Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 May 2020 25th May 2020

உலகில் PPE உற்பத்தியாளர்

  • உலகில் தனிநபர் பாதுகாப்பு உபகரணத்தின் (PPE - Personal Protective Equipment) இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தியாளர் நாடு இந்தியா ஆகும்.
  • உலகில் PPE உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு சீனா ஆகும்.
  • தற்பொழுது இந்தியா ஒவ்வொரு நாளும் 2.06 இலட்சம் PPE உபகரணங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றது.
  • சமீபத்தில் ஜவுளிக் குழுவானது PPE மீதான செயற்கை இரத்தத்தை உட்செலுத்தல் என்ற ஒரு சோதனையைத் தொடங்கியுள்ளது.

பணி நேரத்தை அதிகரிப்பதற்கான அவசரச் சட்டம்

  • மத்திய அரசானது தொழிலாளர்களின் பணி நேரங்களை மாநில அரசுகள் தங்களின் தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்ள அனுமதியளித்திட வேண்டி ஒரு அவசரச் சட்டத்தை இயற்ற உள்ளது.
  • இந்த அவசரச் சட்டமானது பணியாளர்களின் பற்றாக்குறை என்ற பிரச்சினையைக்களைய இருக்கின்றது.
  • இது நிறுவனங்கள் சமூக விலகலைக் கடைபிடிக்க வழிவகை செய்கின்றது.
  • மேலும் இது தொழில்சார் பாதுகாப்பு, பணி நிலைமை மற்றும் சுகாதாரம் குறித்த நெறிமுறைகளையும் செயல்படுத்த இருக்கின்றது. இந்த நெறிமுறையானது பணி நேரங்களை அறிவிக்க மாநிலங்களுக்கு உதவ இருக்கின்றது. தற்பொழுது, சட்டத்தின் படி பணியாளர்களின் குறிப்பிடப்பட்ட பணி நேரம் ஒருநாளைக்கு 8 மணி நேரமாகும்.
  • மத்தியப் பட்டியலில் உள்ள சட்டங்களை மாநில அரசுகள் திருத்த முடியாது.
  • மாநில அரசுகள் மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல் ஆகியவற்றில் உள்ள சட்டங்களின் மீது மட்டுமே திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

புதிய நீர் வழிகள்

  • வங்க தேசத்தில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தக நெறிமுறையின் இரண்டாவது ஒப்பந்தத்தில் இந்தியாவும் வங்க தேசமும் கையெழுத்திட்டுள்ளன.
  • இது பூடான் சரக்குகள், கற்சில்லுகள் மற்றும் வடகிழக்கு மாநிலத்தின் சரக்குகளை வங்க தேசத்திற்கு ஏற்றுமதி செய்ய வேண்டி உதவ இருக்கின்றது.
  • இது வங்கதேசம் மற்றும் கீழை அசாமின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்ய இருக்கின்றது.
  • இந்த 2 நாடுகளும் 4 புதிய வழிகளுடன் திரிபுராவில் கோமதி நதியின் மீது சோனமுரா-தௌத்கண்டி வழி மற்றும் வங்க தேசத்தில் ராஜ்சஹி - துளியன் - ராஜ்சஹி வழி ஆகியவற்றை இந்தியா - வங்கதேச நெறிமுறை வழிகளின் பட்டியலில் சேர்ந்துள்ளது.
  • மையா, கோலாகாட், சோனமுரா, துளியன் மற்றும் ஜோகிகோபா ஆகியவை இந்தியாவிடம் உள்ள 5 புதிய வழிப் பாதைத் துறைமுகங்களாகும். வங்க தேசத்திடம் சுல்தான்கன்ஞ், ராஜ்சாஹி, சில்மாரி, பகதூராபாத் மற்றும் தௌத்கண்டி ஆகிய வழிப் பாதைத் துறைமுகங்கள் உள்ளன.
  • ஜோகிகோபாவின் இணைப்பானது மேகாலயா, பூடான் மற்றும் அசாம் ஆகியவற்றோடுத் தொடர்பை ஏற்படுத்த உதவ இருக்கின்றது.
  • தற்பொழுது இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையே வழிப் பாதை துறைமுகங்கள் 6 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றன. இந்தியாவிடம் ஹால்தியா, கொல்கத்தா, பாண்டு, கரீம்கஞ்ச், துப்ரி மற்றும் சில்காட் ஆகியவை உள்ளன. வங்க தேசத்திடம், குல்னா, நாராயண்கஞ்ச், சிராஜ்கஞ்ச், மோங்லா, பங்கோன் மற்றும் அசுகஞ்ச் ஆகியவை உள்ளன.

பொது நிதியியல் விதிகள்

  • மத்திய அரசானது ரூ.200 கோடிக்குக் குறைவான மதிப்பு கொண்ட சரக்குகள் மற்றும் சேவைகளை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதை உறுதி செய்வதற்காக பொது நிதியியல் விதிகளை (GFR- General Financial Rules) திருத்தியுள்ளது.
  • இதற்காக GFR 2017 ஆனது மத்திய அரசினால் திருத்தப் பட்டுள்ளது.
  • புதிய திருத்தத்தின்படி, இனி உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் ரூ.200 கோடி மதிப்பு வரையிலான அரசாங்கக் கொள்முதலில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாது.
  • "உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் அனுமதிக்கப்பட மாட்டாது" என்பது உள்நாட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காக வேண்டி ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு அந்நிய முதலீட்டைத் தடை செய்தல் என்பதாகும்.

புவிசார் தேங்காய் நார் ஜவுளிகள்

  • பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனாவின் மூன்றாவது கட்டத்தில், ஊரக சாலை வளர்ச்சியில் புவிசார் தேங்காய் நார் ஜவுளிகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இது தேசிய ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆணையத்தினால் மேற்கொள்ளப் படுகின்றது. புவிசார் தேங்காய் நார் ஜவுளிகள் மட்கிய நிலை கொண்டதாக உருமாறுகின்றன.
  • இது மண்ணை வளம் கொண்டதாக மாற்றுகின்றது.
  • பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனாவின் மூன்றாம் கட்ட நிலையானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.
  • இதன் நோக்கம் கிராமிய வேளாண் சந்தைகள், மருத்துவமனைகள் மற்றும் உயர்கல்வி இடைநிலைப் பள்ளிகள் ஆகியவற்றை இணைப்பதாகும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதி (ESA)

  • மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சுழல் பாதுகாப்புப் பகுதி குறித்து முன்கூட்டிய அறிவிப்பு வெளியிடுவதைத் துரிதப்படுத்த 6 மாநிலங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
  • கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகியவை இந்த 6 மாநிலங்களாகும். மத்திய அரசானது மேற்குத் தொடர்ச்சி மலையின் பன்முகத் தன்மையைப் பாதுகாப்பதற்காக டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஓர் உயர் மட்டப் பணிக்குழுவை அமைத்தது.
  • அதற்கு முன்பு காட்கில் தலைமையில் ஒரு குழுவானது அமைக்கப் பட்டிருந்தது.
  • கஸ்தூரி ரங்கன் அறிக்கையானது மேற்குத் தொடர்ச்சி மலையின் 37% பகுதியை ESA என்ற பகுதியின் கீழ் கொண்டு வர முயல்கின்றது. காட்கில் அறிக்கையானது இதனை 64% (ESA - Ecologically Sensitive Area) ஆகப் பரிந்துரைத்திருந்தது. ESAகள் என்பவை பாதுகாக்கப்பட்ட பகுதிகள், தேசியப் பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவற்றைச் சுற்றிலும் 10 கிலோ மீட்டருக்குள் இருக்கும் ஒரு பகுதியாகும்.
  • ESA ஆனது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 என்ற சட்டத்தின் கீழ் மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தினால் அறிவிக்கப் படுகின்றன.

ஒடிசாவில் ஒப்பந்தப் பண்ணையம்

  • ஒடிசா மாநில அரசானது ஒப்பந்தப் பண்ணையத்திற்காக முதலீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் ஒரு ஒப்பந்தம் ஒன்றில் ஈடுபட அனுமதிக்கும் வகையில் ஓர் அவசரச் சட்டத்தை இயற்றியுள்ளது.
  • இது வேளாண் பதப்படுத்துல் ஏற்றுமதி அல்லது வர்த்தக அலகுகள் (மொத்த கொள்முதலாளர்கள்) விவசாயிகளிடமிருந்து குறிப்பிட்ட அளவுள்ள வேளாண் பொருட்களை முன்கூட்டியே ஒப்புக் கொள்ளப்பட்ட விலையில் வாங்குவதற்காக, அவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் ஒரு பண்ணைய முறையாகும்.
  • இந்தியாவில் ஒப்பந்தப் பண்ணையானது இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872ன் கீழ் ஒழுங்குமுறைப் படுத்தப்படுகின்றது.
  • மாதிரி வேளாண் உற்பத்திப் பொருள் சந்தைக் குழுச் சட்டம், 2003 (APMC - Agricultural Produce Market Committee) என்ற சட்டமானது ஒப்பந்தப் பண்ணையத்திற்காக சில விதிகளை வழங்குகின்றது.
  • வேளாண் துறை அமைச்சகமானது வரைவு மாதிரி ஒப்பந்தப் பண்ணையச் சட்டம், 2018 என்ற ஒரு மாதிரியை வெளியிட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை

  • பிகாரை சோ்ந்த ஆபாஸ் ஜா, உலக வங்கியின் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் தெற்காசியப் பிரிவு மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தெற்காசியப் பிரிவு மேலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆபாஸ் ஜா, பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடா்களை எதிா்கொள்வதற்கான புதுமையான வழிமுறைகளைக் கண்டறிந்து வழங்குவாா்.

Wuhan Diary: Dispatches from a Quarantined City புத்தகம்

  • சீன பெண் எழுத்தாளரான ஃபங்க் ஃபங்க் (Fang Fang) இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

அகழாய்வு பணிகள் - தமிழகம்

  • கீழடி, கொந்தகை, அகரத்தைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் மணலூரில் 2 ஏக்கர் பரப்பளவில், முதல் முறையாக அகழாய்வு பணிகள் மே-23 அன்று தொடங்கியது.
  • கீழடி தொழிற்சாலைகள் பகுதியாகவும் கொந்தகை ஈமக்காடு பகுதியாகவும் உள்ளன. அகரம், மணலூர் வாழ்விட பகுதியாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Share with Friends