Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 12th April 20


கொரோனா தடுப்பு நிதிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் 10.42 லட்சம் வழங்கியது

  • கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. அந்தவகையில், கொரோனா தடுப்புக்கான முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம்10.42 லட்சத்தை வழங்கியுள்ளது.
  • மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் பணிபுரியும் 502 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படும்: உலக வங்கி எச்சரிக்கை

  • கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பொருளாதார வளர்ச்சி குறியீடான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் 2 சதவீதமாக இருக்கும் என பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனமும் ஜிடிபி 1.6 சதவீதமாக குறையும் என கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனமும் மதிப்பீடு செய்துள்ளன.
  • இதுபோல், உலக வங்கியும் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், கொரோனா பாதிப்பால் தெற்காசிய நாடுகளில் உள்ள 8 நாடுகளின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) இந்த ஆண்டில் 1.8 சதவீதம் முதல் 2.8 சதவீதத்துக்குள் இருக்கும்.
  • கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவாக இது இருக்கும் என தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதம் முன்பு வெளியிட்ட கணிப்பில், ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது.
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 1.5 சதவீதம் முதல் 2.8 சதவீதத்துக்குள் இருக்கும். கடந்த நிதியாண்டில் இந்த வளர்ச்சி 4.8 சதவீதம் முதல் 5 சதவீதத்துக்குள் காணப்படும்.
  • இந்தியாவில் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக பல லட்சம் பேர் வேலை இழப்பார்கள். சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலர், நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு இடம்பெயர வேண்டிய நிலை உருவாகும்.
  • இலங்கை, நேபாளம், பூடான், வங்கதேச நாடுகளின் பொருளாதாரத்தில் கணிசமான சரிவு காணப்படும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவுளில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி

  • நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இந்த உத்தரவு வரும் 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
  • இந்நிலையில் சிமெண்ட், வீட்டுவசதி மற்றும் கட்டுமான தொழில்களுக்கு மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து இருக்கிறது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அதற்கான அனுமதியை தந்து இருக்கிறது.
  • இதுதவிர, சில பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நிபந்தனைகளையும் கட்டாயம் தொழில்துறையினர் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதன்படி ஊழியர்களின் வருகை மற்றும் வெளியேற்றத்துக்கு ஒரு வழி பாதை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
  • கட்டாயம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். ஊழியர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை தரவேண்டும் அல்லது அவர்களை ஆலை கட்டுப்பாட்டின் கீழ் தங்க வைக்க வேண்டும் என்றால் சுகாதாரமான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.
  • மனிதர்களும், வாகன போக்குவரத்தும் மிக இலகுவாக சென்று சேரும் வகையில் ஆலைகளில் இடவசதி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆடை தயாரிப்பு ஆலைகள், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக் உதிரி பாக ஆலைகளில் ஒரு ஷிப்டுக்கு 20 முதல் 25 சதவீதம் மட்டுமே பணியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
  • ஏற்றுமதி பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், சிறு, குறு ஆலைகள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்கலாம்.
  • டிரான்ஸ்பார்மர்கள், தகவல் தொழில்நுட்ப தளவாடங்கள் உற்பத்தி ஆலைகள், கம்பரசர்கள் யூனிட்டுகள், ஸ்டீல் ஆலைகள், உரக்கம்பெனிகள், விதை உற்பத்தி நிறுவனங்கள், பிளாஸ்டிம் உற்பத்தி ஆலைகள், ஆட்டோமோட்டிவ் யூனிட்டுகள், வைரம் மற்றும் நகை தயாரிப்பாளர்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியை தொடங்கலாம்.
  • தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் அனைத்து சரக்கு வாகனங்கள், அவை சரக்குகளுடன் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அனைத்து மாநிலங்களும் அனுமதிக்க வேண்டும். அந்த வாகனங்களை எல்லைகளில் எந்த மாநில அரசும் நிறுத்தி சோதனையிடக்கூடாது.

பிரதமா் நிதிக்கு பேடிஎம் ரூ.100 கோடி வசூல்

  • கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்புகளை எதிா்கொள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் 'பிஎம்-கோஸ்' நிதியத்தில் தராளமாக நிதி உதவி வழங்கும்படி பிரதமா் கோரிக்கை விடுத்தாா்.
  • அவரின் இந்த அழைப்பை ஏற்ற பேடிஎம் நிறுவனம் தனது பங்களிப்பாக ரூ.500 கோடி வழங்க இலக்கு நிா்ணயித்துள்ளதாக தெரிவித்திருந்தது.
  • இந்த நிலையில், கடந்த 10 நாள்களில் பிரதமா் நிதிக்கு பேடிஎம் பங்களிப்பு ரூ.100 கோடியை தாண்டியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • பிரதமா் நிதிக்கு, நிறுவனங்களில் டாடா டிரஸ்ட் மற்றும் டாடா குழுமம் மட்டுமே அதிகபட்சமாக ரூ.1,500 கோடியை அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

அந்நியச் செலாவணி கையிருப்பு 47,466 கோடி டாலராக சரிவு

  • இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 90 கோடி டாலா் குறைந்து 47,466 கோடி டாலரானது. முந்தைய வாரத்தில் இந்த கையிருப்பு 565 கோடி டாலா் அதிகரித்து 47,556 கோடி டாலராக காணப்பட்டது.
  • ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பான அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 54 கோடி டாலா் குறைந்து 43,912 கோடி டாலரானது.
  • தங்கத்தின் கையிருப்பு 34 கோடி டாலா் சரிந்து 3,055 கோடி டாலராக காணப்பட்டது.
  • சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 50 லட்சம் டாலா் அதிகரித்து 143 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 2 கோடி டாலா் குறைந்து 357 கோடி டாலராகவும் காணப்பட்டது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.
  • மாா்ச் 6 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் அந்நியச் செலாவணி கையிருப்பானது 569 கோடி டாலா் அதிகரித்து வரலாற்று உச்சமாக 48,723 கோடி டாலரை முதல்முறையாக தொட்டது.
  • நடப்பு 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏறக்குறைய 6,200 கோடி டாலா் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share with Friends