Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 May 2020 5th May 2020


ஜூன் மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசம்

  • தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில், கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.
  • தமிழகத்தில் யாரும் பட்டினியால் வாடவில்லை என்ற நிலையை அரசு உருவாக்கி இருக்கிறது.
  • தொழிலாளர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் செய்து இருக்கிறோம்.
  • சுமார் 36 லட்சம் பேருக்கு கருணைத் தொகை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
  • அவர்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
  • அனைத்து அரிசி வாங்குகின்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் கொடுக்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது.
  • இந்த மாதமும் (மே) மாதமும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஜூன் மாதமும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

'இ-நாம்' வேளாண் திட்டம்

  • கடந்த 2016ல், நாடு முழுதும், 21 மண்டிகள் (சந்தைகள்), இதில், இணைந்தன.
  • மார்ச் 25ல் ஊரடங்கு துவங்கியதால், விவசாயிகளால், வேளாண் விளைபொருட்களை விற்பனைக்கூடங்கள் மற்றும் சந்தைகளுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை.
  • விவசாயிகள் பலர் 'இ நாம்' மூலம் தங்கள் விளைபொருட்கள் விற்பது அதிகரித்தது.
  • வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் 27 மண்டிகள் உட்பட நாடு முழுதும், ஊரடங்கு காலத்தில், 200 மண்டிகள், 'இ-நாம்' நடைமுறையில் இணைந்தன.
  • இதன் மூலம், இதுவரை 785 மண்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
  • இந்த மாதத்திற்குள், இதை ஆயிரம் மண்டிகளாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • 'ஒரே நாடு - ஒரே சந்தை' என்ற குறிக்கோளை 'இ-நாம்' செம்மையாக்குகிறது.
  • விளைபொருளுக்கு, நாட்டில் எந்த இடத்தில் கூடுதல் விலை கிடைக்கிறதோ, அங்கு விவசாயிகள் விற்க முடிகிறது.
  • இதுவரை 1.66 கோடி விவசாயிகளும், 1.28 லட்சம் வர்த்தகர்களும், ஆயிரம் வேளாண் உற்பத்தியாளர் சங்கத்தினரும், இதில் இணைந்துள்ளனர்.

ஊரடங்கு நீட்டிப்பு - தெலுங்கானா அரசு அதிரடி

  • இந்தியாவிலேயே முதல் மாநிலம் மே 29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு தெலுங்கானா அரசு அதிரடி
  • மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை மட்டுமே ஊரடங்கு உத்தரவை நீடித்த நிலையில், தெலுங்கானா மாநில அரசு மே 29-ஆம் தேதி வரை தங்கள் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
  • தெலுங்கானாவில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி புதிதாக 11 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
  • இதன் மூலம் அங்கு மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,096 என்ற அளவில் உள்ளது.
  • இருப்பினும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது அந்த மாநில அரசு.

வட கொரிய அதிபருக்கு ரஷியா விருது

  • 1939-ஆம் ஆண்டு தொடங்கிய இரண்டாம் உலகப் போா் 1945-ஆம் ஆண்டு நிறைவடைந்தது.
  • போா் நிறைவடைந்ததன் 75-ஆம் ஆண்டையொட்டி மே 9-ஆம் தேதி ரஷியத் தலைநகா் மாஸ்கோவில் சிறப்பு அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • ஆனால், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அந்த அணிவகுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
  • இந்தச் சூழலில், இரண்டாம் உலகப்போரின்போது வட கொரியப் பகுதியில் போரிட்டு உயிரிழந்த ரஷிய வீரா்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் செயல்பட்டதற்காக அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன்னுக்கு ரஷியா சாா்பில் விருது வழங்கப்பட்டது.
  • அந்த விருது வழங்கும் விழா வட கொரியத் தலைநகா் பியாங்யாங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  • அந்த விழாவில் வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன் பங்கேற்கவில்லை.
  • அவருக்குப் பதிலாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் ரி சாங் குவான் அந்த விருதைப் பெற்றுக் கொண்டாா்.
  • வட கொரியாவுக்கான ரஷிய தூதா் அலெக்ஸாண்டா் மாத்செகோரா அந்த விருதை வழங்கினாா்.

'புலிட்ஸா்' விருது

  • ஜம்மு-காஷ்மீரைச் சோந்த செய்தி புகைப்படக் கலைஞா்கள் மூவருக்கு 2020-ஆம் ஆண்டுக்கான 'புலிட்ஸா்' விருது வழங்கப்பட்டுள்ளது.
  • சான்னி ஆனந்த், முக்தாா் கான், தாா் யாசின் ஆகிய அந்த மூவரும் 'அசோஸியேட்டட் பிரஸ்' செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞா்களாக பணியாற்றி வருகின்றனா்.
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு காலத்தின்போது கள நிலவரத்தை பிரதிபலிக்கக் கூடிய வகையிலான சிறந்த புகைப்படங்களை எடுத்ததற்காக அவா்கள் புலிட்சா் விருது மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளனா்.
  • இதழியல், கலை, புனைகதை, இசை உள்ளிட்ட துறைகளின் பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றுவோருக்காக 21 பிரிவுகளில் கடந்த 1917-ஆம் ஆண்டு முதல் புலிட்ஸா் விருது வழங்கப்பட்டு வருகிறது.
  • அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இந்த விருதை பெறுவோருக்கு சான்றிதழும், சுமாா் ரூ.11.35 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.

காஷ்மீர் குங்குமப் பூ

  • இதற்கு புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
  • இது ஜம்மு காஷ்மீரின் கரேவாஸ் (உயர்நிலப் பகுதிகளில்) பயிரிடப்பட்டு, அறுவடை செய்யப் படுகின்றது.
  • சராசரி கடல் மட்ட அளவில் இருந்து 1600மீ - 1800 மீ உயரத்தில் பயிரிடப்படும். உலகின் ஒரே குங்குமப்பூ வகை இதுவாகும்.
  • இது “நீல மாணிக்கம் மற்றும் குங்குமப் பூவின் நிலம்" என்று சிறப்பாக அறியப்படும் கிஸ்த்துவார் பகுதியில் வளர்க்கப்படுகின்றது.
  • இது கிமு 1 ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவிலிருந்து இடம் பெயர்ந்த மக்களால் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • இது பண்டைய சமஸ்கிருத இலக்கியத்தில் (அமரகோசரா) "பகுகாம்" என்று அறியப்படுகின்றது.

e-RMB - டிஜிட்டல் நாணயம்

  • சீனாவானது, தனது 4 நகர்ப்புறப் பகுதிகளில் டிஜிட்டல் யுவான் நாணயத்தைசோதனை முயற்சியாகத் தொடங்கியுள்ளது.
  • டிஜிட்டல் நாணயத்தைத் தொடங்கிய முதலாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற சாதனையை இது அடைய இருக்கின்றது.
  • சீனாவின் மக்கள் வங்கி மட்டுமே இந்த டிஜிட்டல் யுவான் நாணயத்தை விநியோகிக்க இருக்கின்றது.
Share with Friends