Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 November 2020

1st November 2020

  • தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது (முதல் முறையாக கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது)
  • தமிழக வேளாண்துறை அமைச்சர் ரா. துரைக்கண்ணு உடல்நிலை பாதிப்பால் நேற்று காலமானார்.
  • சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 145-வது பிறந்தநாள் விழா குஜராத்தின் கெவதியா நகரில் அக்-31 அன்று கொண்டாடப்பட்டது.
  • படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31 தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கடந்த 2014 முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • சர்தார்படேல் பிறந்தநாள் விழா உரையில் பிரதமர் மோடி, மகாகவி பாரதி எழுதிய எங்கள் நாடு என்ற பாடலின் முதல் எட்டு வரிகளை (இமய மலையெங்கள் மலையே மாநில மீதது…) மேற்கோள் காட்டி பேசினார்.
  • குஜராத்தின் கெவதியா – சபர்மதி இடையே இந்தியாவின் முதல் நீர்வழி விமானசேவையை (Sea Plane) பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
  • பிரான்ஸின் நேன்ட்ஸ் நகரில் நடைபெற்ற அலெக்ஸிஸ் வேஸ்டின் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் அமித் பங்கல், சஞ்ஜீத் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா்.
  • வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் இத்தாலியின் லோரென்ஸோ சோனிகோவிடம் தோல்வி கண்டாா்.

2nd & 3rd November 2020

  • மின்சார வாகனம் வாங்குவோருக்கு வரும் 31-12-2022 வரை 100% வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • நாட்டிலுள்ள963 ரயில் நிலையங்கள் இதுவரை சோலார் மயமாக்கப்பட்டுள்ளன. 2030 க்குள் அனைத்து ரயில் நிலையங்களையும் சோலார்மயமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ஒய்வு பெறும் ஊழியர்களுக்கு, ஒய்வு பெறும் அதேநாளில் ஓய்வூதிய ஆணை வழங்குவதற்காக இபிஎஃப் பிரயாஸ் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • சீனா, அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள சிச்சுவான் மாகாணத்தில் இருந்து திபெத் வரை ரயில் பாதை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. (1011 கி.மீ )
  • நியூஸிலாந்து நாட்டில் முதல் முறையாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்.
  • இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும், மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சியின் முதல் கட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது.
  • 46வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று தொடக்கம்.
  • இத்தாலியில் நடைபெற்ற எமிலா கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் பிரபல வீரர் ஹாமில்டன் சாம்பியன் பட்டதை வென்றுள்ளார்.
  • வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் 5 வது முறையாக சாம்பியன் பட்டதை வென்றுள்ளார் ரஷ்யாவின் ஆன்ட்ரி ருப்லேவ்.
  • பேட்டில் ஆஃப் பிலாங்கிங் (The Battle Of Belonging) என்ற புத்தகத்தை சசி தரூா் எழுதியுள்ளார்.
  • கர்நாடக வயலின் இசைக்கலைஞர் டி.என் கிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

4th & 5th November 2020

  • மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 1.04 கோடி வீடுகளுக்கு 2023-ஆம் ஆண்டுக்குள் குடிநீா் இணைப்பு வழங்கப்பட இருக்கிறது. (மத்திய அரசு 2024-ஐ இலக்காக நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது)
  • இந்தியாவின் உதவியுடன் நேபாளத்தில் புதியதாக கட்டப்பட்ட பள்ளி திறந்து வைக்கப்பட்டது.
  • அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் ஒய்வு அறிவித்தார்
  • புவி வெப்பமாதலை கட்டுப்படுத்தும் <>சர்வதேச நாடுகளின் பாரீஸ் பிபருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகியது அமெரிக்கா
  • உலக சுனாமி விழிப்புணர்வு நாள் (நவம்பர் – 5)
  • பினாகா ஏவுகணை சோதனை வெற்றி என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) அறிவிப்பு.
  • ஒருநாள் கிரிக்கெட் ஐ.சி.சி தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட்கோலி முதலிடம்
  • அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் மார்லன் சாமுவேல்ஸ் ஓய்வு
  • சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் மினியேச்சர் (சிறிய) ரயில் கேரளாவிலுள்ள வேலி (Veli) சுற்றுலா கிராமத்தில் அறிமுகம்.
  • லவ் ஜிகாத் கர்நாடகத்தில் தடை செய்ய விரைவில் சட்டம் அமலாகிறது.
  • பிரதமர் மோடி தலைமையில் உலக முதலீட்டாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது
  • டி.பாஸ்கர பாண்டியன் தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக நியமனம்
  • எழுத்தாளர் எஸ். சுவாமிநாதன் மரணம்
  • ரூ.27 லட்சம் மதிப்பிலான 3 நடமாடும் அம்மா உணவகங்களை சென்னையில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
  • நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்ட திருநங்கை (சாரா மெக் பிரைடு) வெற்றி.
  • வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான சர்ச்சைக்குரிய கட்டுபாடுகள் ரத்து செய்யப்படும் என சவுதி அரேபியா அரசு அறிவிப்பு
  • அமெரிக்க மாகாணத் தேர்தலில் இந்திய அமெரிக்கர்கள் 12 பேர் வெற்றி
  • மெல்பர்ன் நகரில் நடந்த இந்திய வம்சாவளியை இளம்பெண் மரியா தாட்டில் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
  • வந்தே பாரத் திட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் 29 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.
  • பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு பணிக்காக தயாரித்த இஓஎஸ்ஐ செயற்கை கோளை நவம்.7-ல் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
  • தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வர சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு
  • கேரளாவின் “ஜம்போ கேர்” உலகில் மிகப் பெரிய யானை பராமரிப்பு முகாமாக உருவெடுத்து வருவதாக கேரள அரசு அறிவிப்பு
  • இந்திய ராணுவ தலைமை தளபதி நரவணேவுக்கு நேபாள ராணுவத்தில் கெளரவ தளபதி பதவி
  • லண்டனில் நடைபெற இருக்கும் பருநிலை லட்சிய உச்சிமாநாடு 2021-க்கு மோடிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.

6th & 7th November 2020

  • அலசேன் ஓட்டாரா ஐவரி நாட்டின் புதிய அதிபராக தேர்வு
  • கரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையம் தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தொடங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
  • மிஷன் சாகர்-II என்ற திட்டத்தின் கீழ் 100 டன் உணவுப் பொருள்களை இந்தியா சூடான் நாட்டிற்கு அனுப்பியுள்ளது
  • அமெரிக்காவின் “2020 ஆண்டிற்கான எம்மெட் லீஹி” விருதினை பெற்ற முதல் இந்தியர் தினேஷ் கத்ரா ஆவார்
  • 2019-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது 37 அறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சுகாதாரம், சரக்கு மேலாண்மை குறித்த பயிற்சிக்காக உயர் திறன் மேம்பாட்டு மையங்களை சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்தார்.
  • இந்தியன் வங்கி எம்எஸ்எம்இ தொழில் முனைவோர் திறனை மேம்படுத்தv “எம்எஸ்எம்இ பிரேரனா” என்ற திட்டத்தினை தொடங்கியது
  • அமேசான் இணைய சேவை நிறுவனம் தெலுங்கானாவில் ரூ.20,.761 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது
  • நவம்.10-ல் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
  • 5 ஆண்டுகளில் 20.6 லட்சம் ராணுவத்தினருக்கு ரூ.42,700 கோடி “ஒரே பதவி – ஒரே ஓய்வூதிய திட்டம்” மூலம் மத்திய அரசு வழங்கியுள்ளது.
  • நாடு முழுவதும் பணம் அனுப்ப வாட்ஸ்அப் பயனாளர்களுக்காக இந்தியாவில் “வாட்ஸ்அப் பேமண்ட் சேவை” தொடங்கப்பட்டது.
  • பொருளாதார ஒப்புதல்களை அதிகரிக்க முக்கிய 15 ஒப்பந்தங்கள் இந்தியா – இத்தாலி இடையே கையெழுத்தானது.
  • நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா 2வது முறையாக பதவி ஏற்பு
  • இந்திய தலைமைத் தகவல் ஆணையராக யஷ்வர்தன் குமார் சின்ஹா பதவியேற்பு
  • நிங்கோபம் “ஹாக்கி இந்தியா” தலைவராக தேர்வானார்
  • மியான்மரில் நாளை (நவம்.08) பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது
  • இந்திய கடற்படை விமானங்களின் பராமரிப்பு பணிக்காக ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை தளத்திற்கு பிரிட்டனில் இருந்து அரக்கோணத்திற்கு அன்டோனோவ் விமானம் வந்து சேர்ந்தது
  • தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் (நவம்பர் 7).

8th & 9th November 2020

  • நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம் என்று மத்திய அரசு அறிவிப்பு
  • இந்தியா உட்பட நான்கு நாட்டின் 10 செயற்கை கோளுடன் பிஎஸ்எல்வி – சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
  • அமெரிக்காவின் 46வது அமெரிக்க அதிபராக ஜோபிடனும், முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு
  • ஐக்கிய அரபு அமீரகம் முஸ்லிம்களுக்கான தனிநபர் சட்டத்தில் தளர்வுகளை அறிவித்தது.
  • குஜராத் மாநில பவ்நகர் மாவட்டத்தில் உள்ள கோகா மற்றும் சூரத்தில் உள்ள ஹசீரா இடைய “ரோ-பேக்ஸ்” பயணிகள் படகு போக்குவரத்து சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • கப்பல் போக்குவரத்து அமைச்கத்தின் பெயரை துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்வதாக பிரதமர் மோடி அறிவிப்பு.
  • ஹெச்சிஎல் நிறுவனர் ஷிங் நாடார் அறக்கட்டளை சார்பில் சென்னை ஷிங் நாடார் பல்கலைக்கழகம் தொடக்கம்.
  • தூசி, புயல்களின் தாக்கத்தால் வளிமண்டலத்தை வேகமாக இழக்கிறது செவ்வாய் கிரகம் மங்கள்யான் ஆய்வில் கண்டுபிடிப்பு
  • ரஷ்யாவின் மெத்வதேவ் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் தனது முதலவாது சாம்பியன் பட்டத்தை வென்றார்.
  • அமெரிக்காவின் புதிய அதிபரனா ஜோ பைடன் அமெரிக்காவில் வசிக்கும் 5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளார்.
  • உலக நகர்புற தினம் (நவம்.08)
  • தேசிய சட்ட சேவைகள் தினம் (நவம்.09)
  • சர்வதேச கதிரியக்க தினம் (நவம்.08)

10th & 11th November 2020

  • தமிழகத்தில் கள்ளக்குறிச்சி. தென்காசி. திருப்பத்தூர். இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் “One Stop Centre” நிறுவன மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஆர். ராஜகோபால் தமிழக தலைமை தகவல் ஆணையராக பதவியேற்பு
  • அமெரிக்க கரோனா கட்டுப்பாட்டுக் குழுவில் ஈரோட்டைச் சேர்ந்த செலின் ராணி இடம் பெற்றார்
  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த எல்டான் சிகும்ரா ஓய்வு பெற்றார்.
  • 13 செயற்கைக் கோள்களைத் தாங்கிய “லாங் மார்ச்” என்ற ராக்கெட்டை சீனா விண்ணில் செலுத்தியது.
  • “பரிவர்த்தனம்” என்ற திட்டத்தினை மீனவர்களின் சிறந்த வாழ்வாதாரத்திற்காக கேரள அரசு அறிமுகம் செய்தது.
  • இந்தியாவில் முதலாவது சூரிய அடிப்படையிலான நீர் வழங்கல் திட்டம் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் தொடக்கம்
  • Rasaathi – The other side of a Transgender என்ற நூலின் ஆசிரியர் – சசிந்திரன் கல்லின் கீல்
  • தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் – வீரேந்திர சிங் செளகான்
  • மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு நேபாள மொழியில் தொகுக்கபட்ட “காந்தியடிகளை நான் புரிந்து கொண்டேன்” என்ற நூல் நேபாள அதிபர் வித்யாதேவி பண்டாரி வெளியிட்டார்.
  • இந்திய வம்சாவளியைச் சார்ந்த விவேக் மூர்த்தி அமெரிக்காவின் கரோனா தடுப்பு பணிக்குழு தலைவராக நியமனம்.
  • ரெக்மா என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் டென்ட்சூ எக்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு நம்பர் ஒன் ஆளுமை மிக்க நிறுவனம் என்ற பெருமை கிடைத்துள்ளது.
  • 108 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்காவுக்கு கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான மரங்களை வளர்த்தற்காக கெளரவ டாக்டர் பட்டம்வழங்கப்பட்டது.
  • டெல்லி தமிழக் கல்வி கழகத்தின் சார்பில் மயூர் விஹாரில் கட்டப்பட்டுள்ள 8வது பள்ளிகூடத்தின் அம்மா பிளாக்கை தமிழக முதல்வர் நவம்.12-ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
  • நகோர்னோ – கராபக் பிராந்தியத்தில் போரை நிறுத்த ஆர்மீனியா – அஜர்பைஜான் ஒப்புதல்
  • தேசிய கல்வி தினம் (நவம்.11)

12th November 2020

  • வேலூர் மாவட்டத்திற்கு நதிநீர் புனரமைப்பு, நீர் மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக மத்திய அரசு விருது வழங்கப்பட்டது.
  • ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை தொலைத்தொடர்பு, வாகன உற்பத்தி உள்ளிட்ட நாட்டின் முக்கிய 10 துறைக்கு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • பஹ்ரைன் பிரதமர் இளவரசர் காலிஃபா பின் சல்மான் அல் அல் காலிஃபா (84) காலமானார்.
  • உலகின் இளம் கணனி புரோகிராமார் பட்டத்தை அகமதாபாத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் அர்ஹாம் வென்று கின்னஸ் சாதனை படைப்பு.
  • ஹைதரபாத்தில் உள்ள தேசிய மருந்துகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தனது 14-வது நிறுவன தினத்தை நவம்பர் 10 அன்று கொண்டாடியது.
  • 20 பயிற்சி பெற்ற குதிரைகள், கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் 10 மோப்பநாய்களை இருதரப்பு ராணுவ உறவினை மேம்படுத்துவதற்கான இந்திய இராணுவம் பரிசளித்துள்ளது.
  • நாடு முழுவதும் உள்ள ரயில்வே மருத்துவமனைகளின் நிர்வாகத்தை திறம்பட நிர்வகிக்க ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து “மருத்துவமனை நிர்வாக தகவல் முறை” எனும் மென்பொருளை அமல்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
  • பம்பாய் ஐஐடியின் ஆதரவுடன் கோவிட்-19 சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் பாதுகாக்கும் வகையில் ஆயு சாதனங்கள் என்ற ஸ்டார் அப் நிறுவனம் ஒரு டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப்பை கணடுபிடித்துள்ளது.
  • பேராசிரியர் கெஸ் இந்திய வானியலாளர்களுடன் 30 மீட்டர் தொலைநேகாக்கி திட்டத்துக்காக இணைந்து பணியாற்றியுள்ளார்.
  • 2019-ம் ஆண்டிற்கான 2வது தேசிய நதிநீர் விருதுகள் வழங்கும் விழா நவம் 11, 12 தேதிகளில் நடைபெறகிறது.
  • ரூ.60.44 கோடி மதிப்பிலான 36 திட்ட பணிகளுக்கு தமிழக முதல்வர் கன்னியாகுமரி மாவட்டத்தில் அடிக்கல் நாட்டினார்.
  • வருவாய் இழப்பைச் சந்தித்த தமிழகம் உள்பட 14 மாநிலத்திற்கு நிதி குழுவின் பரிந்துரையின்படி வழங்கவேண்டிய நிதியில் 8-வது தவணையாக ரூ6,195 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
  • 4நிமிடம் 23 வினாடிகளில் ஐ.நா.சபை அங்கரித்துள்ள 195 நாடுகளின் பெயர்களையும், தலைநகரங்களையும் மூச்சுவிடாமல் ஒப்புவித்த ஈராக்கில் வசிக்கும் 5வயது சிறுமி பிரானவி குப்தா சாதனை படைத்துள்ளார்.
  • பஞ்சாப் மாநிலத்தில் சிபிஐ அமைப்பிற்கு வழங்கப்பட்டு வந்த பொது ஒப்புதலை மாநில அரசு திரும்ப பெற்றது.
  • ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் பட்டம் வென்றது.
  • உலக நிமோனியா தினம் (நவம்.12)

13th November 2020

  • தமிழக முதல்வரால் டெல்லி மயூர் விகார் பள்ளி வளாகத்தில் ஜெயலலிதா பெயரில் கட்டப்பட்ட புதிய கட்டித்தை திறக்க வைக்கப்பட்டது.
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் வாகீர் நீர்மூழ்கி கப்பல் கப்பற்படையில் இணைப்பு
  • டாடாகுழுமம் 90 நிமிடங்களில் கரோனா பரிசோதனையை செய்து முடிக்கும் டாடாஸ்டிக் செக் கருவியை கண்டுபிடித்ததது.
  • ரூ.2.65 லட்சம் கோடிக்கு ஊக்கச் சலுகைகளை மத்திய அரசின் “ஆத்ம நிர்பார் பாரத் 3.0” திட்டதின் கீழ் பொருளாதாரத்தை சீரமைக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
  • புதுவை அரசு சார் பள்ளிகளில் புதிதாக காலை சிற்றுண்டி திட்டம் திமுக தலைவர் கருணாநிதி பெயரில் தொடங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.
  • விலங்குளை விவரித்து ஆஃகுமென்ட் ரியாலிட்டி தொழில்நுட்ப முறையில் வீடியோ பதிவிட்ட கல்பாக்கம் சிறுமிக்கு பிரதமர் மோடி பாராட்டு
  • அணுசக்தி ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 12 மடங்கு அளவு யுரேனியம் கூடுதலாக வைத்துள்ளது என ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு (ஐஏஇஏ) அறிவிப்பு.
  • வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியாக ரொனால்ட் கிளெய்னை ஜோபைடன் நியமித்தார்.
  • ரூ.24 கோடி செலவில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
  • பத்தாம் வகுப்பினை முடித்த ஒற்றை பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் (Merit Scholarships for Single Grirl Child) என சிபிஎஸ்இ அறிவிப்பு.
  • முதன் முதலாக 14,36 பெட்டகங்களை ஏற்றி வந்த மிகப்பெரிய சரக்கு கப்பல் எம்.வு.எம்எஸ்சி ஃபெயித் எண்ணூர் துறைமுகத்திற்கு வந்தது.
  • உலக கருணை தினம் (நவம்.13)

14th & 15th November 2020

  • 2020 ஆண்டு இயற்கை பேரிடர் நிதியாக 6 மாநிலங்களுக்கு ரூ.4,382 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ரூ.371 கோடியை பிரேக்த்ரூ எனர்ஜி வெஞ்சர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்போவதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அறிவிப்பு.
  • குஜராத்தில் பிரதமர் மோடியினால் தேசிய முக்கியத்துவ அந்தஸ்துடன் முதன்முறையாக ஆயுர்வேதா கற்பித்தல் மற்றும் ஆய்வு நிறுவனத்தை தொடக்கி வைக்கப்பட்டது.
  • ஹோண்டா நிறுவனத்தின் புதிய முயற்சியாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பயிற்சி பெயற்ற 6,100 பள்ளி சிறார்கள் குழந்தை சாலைப் பாதுகாப்பு அதிகாரிகளாக உறுதியேற்பு
  • சென்னை காமராஜர் துறைமுகம் இந்திய கிழக்கு கடற்கரையிலே மிகப் பெரிய கண்டெய்னர் கப்பலை கையாண்டு வரலாறு படைத்துள்ளது.
  • சி.சமயமூர்த்தி தமிழக போக்குவரத்து துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
  • பாகிஸ்தான் அரசு இந்தியாவிலிருந்து ஒளிபரப்படும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கான இணைய பணப் பரிவர்த்தனையை தடை செய்தது.
  • 9.24 லட்சம் வீடுகளை அடுத்த இரு ஆண்டுகளில் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக வீட்டுவசதித்துறை அமைச்சர் வி.சோமண்ணா அறிவிப்பு.
  • பிரபல கன்னட எழுத்தாளர் ரவிபெலகெரே காலமானார்.
  • தேசிய குழந்தைகள் தினம் (நவம்.14). உலக நீரிழிவு தினம் (நவம்.14).

16th & 17th November

  • ஆசிய மருத்துவ வரலாற்றின் ஆணிவேர் என அழைக்கப்படும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துமனையின் வயது 356
  • காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 பேராசிரியர்கள் அமெரிக்க பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலக அளவிலான 2% சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
  • பீகார் மாநில முதல்வராக நிதீஷ்குமார் பதவியேற்பு.
  • சீனா உட்பட 15 ஆசிய-பசிபிக் நாடுகள் கையெழுத்திட்ட ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு (ஆர்சிஇபி) ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இடவில்லை.v
  • பாலஸ்தீனத்தின் அமைதி, வளம், ஆகியவற்றிற்கு இந்தியாவின் ஆதரவு தொடரப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் அறிவிப்பு.
  • முன்னால் கணிக்கப்பட்டதை விட வேகமாக இந்திய பொருளாதாரம் மீண்டெழும் என சர்வதேச மதிப்பீட்டு அமைப்பு ஆக்ஸ்ஃபோர்டு எகனாமிக்ஸ் அறிவிப்பு
  • இந்தியா உட்பட 3 நாடுகள் இணைந்து நடத்தும் இரண்டாவது கட்ட மலபார் கடற்படை போர்ப்பயிற்சி (நவம்.17) இன்று துவங்குகிறது
  • கரோனா நோய்க்கு 94% பலனை அளித்தாக அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி அறிவிக்கப்பட்டுள்ளது
  • சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் சென்ற முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையுடன் “ஸ்பேஸ்” எக்ஸ் விண்கலத்தில் 4 வீரர்கள் விண்வெளி நிலையத்தை அடைந்தன.
  • வங்காள நடிகரான செளமித்ர சாட்டர்ஜி (85) மறைவு.
  • “வாசன் ஐ கேர்” நிறுவனரான அருண் (52) காலமானார்
  • லீவிஸ் ஹாமில்டன் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
  • இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜென்னிக் சின்னார் சோபியா ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியின் பட்டம் பெற்று, ஏடிபி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் (வயது – 19) என்ற பெருமையை பெற்றார்.
  • சகிப்புத்தன்மைக்கான சர்வதேச நாள் (நவம்.16).
  • தேசிய வலிப்பு தினம் (நவம்.17).
  • அனைத்துலக மாணவர் நாள் (நவம்.17).

18th November 2020

  • ஸ்வீடன் நாட்டின் “இளவயது கண்டுபிடிப்பாளருக்கான விருது” திருவண்ணாமலையை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியான வினிஷா உமா சங்கர் சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டயை கண்டுபிடித்தற்காக அறிவிக்கப்பட்டது,
  • தேசிய தண்ணீர் விருதுகள் 2019-ன் முதல் பரிசை இந்திய வேளாண் ஆராய்ச்சிக்குழு – கரும்பு இனப்பெருக்க நிறுவனம் – கோயம்புத்தூரை சார்ந்த விஞ்ஞானிகள் வென்றனர்.
  • தேசிய அனல் மின் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எரிசாம்பலில் இருந்து ஜியோபாலிர் கற்கள் எனும் கட்டுமானத்துக்கு உபயோகப்படுத்துப்படும் கற்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது.
  • தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் உயர்தர பெட்ரோலான “பவர் 99”அறிமுகம் செய்து வைத்தார்.
  • உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் பாரம்பரிய மருத்துவ தொடர்பான ஆராய்சிகளில் ஈடுபடுவதற்காக சர்வேதச மையத்தை இந்தியாவில் அமைக்க உள்ளதாக அறிவித்தார்.
  • உலக சுகாதார அமைப்பு உத்திரப்பிரதேச அரசுக்கு கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
  • கேப்டன் பர்கத் சிங், மிர் ரஞ்சன் நெகி, குர்பகஸ் சிங் ஆகியோர் அனைத்து வயதினருக்கான “மாஸ்டர் ஹாக்கி” விளையாட்டை ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்ட குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
  • ஒடிசா மாநிலம் சண்டீபூரில் தரையிலிருந்து வானில் உள்ள இலக்கினை தாக்கி அழிக்கும் துரித எதிர்வினை ஏவுகணை (க்யூஆர்எஸ்ஏம்) இரண்டாம் முறை நடந்த பரிசோதனை வெற்றியடைந்தது.
  • கடந்த ஒரு வாரத்திற்குள் பெருநாட்டின் 3வது புதிய அதிபராக ஃபிரான்சிஸ்கோ சகாஸ்டி (76) தேர்வு
  • மத்திய அரசுடன் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) தமிழக கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
  • அமெரிக்க ஸ்டான்ட் போர்டு பல்கலைக்கழம் வெளியிட்ட உலகளவிலான சிறந்த விஞ்ஞானிகள் பட்டியிலில் வேலூர் மாவட்டத்தை சார்ந்த விஐடி பல்கலை கழகத்தின் 10 பேராசிரியர்கள் இடம் பிடித்துள்ளன.
  • தமிழ் பதிப்பாளரான க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் காலமானர்.

19th & 20th November

  • முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் (நவம்.19) 103வது பிறந்த நாள் விழா.
  • ஜான்சிராணி லட்சுமிபாய் பிறந்த தினம் (நவம்.19).
  • இந்தியா அரசு சர்வதேச லஞ்ச குறியீட்டில் 77-வது இடத்தை பிடித்துள்ளது.
  • பெங்களூருவில் ஐ.டி. மாநாடு நவம் 19 முதல் 21 வரை நடைபெறுகிறது.
  • சோதனையின் போது சீனாவில் உருவாக்கப்பட்ட “கரோனாவாக்” தடுப்பூசியின் செயல்திறன் திருப்தியாக உள்ளெதன ஆய்வுகள் தெரிவிக்கிக்கிறது.
  • 30,800 நிறுவனங்கள் பணியாளர் சேமநில நிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) பதிவு பட்டியலில் இருந்து பொருளாதார பாதிப்பு எதிரொலி காரணமாக வெளியேறிவிட்டன.
  • வரலாற்று கடன் ஒப்பந்தத்தை கொரானாவினால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கா உதவ ஜி-20 அமைப்பு உருவாக்கியுள்ளது.
  • உலகில் மிக உயரமான இளைஞன் என்ற சாதனை படைத்த சீனாவைச் சார்ந்த சிறுவன் ரென் கியூ (7அடி 3 அங்குலம்) கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளான்.
  • பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை கராச்சி கிங்ஸ் அணி வென்று சாதனை படைத்தது.
  • மிருதுளா சின்ஹா (கோவா முன்னாள் ஆளுநர்) மறைவு.
  • ரஷ்ய தமிழறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி (79) காலமானார்.
  • உலக ஆண்கள் தினம் (நவம்.19)
  • உலக கழிப்பறை தினம் (நவம்.19)

21st November 2020

  • இணையவழி சூதாட்டத்தை தமிழகத்தில் தடை செய்ய தமிழக அரசு பிறபித்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • பி.கே. மொஹந்தி தலையிலான ரிசர்வ் வங்கி குழு பெரு நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
  • பிரதமரின் “கிருஷி சிஞ்சய் யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.1,358 கோடி கடன் தமிழக நுண்ணீர்ப் பாசனத் திட்டத்திற்கு வழங்க உள்ளது.
  • மத்திய சுகாதாரத்துறை அமைசர் ஹர்ஷ்வர்தரன் 2022-ம் ஆண்டுக்குள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் சுகாதார குடும்ப நலமையங்கள் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டதாக அறிவித்தார்.
  • பூடான் மக்களின் இணைவழி பணப்பரிவர்தனையை எளிமைபடுத்த பிரதமர் மோடியும், பூடான் பிரதமர் லோதே ஷெரிங்கும் கூட்டாக இரண்டாம் கட்ட ரூபே அட்டைத் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
  • உலக சுகாதார அமைப்பு கரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளின் பட்டியலில் இருந்து “ரெம்டெசிவர்” மருந்தை நீக்கியுள்ளது.
  • இத்தாலியை சார்ந்த தொல்லியல் நிபுணர் குழு பாகிஸ்தான் நாட்டின் ஸ்வாட் மாவட்டத்தில் 1,300 வருடம் பழையான ஹிந்து கோவிலை கண்டுபிடித்துள்ளது.
  • “ஷகி பெய்ன்” நாவலை எழுதிய ஸ்காட்லாந்து-அமெரிக்க எழுத்தளார் டக்ளஸ் ஸ்டூவர்ட்(44) புக்கர் பரிசுக்கு தேர்வாகியுள்ளார்.
  • இந்தியன் ஆயில் நிறுவனம் சுற்றுசூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வாயுக்கள் உமிழ்வு முற்றிலும் இல்லாமல் மின் வாகனங்களுக்கு மின்சாரம் வழங்கும் நவீன தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • அசாம் முதல்வரின் ட்விட்டர் கணக்கு உலக குழந்தைகள் தினத்தில் அந்த மாநிலத்தின் வந்தனா ஊரங் என்ற மாணவி 2 மணி நேரம் நிர்வகித்துள்ளார்.
  • கரோனா நோயை தடுக்க 2021 பிப்ரவரியில் வெளிவருகின்ற ஆகஸ்போர்டு மருந்து தடுப்பூசியின் 2 டோஸின் விலை ரூ.1000 என சீரம் நிறுவன (சிஇஓ) தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூணாவாலா தகவல்
  • சேலம் மாவடத்தில் வனவாசி பகுதியில் ரூ.123.53 கோடி மதீப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.
  • இந்திய யானை ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய் (62) காலமானர்
  • சர்வதேச குழந்தைகள் தினம் (நவம்.20)

22nd November 2020

  • மத்திய அமைச்சர் அமித்ஷா ரூ.61,843 கோடி செலவிலான 3வழித்தடத்திற்கான 2-ம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்தை தொங்கி வைத்தார்.
    • மாதவரம் – சிட்காட் (45.8கி.மீ)
    • மாதவரம் – சோழிங்கநல்லூர் (47கி.மீ)
    • கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை (26.1கி.மீ)
  • டிசம்பர் 20 முதல் 22 வரை வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கோள்களும் ஒன்றோடு ஒன்று இணையும் கிரேட் ஜங்சன் என்ற நிகழ்வு நிகழ இருக்கிறது
  • சி.இ.எப்.பி.பி.சி. திட்டத்தின் கீழ் மத்திய உணவு பதப்படுத்தும் துறை அமைச்சகம் சார்பில் ரூ.107.45 கோடியை 28 உணவு பதப்படுத்தும் திடங்களுக்காக பல மாநிலங்களில் அளிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது
  • பிரதமர் பசல் பீமா யோஜனா திடத்தின் கீழ் ரூ1899 கோடிக்கு 2.88 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான வேளாண் பயிர்கள் காப்பீடு தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன.
  • கரோனா நோயினால் நிகழும் மரணங்களை தடுக்கம் வழிமுறையை திருமலாதேவி கன்னேகண்டி என்ற அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவர் கண்டறிந்துள்ளார்.
  • கோவின் என்ற செயலியை கரோனா தடுப்பூசி பற்றிய அனைத்து விவரங்களை அறிந்து கொள்ள மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
  • ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை மிதிவண்டியில் பயணம் செய்து 17 வயது இளைஞரான ஓம் மகாஜன் சாதனை படைத்துள்ளார்.
  • இந்திய வம்சாவளியைச் சார்ந்த மலா அடிகாவை அமெரிக்க அதிபரான ஜோபைடன் தன் மனைவியான ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக நியமித்தார்.
  • உத்திரகாண்டின் நைனிடாலில் இந்தியாவின் முதல் பாசி தோட்டம் உருவாக்கப்பட்டது.
  • ஜெனிவாவின் இடை நாடாளுமன்ற சங்கத்தின் வெளி தணிக்கையாளராக இந்தியாவின் சிஏஜி கிரிஷ் சந்திரமுர்மு, 3 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2020 நவம்பர் 20 முதல் 21 வரை 15வது ஜி20 உச்சி மாநாடு சவுதி அரேபியா தலைமையில் நடைபெற்றது
    • கருப்பொருள் : அனைவருக்கும் 21-ம் நூற்றாண்டின் வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது

23rd & 24th November 2020

  • தென் வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி நவம்.25 “காரைக்கால் – மாமல்லபுரம்” இடைய கரையை கடக்க உள்ளது. இதற்கு ஈரான் “நிவர்” புயல் என பெயரிட்டுள்ளது
  • தில்லியில் கரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் ஜெயபிரகாஷ் முகக்கவச வங்கியொன்றை தன் வீட்டில் நவம்.22 தொடங்கி வைத்தார்.
  • “ஆழ்கடல் ஆராய்ச்சி திட்டம்” மூலமாக கடலில் இருந்து இயற்கை வளங்கள், தாதுக்களை தோண்டி எடுப்பது தொடர்பான திட்டம் விரைவில் தொடங்கப்படும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் அறிவித்துள்ளது
  • சாய்ராம் கல்லூரி முதல்வர் க.பழனிக்குமார் மெட்டீரில் துறையில் சிறந்த விஞ்ஞானியாக அமெரிக்க ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக ஆராய்ச்சியாளர் ஜான்லோனிடிஸ் தலைமையிலான குழு அறிவித்துள்ளது.
  • ஆவடி அதிவிரைவு படை தலைமை அதிகாரி எரிக் கில்பர்ட் ஜோஸ் கரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலயர்களுக்காக “புதிய தொழில் நுட்பத்துடன் கவச உடையை” வடிவமைத்துள்ளார்.
  • “ராஷ்டிரபதி விருது” பெற்ற கேரள இளைஞர் ரிஷிகேஷ் செல்போனில் வாக்களிக்கும் நுட்பத்தினை கண்டுபிடித்துள்ளார்.
  • ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சூரிய ஆற்றில் இயங்குகின்ற தானியங்கி கண்காணிப்பு படகை உருவாக்கியுள்ளனர்.
  • ரஷ்யாவின் “டேனில் மெத்வதேவ்” இங்கிலாந்தில் நடைபெற்ற ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில்சாம்பியன் பட்டம் வென்றார்.
  • இங்கிலாந்தில் நடைபெற்ற ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் குரேர்ஷியாவின் நிகோலா மெக்டிக்/நெதர்லாந்தின் வெஸ்லே இணை சாம்பியன் பட்டம் வென்றனர்.
  • 2011-ல் நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலத்தில் ரோவர் சேகர்த்த தரவுகளின் மூலம் 400 கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தின் கேல் பள்ளதாக்கு வழியாக வெள்ளம் வழிந்தோடியதாக ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.
  • “சைட்மெக்ஸ்- 20” என்று அழைக்கப்படும் இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி நவம் 21, 22 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
  • 2021-ம் ஆண்டிற்காக “உலகின் சிறந்த நகரங்கள்” பட்டியலில் டெல்லி 62வது இடத்தை பெற்றுள்ளது)
  • இந்திய வம்சாவளியை மாணவரும், இந்திய மாணவரும் ஆதித்யா சவுத்ரி, குயின் ஆகியோர் சர்வதேச காமலன்வெல்த் கட்டுரைப் போட்டியில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.
  • அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய்(84) காலமானார்
  • பொள்ளாச்சி பாடலாசிரியர் குமாரதேவன்(88) காலமானர்

25th November 2020

  • தமிழக முதல்வரால் அவசர உதவிகளுக்கு எளிதில் தொடர்பு கொள்ள தீயணைப்பு துறையின் “தீ” கைபேசி செயலியை தொடங்கி வைக்கப்பட்டது.
  • சென்னையில் வீட்டுவசதித்துறை சார்பில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபங்களையும் (ரூ.45.58 கோடி செலவில்), நெடுஞ்சாலைத்துறை சார்பில் (ரூ27.16 கோடி செலவில்) 9 மாவட்டங்களில் கட்டப்பட்ட 11 பாலங்களையும் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
  • அந்தமான் தீவில் நடத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி (கடந்த 35 நாட்களில் 10 முறை சோதனை நடத்தப்பட்டது).
  • நிலவிலிருந்து கல், மணல் ஆகியவற்றை எடுத்துவருவதற்காக ஹய்னான் மாகாணத்தின் வெங்சாய் ஏவுதளத்தில் இருந்து சீனாவின் சாங்கி-5 விண்கலம் வெற்றிகராமாக செலுத்தப்பட்டது.
  • நடப்பு நிதி ஆண்டுக்குள் 1,500 தொழில் முனைவோருக்கு எம்எஸ்எம்இ-பிரேரனா திட்டத்தின் கீழ், உள்ளூர் மொழியில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சியை அளிக்க உள்ளதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.
  • மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சம் மேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.
  • உத்திரபிரதேசத்தில் லவ்ஜிஹாத்திற்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வர அம் மாநிலத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • மத்திய பிரதேச அரசு பசுக்களின் பாதுகாப்பிற்கான கோமாதா வரியை வசூலிக்க முடிவு செய்துள்ளது.
  • நடமாடும் கோவிட்-19 ஆர்டி-பிசிஆர் பரிசோதைன ஆய்வகத்தை புது தில்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா தொடங்கி வைத்தார்.
  • அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் (ஏஐசிடிஇ) பேராசியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு “அடல் அகாடமி” என்ன 46 ஆன்லைன் பயிற்சி திட்டங்களை மத்திய கல்வி அமைச்ர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நவம்பர் 23-ல் தொடங்கி வைத்தார்.
  • அலைவாங்கி விண்வெளி திட்டத்தை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA – European Space Agency) 2029 தொடங்க உள்ளது.
  • பாகிஸ்தானின் லாகூர் “காற்று தரக் குறியீட்டு எண் 306-வுடன்” உலகில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியிலில் மீணடும் முதலிடம் பிடித்துள்ளது.
  • படி வளர்ச்சி நாள் (நவம்பர்-24)

26th & 27th November 2020

  • டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதை அரசு நூலகத்தில் சிறப்பாக பணியாற்றிய 33 நூலகர்களுக்கு தமிழக முதல்வர் வழங்கினார்.
  • அமெரிக்க தமிழ்ப் பல்கலைக்கழகம் திருப்பூரைச் சார்ந்த ஆ.சிவராஜ் எழுதிய “சின்னானும் ஒரு குருக்கள் தான்” என்ற நாவலுக்கு விருது வழங்கியுள்ளது.
  • பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள சிறந்த பெண்கள் பட்டியிலில் 100 பெண்களில் 4பேர் இந்திய பெண்கள் அதில் தமிழகத்தை சேர்ந்த இசைவாணி என்றவரும் இடபெற்றுள்ளார்.
  • டி.பி.எஸ்., – லஷ்மி விலாஸ் வங்கி இணைப்பிற்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான சுவீடன் வெள்ளி கிரக ஆய்வு குறித்த இந்தியாவின் “சுக்ரயான்” செயற்கைகோள் திட்டத்தில் இணைந்துள்ளது.
  • ஆசியாவிலேயே இந்தியா தான் லஞ்ச விகிதம் அதிகம் உள்ள நாடாக உள்ளதென ஊழல் கண்காணிப்பு அமைப்பான கரப்ஷன் வாட்ச்டாக் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு அறிவிப்பு
  • அமெரிக்காவின் பருவநிலை விவகாரங்களுக்கான தூதராக ஜான் கொரியை ஜோபைடன் நியமித்தார்.
  • “சஹாக்கர் பிரக்யா” என்னும் திட்டத்தினை கிராமப்புறங்களில் திறன் வளர்த்தல் பயிற்சியை அளிப்பதற்காக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நவம்பர் 24-ல் தொடங்கி வைத்தார்.
  • நவம்.26 முதல் 28 வரை நடைபெறும் 3வது சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு மாநாட்டு மற்றும் கண்காட்சியை (ரீ-இன்வெஸட்-2020) பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
  • கருப்பொருள் :- நீடித்த எரிசக்தி மாற்றத்துக்கான புதுமைகள்
  • குஜராத்தின் கேவாடியில் நவம்.25-26 ஆகிய தேதிகளில் 80-வது அகில இந்திய நாடாளுமன்ற சட்டமன்ற பேரவைத் தலைவர்கள் மாநாடு நடந்தது.
  • பஞ்சாபின் கபுர்தலா மாவட்டத்தின் பக்கராவில் மிகப்பெரிய உணவு பூங்காவை மத்திய உணவு பதப்படுத்துல் தொழில்கள், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நவம்பர் 24-ல் திறந்து வைத்தார்.
  • திருநங்கைகளுக்கான தேசிய இணைய தளத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைசர் தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்தார்.
  • பெண் தொழில் முனைவோர்களுக்கான “கிரானா” தி்ட்டத்தை மாஸ்டர்கார்டு மற்றும் சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க நிறுவனம் தொடங்கியுள்ளது.
  • கால்பந்து வீரர் மாரடோனா காலமானார்.
  • டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியிலில் 2வது இடம் பிடித்துள்ளார்.
  • காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல்(71) காலமானார்.
  • சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம் (நவம்.26)
  • பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் (நவம்.25)
  • விமான பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் (நவம்.23 முதல் 27 வரை)

28th & 29th November 2020

  • இந்தியாவிலேயே ஒட்டு மொத்த செயல்பாடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி அடிப்படையில் செயல்படும் சிறந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதல் மாநிலமாக மூன்றாவது முறையாக தேர்வாது.
  • தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் 6ஆண்டுகள் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.
  • தமிழ்நாட்டின் ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராச்சித்துறை முதன்மை செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மும்பையில் நடந்த தேசிய வேளாண்மை & ஊரக மேம்பாட்டு வங்கியின் 79வது வர்த்த திட்டமிடல் கூடத்தில் தமிழக மண்டல நபார்டு வங்கிகளுக்கு 4 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
  • பொறியியல் படிப்புகள் வரும் கல்வியாண்டான 2011-22-ல் ஐஐடீ, என்ஐடி-களில் தாய்மொழியில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்
  • கமலேயா என்ற ரஷ்ய அரசு நிறுவனம் கண்டுபிடித்த கரோனா தடுப்பூசியான “ஸ்புட்னிக் வி” இந்தியாவில் 10கோடி அளவிற்கு தயாரிக்கப்படும் என ரஷ்ய அரசு அறிவிப்பு
  • அகமதாபாத் -மும்பை இடையேயான 508 கி.மீட்டர் தொலைவில் ரூ24 ஆயிரம் கோடியில் புல்லட் ரெயில் சேவை திட்ட பணிகளை செயல்படுத்தும் ஒப்பந்தமானது எல் அண்ட் டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திய நிதியுதவியுடன் நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் கட்டப்பட்ட மூன்று பள்ளி கட்டிங்களை இந்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ்வர்தர் ஷ்ரிங்லா நவம்.27 அன்று திறந்து வைத்தார்
  • அணுகுண்டின் தந்தையான ஈரான் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.
  • இந்திய வம்சாவளியை சார்ந்த டாக்டர் கவுரவ் சர்மா நியூசிலாந்தில் தொழிலாளர் கட்சி சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 2வது முறையாக வெற்றி அடைந்துள்ளார்.
  • TX2 என்ற விருதினை உத்திரப் பிரதேசத்தின் பிலிபித் புலிகள் காப்பகம் வென்றுள்ளது.
  • மணிக்கு 9,600 கி.மீ வேகத்தில் செல்லும் ஹைப்பர் சோனிக் வகையை சார்ந்த “14Ts033 நுடோல்” என்ற ஏவுகணை எந்த நாட்டின் செயற்கை கோளையும் தாக்கி அளிக்கும் வல்லமையுடன் ரஷ்யா தயாரித்துள்ளது
  • நவம் 29-ல் 6 நாடுகள் பிரதமர்கள் பங்கேற்கும் 19-வது ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்திற்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்குகிறார்
  • நாம சங்கீர்தனம் மூலம் ஆன்மீக சேவையாற்றிய கோவை ஜெயராமன் பாகவதர் மறைவு.
  • சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம் (நவம்.29)

30th November 2020

  • கடந்த ஐந்து ஆண்டுகளில் “அடல் பென்ஷன்” திட்டத்தில் தமிழ்நாட்டில் 17.36 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.
  • தமிழகத்தில் முதல் முறையாக தனுஷ்கோடி கடலில் 2 கி.மீ தூரத்திற்குள் 4 முதல் 5 காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளது.
  • உயர்கல்வி படித்து விட்டு பணக்கார நாடுகளுக்கு இடம் பெயர்வோர் பட்டியில் இந்தியர்களுக்கு முதலிடம்.
  • இன்வெஸ்ட் இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் ஐக்கிய நாடுகள் ஆகியவை சஹாகர் பிரக்யா திட்டத்தை தொடங்கியுள்ளன.
  • கரோனா தடுப்பூசி தயாரிப்பினை மேற்பார்வையிட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக நாதிம் ஜஹாவியை நியமனம் செய்தார்.
  • விசாகப்பட்டினத்திலுள்ள பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தால் இந்தியாவில் முதன் முறையாக தயாரிக்கப்பட்ட வருணாஸ்திரா ஏவுகணையை இந்தியக் கடற்படையிடம் வழங்கப்பட்டது.
  • சர்வதேச 20 ஓவர் போட்டியில் சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை கிளென் பிலிப்ஸ் படைத்துள்ளார்.

Share with Friends