நியூயார்க் பொருளாதார மீட்பு குழு
- அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமைக்கப்பட்டுள்ள ‘Blue- Ribbon Commission’ – இல் புலிட்சர் பரிசு வென்ற இந்தியரான சித்தார்த்தா முகர்ஜி, சதிஷ் திரிபாதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- இந்த குழுவின் தலைவர், முன்னாள் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ எரிக் ஸ்மிட் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்பீர் சிங்
- இந்திய ஹாக்கி அணி 1948, 1952, 1956 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற போது அந்த அணியில் இடம்பெற்றிருந்த இந்திய ஹாக்கி வீரருமான பல்பீர் சிங் டோசன்ஜ் (Balbir Singh Dosanjh) சமீபத்தில் காலமானார்.
- விளையாட்டு துறையில் பத்ம ஸ்ரீ விருது வாங்கிய முதல் நபர், இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேலும்,இந்திய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான சென்னையை சேர்ந்த சண்முகம் சமீபத்தில் காலமானார்.
தேசிய அறிவியல் நாள்
- அப்துல் கலாம் தங்கள் நாட்டிற்கு வருகை தந்த மே 26-ம் தேதியை தேசிய அறிவியல் நாளாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
- கடந்த 2006ம் ஆண்டு மே 26-ம் தேதி, அப்துல் காலம் அவர்கள் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தேசிய அறிவியல் தினம்:
சா். சி. வி. ராமன் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாடு உலகுக்கு அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமாக இந்தியாவில் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.உலக தைராய்டு தினம்
- தைராய்டு நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே 25 ஆம் தேதி அன்று உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- மேலும் இதே நாளில் சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினமும் அனுசரிக்கப்படுகிறது.
ANTIA
- அண்டார்டிக் பிராந்தியத்தில் பனியில் இருந்து அதிக ஆற்றல் துகள்கள் வெடிப்பதை நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- இந்த துகள்கள் நமது பிரபஞ்சத்திற்கு இணையான மற்றோரு பிரபஞ்சத்திற்கு ஆதாரம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
- ANTIA (Antarctic Impulsive Transient Antenna) - அண்டார்டிக் உந்துவிசையாலான நிலையற்ற ஆண்டெனா அண்டார்டிக் பகுதியின் பனிக்கட்டிகளால் வெளியேற்றப் படும் ரேடியோ கதிர் துடிப்புகளைக் கண்டறியும்.
- அஸ்காரியன் விளைவு காரணமாக பனியில் உள்ள நியூட்ரினோக்கள் ரேடியோ கதிர் துடிப்புகளை உருவாக்குகின்றன.
- அஸ்காரியன் விளைவு என்பது ஒரு துகள் ஒரு அடர்த்தியான மின்சார ஊடகத்தில் ஒளியை விட வேகமாக பயணிக்கும் ஒரு நிகழ்வு ஆகும்.
- இது நாசாவின் நியூட்ரினோக்களுக்கான முதல் ஆய்வகமாகும்.
- நியூட்ரினோக்கள் மட்டுமே தன் வீரியம் குறையாமல் பூமியை வந்து சேரும் ஒரே துகளாகும்.
- நியுட்ரினோக்கள் நமக்கு எந்த வித ஆபத்தையும் தராத உயர்சக்தி துகள்களாகும். இது யாரும் அறியா வண்ணம் பெருமளவில் திடப் பொருட்களின் வழியே ஊடுருவிச் செல்கின்றது.
- நியுட்ரினோக்கள் தொடர்ச்சியாக புவியைத் தாக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. மேலும் 100 ட்ரில்லியன் நியுட்ரினோக்கள் ஒவ்வொரு நொடியும் நமது உடலின் வழியே ஊடுருவிச் செல்கின்றது. அரிதாகவே அவை ஏதேனும் ஒரு நிறையின் மீது எதிர்ச் செயலாற்றுகின்றது.
- ஆனால் ஒருவேளை அவை ஏதேனும் ஒரு அணுவைத் துளைத்து அதனுள் உட்சென்றால், நாம் உணரும் வகையில் இருக்கும் இரண்டாம்நிலை மின்னேற்றத் துகள்களின் பொழிவைத் தூவுகின்றது.
- அது நம்மை அத்துகள்கள் இப்பிரபஞ்சத்தில் எங்கிருந்து வருகின்றன என்பதை ஆராயச் செய்திடும்.
புதிய தாவர இனங்கள் - மேற்குத் தொடர்ச்சி மலை
- கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு முனையின் பசுமையான வனப்பகுதிகளில் மூன்று புதிய தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு
- மைர்டேசி அல்லது பன்னீர் கொய்யா குடும்பத்தின் யூஜீனியா ஸ்பேரோகார்பா 160) (Eugenia sphaerocarpa of the Myrtaceae or Rose apple family) . 66&TWILD பகுதியில் (கேரளா) உள்ள மலபார் வனவிலங்கு சரணாலயத்தில் காணப்படுகிறது.
- சீத்தாப்பழத்தின் அன்னோனேசி குடும்பத்தின் கோனியோதலாமஸ் செரிசியஸ் வகை (Goniathalamus sericeus of the Anniartaceae amily of custard apple) - தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வனவிலங்குச் சரணாலயத்தில் காணப் படுகிறது.
- மெலஸ்டோமாடேசியின் மெமசிலோன் நெர்வோசம் (Marmecylon nervosum of the Melastemataceae).
பீகாரின் புவிசார் குறியீடு கொண்ட தயாரிப்புகள்
- ஷாஹி லிச்சி, கட்டர்னி அரிசி, சர்தலு / ஜர்தலு மாம்பழம் மற்றும் மாகஹி வெற்றிலை ஆகியவை பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உணவுப் பொருட்கள் ஆகும்.இவற்றிற்குப் புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
- பீகாரின் முசாபர்பூர், வைஷாலி, சமஸ்திபூர், சம்பாரன், பெகுசராய் ஆகிய மாவட்டங்கள் ஷாஹி லிச்சிப் பழத்தின் சாகுபடிக்குச் சாதகமான காலநிலையைக் கொண்டுள்ளன.
- நாட்டில் வளர்க்கப்படும் லிச்சியில் 40 சதவீதத்தைப் பீகார் உற்பத்தி செய்கின்றது இதில் 60 சதவீதம் ஷாஹி லிச்சிகள் ஆகும்.
- பாகல்பூரின் (பீகார்) சர்தலு மாம்பழம் அதன் தனித்துவமான மணம் மூலம் உலகில் பிரபலமானது.