Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 May 2020 12th May 2020


உலக செவிலியர் நாள் (International Nurses Day)

  • உலக நாடுகள் அனைத்திலும் மே 12ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
  • செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் கொண்டாடப்படுகிறது.
  • ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் மே 9 இலிருந்து மே 15 வரை 1974ம் ஆண்டிலிருந்து செவிலியர் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.
  • ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) என்பவர் 1820ம் ஆண்டு மே 12 இல் பிறந்தார்.
  • இவர் மக்களுக்கும், போரின்போது பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கும் சிறந்த மருத்துவ சேவை புரிந்தார்.
  • இவரின் மருத்துவ சேவையை கௌரவிக்கும் வகையில் இவர் பிறந்த தினமான மே 12 சர்வதேச செவிலியர் தினமாக 1965ம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.

திபாங் பள்ளத்தாக்கு

  • திபாங் பள்ளத்தாக்கு என்பது இந்தியாவின் பல்லுயிர்ப் பெருக்க மண்டலங்களில் ஒன்றாக உள்ளது.
  • இது இடு மிஸ்மி சமூகத்திற்கான வாழ்விடமாகவும் உள்ளது.
  • இது துணை வெப்ப மண்டல பசுமை மாறா நீண்ட இலைகள் கொண்ட காடுகள் மற்றும் துணை வெப்ப மண்டல மழைக் காடுகளாகும்.
  • இந்தத் திட்டமானது இமயமலையில் மிகவும் செறிந்த பல்லுயிர்ப் பெருக்க புவியியல் மண்டலத்தின் கீழும் உலகின் மிகப்பெரிய பல்லுயிர்ப் பெருக்கஇடங்களில் ஒன்றின் கீழும் வருகின்றது.
  • பரிந்துரைக்கப்பட்டது.
  • இந்தத் திட்டமானது பேலியோ ஆர்க்டிக், இந்தோ-சீனா, இந்தோ-மலேயா உயிரிப் புவியியல் பகுதிகளில் அமைந்துள்ளது.

பிரதமர் ஆராய்ச்சி தோழமைத் திட்டம் (PMRF)

  • இத்திட்டத்தின் ஒரு புதிய திருத்தமானது மாணவர்களின் கேட் மதிப்பெண்ணை மத்திய கல்வி நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் கட்டாயம் ஆக்கியுள்ளது.
  • PMRF (Prime Minister Research Fellowship Scheme) திட்ட மானது முதன்முதலில் 2018-19 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த திட்டமானது உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சியின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அதாவது, அந்த நிறுவனங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டங்களை வழங்க வேண்டும்.
  • இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் முன்னிலையில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள், தேசியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை PMRF திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற நிறுவனங்களாகும்.

GCC VIDMED மொபைல் செயலி அறிமுகம் - சென்னை

  • சென்னை மாநகர பொதுமக்களுக்கு டெலி மெடிசன் (Video Call) மூலம் சிகிச்சை அளிக்க GCC VIDMED புதிய செயலியை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.
  • இதனை கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் மே-12 அன்று அறிமுகப்படுத்தினார்.
  • இதை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சிகிச்சையை அதற்குரிய மருத்துவர்களிடம் காணொலி மூலம் (வீடியோ கால்) 24 மணிநேரமும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
  • GCC-கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன்

கட்டணமில்லா காணொளி மருத்துவ ஆலோசனை திட்டம்

  • மத்திய அரசு இ-சஞ்சீவனிஓபிடி என்ற கட்டணமில்லா காணொளி மருத்துவ ஆலோசனை திட்டத்தை கடந்த மாதம் தொடங்கியது.
  • இந்த திட்டத்தில் தமிழக அரசு சமீபத்தில் இணைந்துள்ளது.
  • அதாவது esanjeevaniopd.in என்ற இணைய முகவரியில் சென்று, மக்கள் வீட்டில் இருந்தே காணொளி மூலம் மருத்துவ ஆலோசனையை இலவசமாக பெறமுடியும்.

"CBSE" வாரியத்தின் புதிய தலைவர்

  • CBSE-இன் தலைவராக இருந்த அனிதா கர்வால், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் (Department of Education and Literacy) செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • புதிய தலைவராக மனோஜ் அஹுஜா (Manoj Ahuja) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேலும்., அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கக தலைவர் (AICTE )- அனில் சஹஸ்ரபுதே
  • பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் (UGC) – டி. பி. சிங்

FIR Aapke Dwar Yojana திட்டம் - மத்தியப் பிரதேசம்

  • சமீபத்தில் மத்தியப் பிரதேச காவல்துறை FIR Aapke Dwar Yojana (FIR at your doorstep) என்ற வீட்டிற்கே வந்த புகார்களை பதிவு செய்யும் (FIR) முறையை துவங்கியுள்ளது.
  • அதாவது அவசர எண் 100-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், போலீசார் வீட்டிற்கே வந்து FIR பதிவு செய்வர்.

பிரவாசி ரஹத் மித்ரா (Pravasi Rahat Mitra)

  • உத்தரபிரதேசத்தில், பூட்டப்பட்ட நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரும்பி வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மாநில அரசு பிரவாசிரஹத் மித்ரா' பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பல்நோக்கு பயன்பாடானது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசாங்க திட்டங்களின் நன்மைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் இது அவர்களின் திறன்கள் தொடர்பான வேலைகள் மற்றும் வாழ்வாதாரங்களை வழங்குவதோடு அவர்களின் ஆரோக்கியத்தை
  • கண்காணிக்கவும் உதவும்.
  • பிரவாசி ரஹத் மித்ரா பயன்பாட்டை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் ஒத்துழைப்புடன் மாநில வருவாய் துறை உருவாக்கியுள்ளது.

Share with Friends