Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 May 2020 2nd May 2020


கொரோனா இயற்கையாக உருவானது -WHO

  • கொரோனா வைரஸ் ஊஹானில் உள்ள உயிரி ஆய்வுக்கூடத்தில் உருவானது என்றும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
  • கொரோனா வைரஸின் மரபணுத் தொடரை ஆராய்ந்த உயிரியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, அது இயற்கையாக உருவானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் செயல் இயக்குநர் மைக்கேல் ரியான், விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவக் காரணமான இடை உயிரினம் குறித்த தகவல் மட்டும் இன்னும் கண்டறியப்படவில்லை என்று கூறினார்.

இலவச இன்சூரன்ஸ் - மஹாராஷ்டிரா

  • மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் இலவச சுகாதார இன்சூரன்ஸ் திட்டத்தை வழங்கி அசத்தி உள்ளது மஹா., அரசு. மஹாராஷ்டிரா மாநிலத்தில் மாநில தின விழா கொண்டாடப்பட்டது.
  • தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் சுஅதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் முயற்சியாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் பகுதி நேர அரசு ஊழியர்கள் மற்றும் வெள்ளை நிற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றனர்.
  • ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொதுத்துறை சங்கம் மற்றும் அரசும் இணைந்து இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதார காப்பீடு திட்டம் வழங்கப்படும்.
  • மாநில மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் தற்போது மகாத்மா ஜோதிபா புலே ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் உள்ளனர் மீதமுள்ள 15 சதவீதம் பேருக்கும் இந்த இலவச சுகாதார காப்பீடு திட்டத்தில் இணைத்து கொள்ளப்படுவர்.
  • இத்திட்டத்தின் மூலம் மஹாராஷ்டிரா மாநிலம் குடிமக்கள் அனைவருக்கும் இலவச காப்பீடை வழங்கும் முதல் மாநிலம் என சுகாதார அமைச்சர் கூறினார்.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை

  • அரசு நிறுவனமான இந்துஸ்தான் லேட்டக்ஸ் லிமிடெட் இந்த மாத்திரைகளை கொள்முதல் செய்து அரசுக்கு வழங்கும். இதற்காக ஐபிசிஏ லேப்ஸ், சடைஸ் கடிலா என்ற இரு நிறுவனங்களிடம் மொத்தம் 11 கோடியே 45 லட்சம் மாத்திரைகளுக்கு ஹெச்எல்எல் ஆர்டர் கொடுத்துள்ளது.
  • கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் இந்த மாத்திரைகளால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதால் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த மாத்திரைகள் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'ஆரோக்ய சேது' செயலி

  • நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளபோதும், பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. அதன்படி, அரசு, தனியாா் அலுவலகங்கள் குறைந்தபட்ச பணியாளா்களுடன் செயல்படுவதற்கு அனுமதி இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'அரசு, தனியாா் துறை பணியாளா்கள் அனைவரும் 'ஆரோக்ய சேது' செயலியைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. தங்கள் பணியாளா்கள் அனைவரும் அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்வதை நிறுவனங்களின் தலைவா்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
  • அதேபோல், கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் 'ஆரோக்ய சேது' செயலியை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CARES திட்டம்

  • கோவிட் - 19 செயல்பாடு கொண்ட எதிர்வினை மற்றும் செலவின உதவித் திட்டம் என்ப து "CARES" (COVID-19 Active Response and Expenditure Support Programme) என்ற திட்டமாகும். இதன் மூலம் இந்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன.
  • இது புதிமையான கொரானா வைரஸ் நோய்த் தொற்றிற்காக அரசின் எதிர்வினை நடவடிக்கைக்கு உதவ இருக்கின்றது.

இந்தியாவில் காற்று மாசுபாடு

  • இந்தியாவில் காற்று மாசுபாடானது கடந்த 20 ஆண்டுகளை விடக் குறைவாக பதிவாகியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
  • நாசாவினால் வெளியிடப்பட்ட தரவின் படி, 2020 ஆம் ஆண்டின் கண்ணுக்குப் புலப்படும் தூசுப் படலத்தின் ஆழமானது (AOD - Aerosol Optical Depth) 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான AOD-ன் சராசரியுடன் ஒப்பிடப் படும் பொழுது மிகக் குறைந்ததாக உள்ளது. AOD என்பது வளிமண்டலத்தில் உள்ள காற்றுத் துகள்களினால் ஈர்க்கப்படும்.
  • ஒளியாகும்.
  • காற்றுப் படலம் என்பது மனிதர்களின் நடவடிக்கைகளின் காரணமாக வெளியிடப்படும் வளிமண்டலத்தில் உள்ள துகள்களாகும்.
  • AOD என்பது வளிமண்டலத்தில் இருக்கும் காற்றுப் படலத்தின் அளவுகளை அளவிடும் ஒரு அளவீட்டு நடவடிக்கையாகும். இது வளிமண்டலத்திற்குள் ஒளி செல்லும் போது, ஒளி சென்றடைந்த இடத்தை அளவிடுவதாகும்.
  • AOD அதிகரித்தால், ஒளியின் அழிவு விகிதமானது அதிகரிக்கும்.
Share with Friends