CoAST இந்தியா (ஒன்றிணைதல்/கோவிட் நடவடிக்கை உதவிக் குழு)
- இது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நீண்ட நெடிய பயணம் குறித்து நிகழ் நேரத்தில் அவர்களின் பயணத்தைக் காட்டும் வகையில் இந்திய வரைபடத்துடன் கூடிய புவியியல் தகவல் அமைப்பால் செயல்படுத்தப்படும் ஒரு முகப்புப் பலகையாகும்.
- இது குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள வனச் சூழலியல் பாதுகாப்பு அமைப்பைத் தனது முக்கியச் செயல்பாட்டு அமைப்பாகக் கொண்டு இந்திய ஆய்வு மையத்தினால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சட்டப்படியான வாழ்வகத்தின் வரையறை
- 2020 ஆம் ஆண்டு ஆணையானது எந்தவொரு நபர் கடந்த 15 ஆண்டுகளாக ஜம்மு ஜாஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில் வசிக்கின்றாரோ அல்லது கடந்த ஏழு ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில் படித்து, அங்குள்ள கல்வி நிறுவனத்தில் 10வது 12வது தேர்வை எதிர் கொண்டாரோ அல்லது நிவாரண மற்றும் புனர்வாழ்வு ஆணையினரால் புலம்பெயர்ந்தோராகப் பதிவு செய்யப்பட்ட நபரோ அவரைச் சட்டப்படியான வாழ்வகத்தைக் கொண்டு உள்ள நபர் என்று வரையறை செய்கின்றது.
- மேலும் இது அகில இந்தியப் பணி, பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய அரசின் தனிச் சுதந்திர அமைப்புகள், பொதுத் துறை வங்கிகள், சட்டப்பூர்வ அமைப்புகளின் அதிகாரிகள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மையங்கள் உள்ளிட்ட பணிப் பிரிவுகளில் "மொத்தம் 10 ஆண்டுகள் அங்கு தங்கியிருந்துப் பணி புரிந்துக் கொண்டு இருக்கும் மத்திய அரசு அலுவலர்களின் குழந்தைகள் அனைவரையும் சட்டப்பூர்வ வாழ்வகத்தைப் பெறத் தகுதியுடையவர்" என்று கூறுகின்றது.
- மேலும் சட்டப்பூர்வ வாழ்வகம்" என்ற அங்கீகாரமானது "பணி தொடர்பாக (அ) வணிகம் அல்லது இதர தொழில்சார் அல்லது தொழில்முறை காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீருக்கு வெளியே வாழும் இந்த ஒன்றியப் பிரதேச பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் பொருந்தும். ஆனால் இவர்களது பெற்றோர்கள் மேலே வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
WFIRST
- அமெரிக்க விண்வெளி நிறுவனமானது தனது முதலாவது தலைமை வானியல் அறிஞரான நான்சி கிரேஸ் ரோமன் என்பவரின் நினைவாக தனது பரந்த வெளி அகச்சிவப்பு ஆய்வுத் தொலைநோக்கிக் கருவிக்கு (WFIRST - Wide-Field Infrared Survey Telescope) மறுபெயரிட்டுள்ளது.
- இந்த அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கியானது நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளித் தொலைநோக்கி என்றறியப்பட இருக்கின்றது. இது 2015 ஆம் ஆண்டில் செலுத்தப்பட இருக்கின்றது.
- நான்சி கிரேஸ் ரோமன் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியின் தாய் என்றும் அறியப்படுகின்றார்.
இந்தியாவில் வெட்டுக் கிளிகள் தாக்குதல்
- மிக அதிக அளவிலான பாலைவன வெட்டுக்கிளித் தொகுதியானது பாகிஸ்தான் வழியாக இந்தியாவில் உள்ள இராஜஸ்தானிற்குள் நுழைந்துள்ளது.
- மிகப் பரந்த வெட்டுக்கிளித் தொகுதியானது 2019 ஆம் ஆண்டு ஈரானில் தொடங்கி, அதன் பிறகு பாகிஸ்தானிற்கு இடம்பெயர்ந்து, தற்பொழுது இந்தியாவில் உள்ள இராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குள் நுழைந்துள்ளது.
- இந்த வெட்டுக் கிளித் தாக்குதலானது இந்தியாவின் வேளாண் பொருளாதாரத்தைச் சீரழித்து இந்தியாவின் உணவுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்க இருக்கின்றது.
- வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பானது வெட்டுக் கிளிகளைக் கொல்லுவதற்கு வேண்டி இரசாயனங்களைத் தெளிப்பதற்கு ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தப் பரிந்துரைத்துள்ளது.
சேல்கி பரிந்துரைக்கப்பட்ட காப்புக் காடுகள் (PRF)
- சமீபத்தில் தேசிய வனவிலங்கு வாரியமானது ஒரு திறந்தவெளி நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக வேண்டி சேல்கி பரிந்துரைக்கப்பட்ட காப்புக் காடுகளிலிருந்து (PRF - Proposed Reserve Forest) 98.59 ஹெக்டேர் நிலத்தை மாற்றுவதற்கான ஒரு பரிந்துரை குறித்து விவாதித்துள்ளது.
- சேல்கி என்பது மேலை அசாமில் நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக திஹாங் - பட்கைய் யானைகள் காப்பகத்தின் ஒரு பகுதியாகும்.
- இந்தக் காப்பகமானது அசாமின் திப்ருகார்க் மற்றும் டின்சுகியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளது.
- திஹாங் - பட்கைய் இந்தியாவில் மிகப் பரந்த வெப்ப மண்டல தாழ்நில மழைக்காடுகளை கொண்டு இருக்கின்றது.
அனல் காற்று
- ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல மாவட்டங்கள் உள்பட வட இந்தியாவின் பல பகுதிகள் கடுமையான அனல் காற்றினை எதிர்கொள்கின்றன.
- இங்கு 45° செல்ஷியஸிற்கும் மேல் வெப்பநிலை அல்லது வழக்கமான வெப்பநிலையை விட 5' செல்ஷியஸ் அதிகமான வெப்பநிலை நிலவுகின்றது. அனல் காற்று என்பது கோடைக் காலத்தின் போது நிகழும் வழக்கமான மிக அதிகமான வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை கொண்ட ஒரு காலமாகும்.
- இந்திய வானிலை ஆய்வு மையமானது அனல் காற்றிற்காகப் பின்வரும் தகுதிநிலைகளை வழங்கியுள்ளது.
- ஒரு பகுதியின் மிக அதிகபட்ச வெப்பநிலைச் சமவெளிகளுக்கு 40° செல்ஷியஸ் என்ற அளவிலும் மலைப் பகுதிகளில் 30° செல்ஷியஸ் என்ற அளவிலும் செல்லும் வரை அது அனல் காற்றாகக் கருதப்பட மாட்டாது.
- வழக்கமான மிக அதிகமான வெப்பநிலை 45° செல்ஷியஸ் ஆக உள்ள போது அல்லது வழக்கமான மிக அதிக வெப்பநிலைக்கு மாறாக வெப்பநிலை உயரும் போது, அது அனல் காற்றாக அறிவிக்கப் படுகின்றது.
ராம்கின்கர் பாய்ஜ்
- மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் தேசிய நவீனக் கலை கூடமானது "ராம்கின்கர் பாய்ஜ், அமைதியான மாற்றம் மற்றும் வெளிப்பாடுகளின் (உணர்ச்சிகளின்) மூலம் பயணம்" என்ற தலைப்பு கொண்ட ஒரு மெய்நிகர் சுற்றுலாவை நடத்தியுள்ளது.
- இது 2020 ஆம் ஆண்டு மே 26 அன்று ராம்கின்கார் பாய்ஜ் அவர்களின் 115வது பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காக நடத்தப்பட்டது.
- ராம்கின்கர் பாய்ஜ், (1906 - 1980) என்பவர் புகழ்பெற்ற சிற்பக் கலை வல்லுநர், ஓவியர் மற்றும் வரைபட விளக்கக் கலைஞர் ஆவார்.
- இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள பான்கூராவில் பிறந்தார். நந்தலால் போஸ் மற்றும் பெனோடேபெஹரி முகர்ஜி ஆகியோருடன் இணைந்து இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு நவீனக் கலைக்கான முக்கிய மையங்களில் ஒன்றான சாந்தி நிகேதனை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.