிருமி நாசினி
- பஞ்சாப்பின் மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை (INST - Institute of nano science and technology) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்ணிற்குப் புலப்படும் ஒளிக்கு உள்ளாகக் கூடிய சூழலின் கீழ் ஆடைகளின் மீதான கிருமி நாசினிகளுக்காக குறைந்த செலவு கொண்ட உலோகமற்ற ஒரு நானோ பொருளைக் கண்டறிந்துள்ளனர்.
- இது வெள்ளி மற்றும் இதர உலோகத்தினாலான பொருட்களுக்கு மாற்றாகவும் விளங்குகின்றது.
அந்நியச் செலாவணி சரிவு
- ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்துமதிப்பு குறைந்து போனதையடுத்து அந்நியச் செலாணி கையிருப்பு ஏப்ரல் 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11 கோடி டாலா் குறைந்து 47,945 கோடி டாலராக இருந்தது.
- இது, இதற்கு முந்தைய வாரத்தில் 309 கோடி டாலா் அதிகரித்து 47,956 கோடி டாலராக காணப்பட்டது. மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச்செலாவணி சொத்து மதிப்பு 32 கோடி டாலா் குறைந்து 44,156 கோடி டாலராக இருந்தது.
- அதேசமயம், தங்கத்தின் கையிருப்பு 22 கோடி டாலா் உயா்ந்து 3,290 கோடி டாலரைத் தொட்டது. சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 60 லட்சம் டாலா் குறைந்து 142 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 80 லட்சம் டாலா் சரிந்து 357 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.
- கடந்த மாா்ச் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் அந்நியச் செலாவணி கையிருப்பானது 569 கோடி டாலா் அதிகரித்து வரலாற்றில் முதல்முறையாக 48,273 கோடி டாலரைத் தொட்டது.
- கடந்த 2019-20-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏறக்குறைய 6,200 கோடி டாலா் அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
நானோ பிளிட்ஸ் முப்பரிமாணம் (NanoBlitz-3D)
- துகள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மையமானது (ARCI - International Advanced Research Centre for Powder Metallurgy and New Materials) "NanoBlitg 3D" (நானோ பிளிட்ஸ் முப்பரிமாணம்) என்ற ஒரு மேம்படுத்தப்பட்ட கருவியைக் கண்டறிந்துள்ளது.
- இது பல நிலை கொண்ட கலவைகள், கலவைகள் மற்றும் பல நிலை கொண்ட பூச்சுகள் போன்ற பொருட்களின் நானோ இயந்திரவியல் பண்புகள் அளவிடுவதற்காகப் பயன்படுத்தப் படுகின்றது.
- இது தரப்பட்ட பொருளின் கடினத் தன்மை மற்றும் மீள் தொகுதி ஆகியவற்றை அளவிடும் திறன் கொண்டது.
மைக்கோபாக்டீரியம் MW
- அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமானது கோவிட் - 19 தொற்றிற்கு எதிராக தொழுநோய் எதிர்ப்பு மருந்துச் சோதனைகளைத் தொடங்கியுள்ளது.
- இந்த மருந்துச் சோதனையானது மைக்கோபாக்டீரியம் MW என்பதின் உதவியுடன் மேற்கொள்ளப் படுகின்றது. * இது வெப்பத்தின் மூலம் அழிக்கப்பட்ட ஒரு பாக்டீரியா ஆகும்.