சானிட்டைசர் ஏற்றுமதிக்கு தடை
- கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்று கைகளில் ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்களை அவ்வப்போது பயன்படுத்துவதுதான் ஆகும். இது கொரோனா கிருமியை ஒழிக்க கூடியது என்று பல நாட்டு விஞ்ஞானிகளும் அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கிறார்கள்.
- அங்கு சானிட்டைசர்கள் பயன்பாடு என்பது கட்டாயம் ஆகும். எனவே இவற்றுக்கான தேவையும் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் நோய் பாதிப்பால் அச்சமடையும் மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்றால், மற்றொரு பக்கம் ஆலைகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்லக்கூடிய மக்களும் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
- எனவே ஆல்கஹால் அடிப்படையிலான சானிட்டைசர்களின் ஏற்றுமதிக்கு தடையை விதித்துள்ளது மத்திய அரசு. ஏற்கனவே வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.
இ - பாஸ் - சிறப்பு அதிகாரிகள்
- கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலத்தில் சிக்கியிருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ளவும், இ - பாஸ் வழங்குவதை கண்காணிக்கவும் சிறப்பு அதிகாரி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணை: வெளிமாநிலத்தில் சிக்கியிருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ளவும், இ-பாஸ் வழங்குவதை கண்காணிக்க கட்டுப்பாட்டறை அமைத்து அதற்கான அதிகாரியாக ஊரக வளர்ச்சித்துறையின் சிறப்பு செயலாளர் பின்கி ஜோவல், தமிழ்நாடு கேபிள் டிவி பொது மேலாளர் ஆனந்தகுமார், தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் பொதுமேலாளர் சாந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மூங்கில் மாநாடு
- மத்திய வடகிழக்கு வளர்ச்சித் துறைக்கான இணையமைச்சர் காணொளியின் மூலம் மூங்கில் மாநாட்டில் கலந்து கொண்டார்.
- இது மூங்கில் வளங்களின் உதவியுடன் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்ய இருக்கின்றது.
- இந்தியாவின் வடகிழக்குப் பகுதியானது நாட்டின் 60% மூங்கில் இருப்பைக் கொண்டுள்ளது.
- இந்திய வனச் சட்டம், 1927 என்ற சட்டமானது மூங்கிலைப் புல் வகை இனமாக மாற்றுவதற்காக 2017 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது.
ரெம்டெசிவிர் மருந்து
- கோவிட் - 19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக “ரெம்டெசிவிர்" என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தை அவசர காலத்தில் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஒழுங்குமுறை அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
- ரெம்டெசிவிர் மருந்தானது எபோலா வைரஸ் மற்றும் மார்பர்க் வைரஸ் ஆகியவற்றிற்குச் சிகிச்சை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
eCovSens
- ஹைதராபாத்தில் உள்ள தேசிய விலங்கு உயிரித் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் (NIAB - National Institute of Animal Biotechnology) "ecorsens" என்ற ஒரு உயிரி உணர்வியை உருவாக்கியுள்ளனர்.
- இது ஒரு ஊடுருவாத உயிரி உணர்வி சோதனைச் சாதனமாகும்.
- இந்த உணர்வியானது எச்சில் மாதிரிகளில் கோவிட் - 19 வைரசைக் கண்டறிவதற்காகப் பயன்படுத்தப் படுகின்றது. NIAB ஆனது 2010 ஆம் ஆண்டில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரித் தொழில்நுட்பத் துறையால் ஏற்படுத்தப் பட்டது.
புறஊதாக் கதிர் வெடிப்பமைவு
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது ரசாயனமற்ற மற்றும் விரைவான நோய்த் தொற்று நீக்கத்திற்காக புற ஊதாக் கதிர் நோய்த் தொற்று நீக்கக் கோபுரத்தை உருவாக்கியுள்ளது.
- இது கணினிகள், மின்னணு சாதனங்கள் மற்றும் இதர மின்னணுப் பொருட்கள் போன்ற உயர் தொழில்நுட்ப பொருள்களின் மேற்பரப்பில் இருக்கும் நோய்த் தொற்றை நீக்க உதவுகின்றது.
- புற ஊதாக் கதிர் நோய்த் தொற்று நீக்கக் கோபுரமானது கைபேசி அல்லது மடிக்கணினியின் மூலம் தொலை தூரத்திலிருந்தே இயக்கப் படுகின்றது.
ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்
- அசாம் மாநிலத்தில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சலின் காரணமாக 2500ற்கும் மேற்பட்ட பன்றிகள் கொல்லப் பட்டதை அம்மாநில அரசு உறுதிப்படுத்தி யுள்ளது.
- ஆப்பிரிக்கப் பன்றி வைரஸ் என்பது இருமடங்கு அளவிற்குத் தனித்து விடப்பட்டிருக்கும் ஒரு மிகக் கொடிய டிஎன்ஏ வைரஸ் ஆகும். இந்த வைரஸ் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சலுக்குக் காரணமாக இருக்கின்றது.