சரண் படுகா என்ற திட்டத்தை
- தங்கள் மாநிலம் வழியாக செல்லும் புலம் பெயர் தொழிலார்களுக்கு காலணிகள் வழங்க சரண் படுகா என்ற திட்டத்தை மத்தியப்பிரதேச போலீசார் தொடங்கியுள்ளனர்.
- சரண்-படுகா திட்டமானது, காடுகளில் கடுமையான இடங்களில் கால்கடுக்க நின்று இலைகள் பறிக்கும் தொழிலாளகளுக்கு காலணிகள் வழங்க சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்- 400 ஏவுகணை
- நிலத்தில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் S-400 ரக ஏவுகணைகளை இந்தியா ரஷியாவிடம் இருந்து வாங்க கடந்த 2018ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
- ரஷ்யாவிடமிருந்து ராணுவத் தளவாடங்கள் வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடைவிதிக்கப்படும் என்று அமெரிக்கா அப்போது எச்சரித்திருந்தது.
- இந்நிலையில், இந்தியா மீதான பொருளாதாரத் தடை குறித்த தீர்மானம் இன்னும் நிலுவையில்தான் உள்ளது என்றும், இந்திய அரசு ராணுவத் தளவாடங்கள் வாங்குவது குறித்து ராஜதந்திர ரீதியாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கிசான் நியாய் யோஜனா
- விவசாயிகள் குறைந்த பட்ச வருமானம் ஈட்டுவதை உறுதிப்படுத்தும் ராஜீவ்காந்தி கிசான் நியாய் யோஜனா எனப்படும் விவசாயிகள் நலத் திட்டத்தை சட்டீஸ்கர் மாநில அரசு துவங்கியுள்ளது.
- இந்த திட்டத்தின் கீழ் சுமார் 19 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் உதவித் தொகை நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
- இதன்படி மாநிலத்தின் முக்கிய பயிரான நெல்லை பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 10000 நிதி உதவி வழங்கப்பட உள்ளது. அத்துடன் கரும்புக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.93 என நிர்ணயிக்கப்பட்டு ஏக்கருக்கு ரூ.13000 நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
பாக்கெட்டுகளில் மட்டுமே சமையல் எண்ணெய்
- சமையல் எண்ணெய்களில் கலப்படத்தை தடுக்கும் பொருட்டு வரும் ஜூன் 1ம் தேதியிலிருந்து சமையல் எண்ணெயை பாக்கெட்டில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- எண்ணெய் சில்லறை விற்பனைக்கு 2006 முதலே தடை உள்ளது. உணவு பாதுகாப்புச் சட்டம் 2011-லும் உதிரி சமையல் எண்ணெய் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
- நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டத்தை, ஆயில் கமிட்டி முடிவின் கீழ் ஜூன் 1ல் மீண்டும் செயல்படுத்தும் விதமாகவே அரசு உத்தரவிட்டுள்ளது.
‘ஹோப்’ என்ற விண்கல
- அரபு மொழியில் அல் அமல் (நம்பிக்கை) என்ற பொருள்படும் ‘ஹோப்’ என்ற விண்கலத்தை முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம்-துபாய் உருவாகியுள்ளது.
- இந்த விண்கலம் மனிதர்கள் இல்லாமல் செவ்வாய் கிரகத்திற்கு வருகிற ஜூலை 15 அன்று அனுப்பப்பட உள்ளது.
- இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு ஜப்பானின் டனகஷிமா ராக்கெட் ஏவுதளத்தில் (Tanegashima Space Center) இருந்து `ஹெச் 11 ஏ’ என்ற ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது.
- கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் அமீரகத்தின் செவ்வாய் கிரக பயண திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அமீரக விண்வெளி திட்டத்தில் செவ்வாய்கிரக பயணத்திட்டம் முக்கியமான ஒன்றாகும். அமீரகத்தின் 50-வது தேசிய தினத்தை கொண்டாடும் வகையில் இந்த செவ்வாய் கிரக பயண திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இந்தியாவின் எந்த மாநில பகுதியை, நேபாள அரசு தனது வரைப்படத்தில் இணைத்துள்ளது
- இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
உலக பல்லுயிர் பெருக்க தினம் : (may22)
- மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு.
- பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை.
- உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலக பல்லுயிர் தினம் மே 22ல் கொண்டாடப்படுகிறது.
- உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
- 2019 Theme: ‘Our Biodiversity, Our Food, Our Health’.
உலக ஆமைகள் தினம் (May 23)
- 1990ஆம் ஆண்டு அமெரிக்க ஆமை மீட்புக் குழுவை சூசன் டெல்லம் மற்றும் மாஷல் தாம்ப்ஸன் என்னும் தம்பதியினர் தோற்றுவித்தனர்.
- விலங்குகளின் மீது ஆர்வம் கொண்ட இந்த தம்பதியினர் 2000ஆம் ஆண்டிலிருந்து ஆமை தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் இந்தப் பிராணியை அழிவிலிருந்து மீட்கும் பொருட்டு விழிப்புணர்வு உண்டாக்குவதைப் பணியாகக் கொண்டுள்ளார்கள்.
- 1972ம் ஆண்டு வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் படி அழிந்து கொண்டிருக்கும் இனமாக அறிவிக்கப்பட்டது.
- மாணவர் கடலாமை பாதுகாப்பு கூட்டமைப்பு என்பது 1971ம் ஆண்டு ரோமுலஸ் வித்தேகர் மற்றும் வள்ளியப்பனால் தொடங்கப்பட்டது.
- ஆமைகள் மிகப் பழங்கால உயிரினமாகும்.இவை சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன.
- சிறப்பு அமைப்பு கொண்ட ஒரு கவசத்தால் ஆன ஓட்டினால் இதன் உடல் மூடப்பட்டுள்ளது.
- இந்த ஆமை இனம் தற்போது விரைவாக அழிந்து வருகிறது. அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.