1st & 2nd December 2020
- தமிழகத்தில் முதல் முதலாக தூத்துக்குடி ஊர்காவல்படைக்கு திருநங்கைகளான லட்சயா, ஸ்ரீஜா தேர்வு.
- தமிழக நூலகத் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட கடப்பேரியிலுள்ள நூலகத்தின் நூலகர் தி.சுந்தமூர்த்திக்கு “நல்நூலகர் விருது” அறிவிக்கப்பட்டது.
- திருப்போரூர் நூலக வாசகர் வட்டத்திற்கு “நூலக ஆர்வலர்” விருதினை தமிழக நூலகத் துறை அறிவித்துள்ளது.
- சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிகாக 10 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
- சுழல் நிதியாக ரூ.16 கோடி நிதியை 7.5% இட ஒதுக்கீடு மாணவர்களுக்காக ஒதுக்கிடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
- 2018 – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழக கரிகாற்சோழன் விருது 3 எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது
- தி.ஞானசேகர் (இலங்கை) – எரிமலை
- ஏ.எஸ்.பிரான்சிஸ் (மலேசியா) – வானம் என்னும் போதிமரம்
- அ.இன்பா (சிங்கப்பூர்) – மூங்கில் மனசு
- வங்க கடலில் உருவான பயுலானது 4-ம் தேதி குமரி – பாம்பன் இடையில் கரையை கடக்கிறது. இப்புயலிற்கு மாலத்தீவு “புரவி” என்று பெயர் சூட்டியுள்ளது.
- மத்திய அரசின் ஜன்தன் கணக்கு மற்றும் அரசின் நேரடி பணபரிமாற்றம் (டிபிடி) ஆகியவற்றால் கிராமப்புறங்களில் ஏடிஎம்.களை பயன்பாடு அதிகரித்துள்ளது.
- இந்திய தலைநகரான தில்லி உலக காற்று மாசுபாடு அதிகமுள்ள இடங்களில் 229 நுண்துகள் குறியீட்டுடன் இரண்டாம் இடம் வகிக்கிறது.
- பாகிஸ்தானின் ஒற்றை யானை என அழைக்கப்படும் “காவன்” கம்போடியாவில் கொண்டு விடப்பட்டது.
- சென்னை ஐஐடி இளம் தொழில் முனைவோர் மாற்றுத்திறனாளிகளுக்காக வசதிகளுடன் கூடிய நவீன சக்கர நாற்காலிகளை உருவாக்கியுள்ளனர்.
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டிற்காக இந்தியன் வங்கி இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியுடன் (சிட்பி) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
- ஆழ்கடல் நீச்சல் வீரர், பயிற்சியாளர் அரவிந்தன் தலைமயிலான குழு புதுச்சேரி கடல் பகுதியில் அரியவகை கொம்பு திருக்கை மீன்களை புகைப்படம் எடுத்துள்ளனர்.
- எதிரி கப்பல்களை அழிக்கும் (300கி.மீ தூரம் வரை) பிரம்மோஸ் ஏவுகணை சோதனை அந்தமான் நிகோபர் தீவுகள் பகுதியில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
- யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்டெஃபானி ஃப்ராப்பார்ட் என்ற பெண்மணியை முதல் முறையாக கள நடுவராக ஐராேப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நியமித்துள்ளது.
- ஈரான் அணு சக்தி மையங்களில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்வதை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை ஈரான் தன் நாடளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
- செப்டம்பர் வரை 1433 கி.மீ. ரயில் பாதைகள் மின்மயமாக்கபட்டுள்ளன என மத்திய அமைச்சர் பியூஸ்கோல் அறிவித்துள்ளார்.
- வளர்ந்து வரும் இளம் திறமையார்களை கெளரவிக்கும் பாஃபாதா (பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ்) அமைப்பின் முன்னெடுப்பு தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மெர்சிடஸ் அணியின் ஹாமில்டன் பக்ரைன் பார்முலா-1 கார்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றார்.
- 2020, நவம்பர் மாத சரக்கு-சேவை வரி தமிழகத்தில் ரூ.7,084 கோடியும், இந்திய அளவில் ரூ.1,04,963 கோடியும் வசூலாகியுள்ளது.
- மக்களவையின் புதிய தலைமைச் செயலாளராக உத்பல் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- 2020-21ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி -9 சதவீதமாக இருக்குமென சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான எஸ்&பி தெரிவித்துள்ளது.
- ஆஸ்திரேலிய ராணுவத்தின் உயரிய விருதான க்டோவிரியா கிராஸ் விருதினை முதல் கடற்படை வீரர் பெட்டி ஷியான் ஆவார்.
- மேகாலயா மாநிலத்தின் மின் விநியோகத் துறையினை சீரமைக்க மத்திய அரசிற்கும் ஆசிய வளர்ச்சி வங்கிக்கும் இடையே 132.8 மில்லியன் டாலர் மதிப்பில் கடன் ஒப்பந்தம் (டிசம் -1) கையெழுத்தானது.
- மகாராஷ்டிரா இயற்கை எரிவாயு நிறுவனத்தின் 100-வது இயற்கை எரிவாயு நிலையத்தை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்து வைத்தார்.
- வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில் எஞ்சின் தயாரிப்பு தொழிற்சாலையிலிருந்து 40-வது 6,000 குதிரை திறன் கொண்ட மின்சார இரயில் எஞ்சினை ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் துவக்கி வைத்தார்.
- அஸ்ஸாம் அரசு தன் மாநிலத்தில் 29 மாவட்டங்களில் ஒவ்வொரு மாதமும் வீட்டின் பெண் தலைவரின் வங்கி கணக்கில் ரூ.830-யை செலுத்த “ஒருநோடி திட்டம்” என்ற திட்டத்தினை தொடங்க உள்ளது.
- மத்திய அரசு “தாய் மங்கூர் (Thai Mangur)” என்ற வளர்ப்பு மீன் வகைகளுக்கு தடை செய்துள்ளது.
- நாகலாந்தில் 10 நாள் வருடாந்திர கலாச்சார விழாவான ஹார்ன்பில் திருவிழா (பண்டிகைகளின் திருவிழா) டிசம்.1 முதல் 5வரை நடைபெறுகிறது. இத் திருவிழாவின் ஆரம்ப நாளான டிசம்.1 நாகலாந்து மாநில தினத்தை குறிக்கிறது.
- இந்திய அரசு பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்துவதற்கான உச்ச குழுவை (Apex Committee for Implementation of Pairs Agreements (AIPA))அமைத்துள்ளது.கேம்பிரிட்ஜ் அகராதியில் 2020-ல் அதிகமாக தேடப்பட்ட வார்த்தையாக “தனிமைப்படுத்தல்” என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளவர்களுக்கு இந்திய அரசு சார்பில் உதவிகள் வழங்கும் “டிஓபிஎஸ்” திட்டத்தில் 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- சிம்ரன்ஜீத் கெளர் (உலககுத்து சண்டை போட்டியில் 60 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம்)
- பூஜாராணி (ஆசிய போட்டியில் 75 கிலோ பிரிவில் பதக்கம்)
- ஆஷிஷ் குமார் (ஆசிய போட்டியில் 75 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம்)
- சதீஷ் குமார் (ஆசிய போட்டியில் 91 கிலோவுக்கு பிரிவில் வெள்ளிப் பதக்கம்)
- எல்லை பாதுகாப்பு படையினரின் எழுச்சி தினம் (டிசம்-1)
- உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் (டிசம்-1)
- கருப்பொருள் : Global Solidarity and Shared Responsibility
3rd December 2020
- சென்னை மெட்ரோ இரயில் நிலையத்திற்கு பாதுகாப்பு அம்சங்களை சிறப்பான முறையில் கடைபிடித்தற்காக உலக பாதுகாப்பு அமைப்பு சார்பில் சர்வதேச விருது வழங்கப்பட்டது
- கல், மண் ஆகியவற்றை நிலாவிலிருந்து எடுத்து வருவதற்காக சீனா ஏவிய சாங்கி-5 ஆய்வுக்கலம் டிசம்.2-ல் வெற்றிகரமாக நிலவில் தரையிரங்கியது.
- “எக்ஸ்பி 100” என்ற பெயரில் மிகச்சிறந்த பிரீமியம் பெட்ரோலை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
- புதுச்சேரி அரசின் சார்பில் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு பார்த்திபனின் “ஒத்த செருப்பு” “சங்கரதாஸ் சுவாமிகள்” விருதினை பெறுகிறது.
- லெக்டினெணட் ஜெனரல் ராஜீவ் சவுத்திரி எல்லையோர சாலைகளின் 27வது தலைமை இயக்குநராக டிசம்.1-ல் பொறுப்பேற்றார்.
- பைசர் தடுப்பூசியை உலக அளவில் அனுமதித்த முதல் நாடு இங்கிலாந்து.
- ரூ.200கோடி மதிப்பிலான பங்கு பத்திரங்களை மும்பை பங்குச் சந்தையில் லக்னோ மாநகராட்சி டிசம்.2-ல் வெளியிட்டது.
- உலக சுகாதார அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட உலக மலேரியா அறிக்கை-2020ன் படி கடந்த 19 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மலேரியா நோயை பெருமளவு குறைத்த நாடாக இந்தியா உள்ளது
- மகராஷ்டிராவின் புனேவில் “குழந்தைகளுக்கான நட்பான காவல் நிலையம்” அமைக்கப்பட்டுள்ளது.
- இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இந்தியாவின் முதல் உடலுறுப்பு தான நினைவு சின்னம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
- சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் கியூஎஸ் ஆசியா பல்கலைக்கழக தரவரிசை 2020-ல் முதலிடம் பிடித்துள்ளது. இதில் இந்தியாவின்
- 37வது இடத்தில் ஐஐடி – மும்பை
- 47வது இடத்தில் ஐஐடி – டெல்லி
- 50வது இடத்தில் ஐஐடி – மெட்ராஸ் பிடித்துள்ளன
- இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி ஒருநாள் போட்டியில் 12 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்து சாதனை படைத்தார்.
- குருநானக் ஜெயந்தி முன்னிட்டு “சீக்கியர்கள் உடன் பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் சிறப்பு உறவு” என்ற நூலை அவுட்ரீச் கம்யூனிகேஷன் பணியகம் வெளியிட்டுள்ளது.
- தொண்டை மண்டல ஆதீன 232-வது மடாதிபதி ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் முக்கி அடைந்தார்.
- தேசிய மாசுக் கட்டுபாட்டு தினம் (டிசம்-2)
- மாற்றுத்திறனாளிகள் தினம் (டிசம்-3)
4th December 2020
- ரூ.6,500 கோடி பணபரிவர்த்தனையை தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பெறுவதுடன் விவசாயி தினமும் 17 கோடி பணபுழக்கத்தை புழங்கி வருவதாக ஆவின் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்
- சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இந்தியாவிலேயே 2வது சிறந்த காவல்நிலையத்திற்கான விருதினை பெற்றுள்ளது.
- இந்தியாவும் அமெரிக்காவும் அறிவுசார் சொத்துப் பரிசோதனை மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைக்கவும் அந்த அமைப்பை வலுப்படுத்துவதற்குமான அடுத்த 10 ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- தொழில்நுடப்பத் துறையில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய இந்திய வம்சாவளியைச் சார்ந்த கீதாஞ்சலிராவ் என்ற சிறுமியை அமெரிக்காவின் டைம் இதழ் இந்த ஆண்டின் சிறந்த நபராக தேர்வு செய்துள்ளது.
- ரஞ்சித்சிங் டிசாலே என்ற இந்திய ஆசிரியர் சர்வதேச ஆசிரியர் பரிசை வென்றார்.
- இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியிலில் முதலிடத்தை HCl-இன் ரோஷினி, இரண்டாவது இடத்தை கிரண் மஜூம் தார் ஷா பிடித்துள்ளனர்.
- அமெரிக்காவின் அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவில் மஜு வர்கீஸ் என்ற இந்திய அமெரிக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பிரம்மோஸ் விண்வெளி மைய நிறுவனர் ஏ.சிவதாணுப்பிள்ளை எழுதிய “அப்துல்கலாமுடன் 40 ஆண்டுகாலம் – சொல்குலப்படாத தகவல்கள்” என்ற நூலை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயடு வெளியிட்டார்.
- எம்ஹெச் ஸ்பைசஸ் நிறுவனர் தரம்பால் குலாடி(97) காலமானர்.
- ஜாதிகளை அடிப்படையாக கொண்டுள்ள குடியிருப்பின் பகுதிகளின் பெயர்களை நீக்க மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- விளையாட்டு பயிற்சியாளரான குல்தீப் ஹேண்டு ஃபிட் இந்தியா இயக்கத்தின் தூதராக நியமிக்கப்படுகிறார்.
- உலகின் 8வது மிகப்பெரிய பால் செயலாக்கியாகி குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் பிராண்டான அமுல் உருவாகியுள்ளது.
- 2019-ல் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியிலில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்திலும், இந்தியா 8வது இடத்திலிலும் உள்ளது.
- ஒடிசாவில் 9வது சர்வேத மணல் கலை விழா மற்றும் கோனார்க் நடன விழா டிசம்.1 முதல் 5வரை நடைபெறுகிறது.
- குழந்தைகளுக்கான முதல் புத்தகமான வஹானா மாஸ்டர் கிளாஸ் நூலினை இத்தாலிய எழுத்தாளர் ஆல்ஃபிரேடாகோவெல்லி இந்தியாவில் வெளியிட்டார்.
- தேசிய வழக்கறிஞர் தினம் (டிசம்-3)
- இந்திய கடற்படை தினம் (டிசம்-4)
5th December 2020
- ரூ.1,295 கோடி மதிப்பீட்டிலான மதுரை மாநகராட்சி மக்களின் குடிநீர் சேவைக்கான முல்லை பெரியார் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
- துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு முன்னாள் பிரதமர் I.K.குஜ்ரால் நினைவு தபால் தலையை வெளியிட்டார்.
- டிசம்.6 முதல் 10 வரை “பாரதி உலா – 2020” நிகழ்ச்சி இணைய வழியில் நடைபெறுகிறது.
- இசைக்கவி ரமணனுக்கு ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் நடைபெற உள்ள பாரதி திருவிழவில் “பாரதி விருது” வழங்கப்பட உள்ளது.
- நீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த மெய்நிகர் மாநாட்டின் 7வது பதிப்பு டிசம்.2 முதல் 4 வரை நடைபெற்றது
- யுனிசெஃப், தேசிய ஊரக வளர்ச்சி & பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் ஆகியவை தெலுங்கானா, ஆந்திரா & கர்நாடகா மாநில அரசுகளுடன் சேர்ந்து ஏற்பாடு செய்தது
- முதல் விருந்தினர் – ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன்
- மையக்கருத்து:- சுகாதாரம் கவனிக்கப்படதக்கதது (Hygine matters)
- பிரபல விஞ்ஞானி விருது – 2020 திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டை விஞ்ஞானி சிவகுமாருக்கு தில்லியில் வழங்கப்பட்டது.
- கரோனா மேலாண்மைக்கான விருதினை பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவர் ஜி.சுபாஷ் சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
- உழவர்களுக்கும், வேளாண்மை அலுவலர்களுக்கு உள்ள தொடர்பை வலுப்படுத்தவும், உழவர்களுக்கு மானிய திட்டங்கள் சென்றடைய தூத்துக்குடி மாவட்டத்தில் உழவர்-அலுவலர் தொடர்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- இந்திய ரிசர்வ் வங்கி நிகழ்நேரப் பெருந்திரள் தீர்வுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்ற வசதியை (RTGS) வாரத்தின் அனைத்து நாட்களிலும் அல்லது 24 மணி நேரமும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச் செய்யுமாறு அமைத்துள்ளது.
- ஹயபூசா-2 விண்கலமானது ரைகு என்ற குறுங்கோளிலிருந்து எடுக்கப்பட்ட அரிதான மாதிரிகளுடன் தெற்கு ஆஸ்திரேலியாவில் தரையிறங்க உள்ளது.
- லட்சத்தீவு நிர்வாகி தினேஷ்வர் சர்மா (66) காலமானார்.
- உலக தன்னார்வ தினம் (டிசம்-5)
6th December 2020
- சென்னை உயர்நீதிமன்றம் இந்தியாவிலேயே “அதிக பெண் நீதிபதிகள் பணியில் உள்ள உயர்நீதிமன்றம்” (13 பெண் நீதிபதிகள்) என்ற பெருமையை பெற்றுள்ளது.
- ஆன்லைன், கற்பனை விளையாட்டு விளம்பரங்களை வெளியிடும்போது “இந்திய விளம்பர தர நிர்ணய குழுவின்” வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென தனியார் டிவி ஒலிபரப்பாளர்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- டிசம்.4 அன்று பிரதமர் மோடி அமெரிக்காவில் வாழும் ஐஐடி முன்னாள் மாணவர்களின் அமைப்பபான “பான் ஐஐடி அமெரிக்கா” ஏற்பாடு செய்த “ஐஐடி-2020” உலகளாவிய உச்சி மாநாட்டில் உரையாற்றினார்.
- மத்திய அரசு நவம்.3 அன்று துணை ராணுவ ஊழியர் (வியூகம்) பதவியை உருவாக்க அனுமதியளித்துள்ளது.
- இந்தியாவின் முதல் துணை ராணுவ ஊழியர் – ஜெனரல் பரம்ஜித் சிங்
- இந்திய தேர்தல் ஆணையம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க அஞ்சல் வாக்குசீட்டை பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளது.
- டிசம்.5 அன்று மகாராஷ்டிராவின் “கன்ஹர்கான்” வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் மகாராஷ்டிராவின் 50வது வனவிலங்கு சரணாலயமாக மாறியுள்ளது.
- டிசம்.5 அன்று கர்நாடக விகாஸ் கிராமீனா வங்கி விசாயிகளுக்காக “கிரிஷி ஓடி” எனும் திட்டத்தினை அறிமுகப்படுதியது.
- இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் இந்தியா-ரஷ்யா கடற்படைகளின் கூட்டு கடற்படை ஒத்திகை (Passage Exercise (PASSEX)). டிசம் 4-5 தேதிகளில் நடைபெற்றது.
- 6வது இந்தியா-C.L.M.V வணிக மாநாடு 2020 டிசம்.3-4 நாட்களில் நடைபெற்றது.
- C.L.M.V என்பது
- C – கம்போடியா
- L – லாவோஸ்
- M – மியான்மர்
- V – வியட்நாம்
- 700 மெகாவாட் நீர்மின்சார்த்தை உற்பத்தியை செய்யும் “ஆசாத் பட்டன் திட்டம்” சீனா & பாகிஸ்தான் நாடுகள் கூட்டாக மேற்கொள்கிறது.
- சிங்கப்பூரின் “தி. ஸ்டரெய்ட் டைம்ஸ்” நாளிதழால் சிறந்த ஆசியராக சீரம் இன்ஸ்டிடியூட்டின் முதன்மை தலைமை அதிகாரி ஆதார் பூனாவாலா தேர்வு செய்யப்பட்டார்.
- இந்திய விலங்கயில் ஆய்வு மையம் தற்போது நடத்திய ஆய்வு அறிக்கையில் மலையன் ராட்சத அணில் (or) கறுப்பு ராட்சத அணில் அழியும் நிலையில் செல்லக்கூடும் என தெரிவித்துள்ளது.
- ஐனவரி – அக்டோபர் வரையிலான வெப்பதரவுகளின் அடிப்படையில் 2016, 2019 ஆண்டுகளைத் தொடர்ந்து 3-வது அதிக வெப்ப ஆண்டாக 2020 மாறியுள்ளதென உலகளாவிய காலநிலை 2020 அறிக்கை தெரிவித்துள்ளது.
- சீனா தனது கொடியை சாங்கி-5 விண்கல பயணத்தின் போது ஏற்றியதன் மூலம் நிலவில் கொடியேற்றிய 2வது நாடு என்ற பெருமை பெற்றுள்ளது.
- திரவ பெட்ரோலிய வாயு சங்க முதல் துணை தலைமை அதிகாரியாக இந்தியன் ஆயில் கார்பஷன் தலைமை அதிகாரி ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா நியமனம்
- உலக மண் தினம் (டிசம்.5)
- கருப்பொருள் : To keep soil alive, protect soil biodiversity
- சர்வதேச தன்னார்வ தினம் (டிசம்.5)
- கருப்பொருள் : Together we can through volunteering
7th & 8th December 2020
- ஏ.குலேசகரன் “ஜாதி வாரி கணக்கெடுப்பு ஆணைய தலைவராக” நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழக முதல்வரால் புதிதாக கட்டப்பட்ட 17 துணைமின் நிலையங்களையும், சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்களையும், பாலங்களையும் திறந்து வைத்தார்.
- கரோனா தடுப்பு மருந்துகளை பதப்படுத்தி வைக்க சிறப்பு மையங்கள் தமிழகத்தில் 51 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
- இரு வழிதடங்களில் 29.4 கி.மீ நீளத்திற்கு ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணியை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
- அமெரிக்க விஞ்ஞானிகளால் கரோனா வைரஸ் தொற்றை ஸ்மார்ட்போன் கேமரா மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் கண்டறியும் பரிசோதனை கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
- எல்லா வங்கி வாடிக்கையாளர்களும் பயன்படுத்த “ஐமொபைல் பே (iMObile Pay)” என்ற செயலியை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
- ஒரு லட்சம் கோடி டாலர் இழப்பானது உலகம் முழுவதும் நடைபெற்ற சைபர் குற்றங்களால் ஏற்பட்டுள்ளது என மெக்கஃபே (ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் நிறுவனம்) தெரிவித்துள்ளது.
- டிசம்.6 அன்று சீனா “லாங்க் மார்ச் -3B” ராக்கெட் மூலம் “காஃபென் – 14” என்ற புவி ஆராய்ச்சி செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது .
- போர்ச்சுக்கல் கால்பந்து வீரல் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொழில்முறை போட்டிகளில் 750 கோல் அடித்து புதிய மைல்கல்லை அடைந்தார்.
- ஐசிசி சூப்பர் லீக் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
- டிசம்.7 மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஃபிட் இந்தியா மிதிவண்டி போட்டியின் 2வது பதிப்பை தொடங்கி வைத்தார்.
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சன் ஓய்வு அறிவித்தார்.
- முள்ளங்கியை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் அறுவடை செய்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
- படைவீரர் கொடி நாள் (டிசம்.7)
- சர்வதேச விமான போக்குவரத்து தினம் (டிசம்.7)
9th December 2020
- தமிழக சட்டப்பேரவையில் வ.உசி., ஓமந்தூரார், பரமசிவம் சுப்பராயன் ஆகிய மூன்று தலைவர்களின் உருவப்படங்களை திறக்கப்படும் என்ற முதல்வர் அறிவிப்பால் சட்டப்பேரவையை அலங்கரிக்கும் தலைவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்வு.
- தமிழ் வழி பயின்றவர்களுக்கு அரசுப்பணியில் 20% ஒதுக்கீடு சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் ஆளுநர் அளித்த நிலையில் தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
- தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 63.41 லட்சமாக உள்ளதென தமிழக அரசு அறிவித்துள்ளது.
- இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறை மற்றும் இந்திய செல்போன் நிறுவன சங்கங்கள் இணைந்து நடத்தும் “இந்திய மொபைல் மாநாடு 2020” (India Mobile Congress) டிசம். 8 முதல் 10 வரை நடைபெறுகிது.
- மையக்கருத்து:- உள்ளடக்கிய புத்தாக்கம் – திறன்மிகு பாதுகாப்பபான மற்றும் நிலையானது (Inclusive Innovation – Smart, Secure, Sustainable)
- சீனாவும் நேபாளமும் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டர் என அறிவித்துள்ளன. முந்தைய அளவை விட எவரெஸ்ட் சிகரம் 0.86 மீட்டர் அதிகம்.
- ஐியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி 2021 இறுதிக்குள் ஜியோ 5ஜி சேவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- ரூ.22 கோடியை (30லட்சம் டாலர்கள்) பாலஸ்தீனத்தின் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு இறுதி தொகையாக இந்திய அரசு பாலஸ்தீனத்திற்கு வழங்கியுள்ளது.
- ஆசிய வளர்ச்சி வங்கியானது பெங்களூர் ஸ்மார்ட் எரிசகத்தி திறமையான மின் விநியோக திட்டத்திற்காக 190மில்லியன் டாலர் கடன் வழங்க டிசம்.4 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தியாவில் முதல் கட்டமாக 3 கோடி சுகாதாரப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இந்தியாவின் “இன்வெஸ்ட் இந்தியா” (Inverst India) அமைப்பிற்கு ஐ.நா. வர்த்தக வளர்ச்சி மாநாடு அமைப்பின் “ஐநா மூதலீட்டு மேம்பாட்டு விருது 2020” (United Nations Investment Promotion Award) வழங்கப்பட்டுள்து.
- உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் குவாலியர், ஓர்ச்சா ஆகிய நகரங்களை யுனெஸ்கோ சேர்த்துள்ளதாக மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
- போதைப்பொருள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் (United Nations Commission on Narcotic Drugs (UN-CND) 63-வது அமர்வானது கஞ்சாவை மிகவும் ஆபத்தான மருந்து பிரிவில் இருந்து நீக்கியுள்ளது.
- சீனாவின் மிகப்பெரிய, மேம்பட்ட அணு இணைவு சோதனை சாதனமான HL-2M டோகாமகர் உலை (TOKAMAK REACOR) “செயற்கை சூரியன்” என அழைக்கப்படுகிறது.
- பிரிட்டனில் முதல் கரோனா தடுப்பூசி 90 வயது மார்கெரட்கீனன் என்ற மூதாட்டிக்கு செலுத்தப்பட்டது.
- பிரிட்டிஷ்-இந்திய பத்திரிக்கையாளர் அனிதா ஆனந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை மையமாகக் கொண்டு The Patient Assassing: A True Tale of Massacre, Revenge and the Raj என்ற பெயரில் எழுதிய புத்தகத்திற்கு ஃபென் ஹெஸ்ஸல்-டில்ட்மான் வரலாற்றிற்கான பரிசு 2020 (PEN Hessell-Tiltman Prize for Histroy 2020)-ஐ வென்றுள்ளது
- பிக்சல் (PIXXEL) என்ற நிறுவனம், இந்திய விண்வெளி துறையின் கீழ் செயல்படும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இந்தியாவின் முதல் “தனியார் தொலையுணர்வு செயற்கைக்கோளை (Remote-Sensing Satelite) தயாரிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
- ஸ்பெயினின் வலென்சியா நகரில் நடைபெற்ற அரை மாராத்தான் போட்டியில் கென்ய வீரர் கிபிவோட் கன்டி போட்டிக்கான இலக்கை 57நிமிடம் 32விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.
- மும்பையை சார்ந்த ஜெஹான் தாருவாலா சாகிர் கிராண்ட் பிரிக்ஸின் ஃபார்முலா-2 போட்டியை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை படைத்துள்ளார்.
- உலக தடகள விருதுகள் 2020-க்கான (World Athletics Award – 2020) வீரர்கள் தேர்வு
- ஆண் உலக தடகள வீரர் – துருவ வால்டர் மோண்டோ டுப்லாண்டிஸ் (ஸ்வீடன்)
- பெண் உலக தடகள வீரர் – டிரிபிள் ஜம்பர் யூலிமர் ரோஜாஸூ (வெனிசுலா)
- சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (டிசம்.9)
- Theme : Recover with Integrity
10th December 2020
- டிசம்.9 அன்று சுகாதாரம், மருத்துவம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்காக இந்தியா, சுரினாம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- ரூ.971 கோடி செலவில் கட்டப்பட இருக்கும் புதிய நாடாளுமன்றத்திற்கு பிரமர் இன்று (டிசம்.10) அடிக்கல் நாட்டுகிறார்.
- 2020-21 நிதியாண்டில் 14 மாநிலங்களுக்கு வழங்குவதற்கு 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்த வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 9வது தவணையில் தமிழகத்திற்கு ரூ335.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- ரூ.23,523 கோடியை “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” சீர்திருத்த நடவடிக்கையை சிறப்பாக செயல்படுத்திய 9 மாநிலங்களுக்கு சிறப்பு கடனாக வழங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
- ரூ.74கோடியே 24 லட்சம் நிதியை நிவர் புயல் நிவாரண பணிக்காக ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 34 சிபிஐ அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் காவல் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
- வானவில் பண்பாட்டு மையம் சார்பில் டிசம்.11-20 வரை நடைபெற உள்ள பன்னாட்டு பாரதி திருவிழா-2020-ல் மோடி பங்கேற்கிறார்.
- டிசம்.8-ல் உத்திரகண்ட் தானக்பூர் எரிசக்தி நிலையத்தில் இந்திய-நேபாளம் கால்வாயின் குறுக்கணையில் நீர்வரத்தினை சரிபடுத்தும் பணிக்கு தேசிய நீர் மின்சாரகழக தலைவரும், மேலாண் இயக்குநருமான ஏ.கே.சிங் அடிக்கல் நாட்டினார்
- குவைத்தின் பிரதமராக ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமாத் அல்-சபாஹ் மீண்டும் நியமனம் செய்யப்பட்டார்
- இந்திய வம்சாவளியை சார்ந்த விவேக் மூர்த்தி ஜோபைடன் மருத்துவ குழுவில் சர்ஜன் ஜெனரலாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
- இந்திய வம்சாவளியரான அனில் சோனி உலக சுகாதார அமைப்பு தொண்டு நிறுவனத்தின் (WHO Foundation) முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக (Cheilf Executive Officer (CEO)) 2021 ஜனவரி 01 அன்று பதவியேற்க உள்ளார்.
- ட்விட்டரில் உலக அளவில் அதிக மக்களால் அதிகம் பேசப்பட்டோர் பட்டியலில் பிரதமர் மோடி 7வது இடத்தில் உள்ளார்
- முதலிடம் – அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
- இரண்டாவது இடம் – அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோபைடன்
- 2014-ல் விண்ணுக்கு அனுப்பபப்ட்ட ஜப்பான் நாட்டு ஹயாபுசா-2 விண்கலம் (Hayabusa 2 Space craft) 30கோடி கி.மீ தூரம் பயணித்து ரியகு குறுங்கோளிலிருந்து (Aseroid Ryugu) மண் & பாறைத்துகளைகளை எடுத்துக்கொண்டு டிசம்.6-ல் பூமியை வந்தடைந்தது.
- பசுவதை தடைச்சட்ட மசோதா கர்நாடக சட்டபேரவையில் நிறைவேற்றம்.
- இந்திய ரயில்வேயானது டெல்லி வாரணாசி அதிவேக ரயில்பாதையில் தரைவழி கணக்கெடுப்பு நடத்த லிடார் (LiDAR – Light Detection and Ranging Technique) நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளது.
- மஹிந்திரா நிறுவனம் எஸ்.பி.ஐ இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களை காப்பீடு திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக இனணந்துள்ளது.
- கடல் வெப்பநிலை அதிகரித்தன் காரணமாக செங்கடலிலுள்ள ஆண் ஆமைகள் பெண் தன்மையுடையனவாக மாறி வருகிறது என சவூதி அரேபியா மன்னர் அப்துல்லா அறிவியல் மற்றம் தொழில் நுட்ப பல்கலைக் கழக ஆராய்சியாள்கள் குழுவின் ஆய்வு தெரிவிக்கிறது
- என்.டி.பி.சி லிமிடெட் (National Thermal Power Corporation) போபாலின் இந்திய வன மேலாண்மை நிறுவனத்துடன் (Bhopal for the implementaion of Narmada Lanscape Restoration Project (NLRP)) நர்மதா இயற்கை மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- அமெரிக்காவில் முதன் முறையாக கருப்பினத்தைச் சார்ந்த லாய்ட் ஆஸ்டின் அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- உலக மலேரியா அறிக்கை 2020-ன் படி மலேரியா நோயை கட்டுப்படுதிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியவில் முதலிடம் பிடித்துள்ளது
- 2024-ல் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறவுள்ள 32வது ஒலிம்பிக் போட்டியில் “பிரேக் டான்ஸ்” புதிய பிரிவாக “பிரேக்கிங்” என்ற பெயரில் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
- ஸ்கேடட்போர்டிங், ஸ்போர்ட் கிளைம்பிங், சாஃபிங் போன்ற புதிய விளையாட்டுகள் 2021-ல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன.
- இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் படேல் அனைத்துவித கிரிக்கெட் பாேட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.
- மனித உரிமைகள் தினம் (டிசம்.10)
- Theme : Recover Better – Stand up for Human Rights
11th & 12thDecember 2020
- ரூ.119 கோடி மதிப்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், ரூ.162.26 கோடி மதிப்பில் கோயம்புத்தூர், திருச்சியில் தகவல் தொழில்நுட்ப கட்டிடங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
- உலக நாடுகளில் யோக பயிற்சி முறையை ஊக்குவிக்கும் கூட்டு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த ஆயுஷ் அமைச்சகமும், இந்திய இந்திய கலாச்சார தொடர்பு கவுன்சிலும் (Indian Council for Cultural Relation (ICCRI)) இணைந்து திட்டமிட்டுள்ளன.
- டிசம்.8 அன்று நீதியரசர் திரு. ராஜேஷ் பிண்டால் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் பொது உயர்நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான நிதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (National Backward Classes Finance & Development Corporation (NBCFDC)) மற்றும் தேசிய பட்டியல் இனத்தவருக்கான நிதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (National Scheduled Castes Finance and Development Corporation (NSFDC)) விஸ்வாஸ் யோஜனா (Vanchit Ikai samooh our Vargon ki Aarthi Sahayta (VISVAS Yojana)) என்ற பெயரிலான பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவரின் நிதி மேம்பாட்டிற்கான திட்டத்தினை சிறந்த முறையில் அமல்படுத்துவதற்காக சென்ட்ரல் ஃபாங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
- அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 300 மில்லியன் இளைஞர்களுக்கு, டிஜிட்டல் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க அமெரிக்காவினை மையமாகக் கொண்ட சர்வதேச ஆலோசனை நிறுவனமான PwC (Price Waterhouse Coopers), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (United Nations Children’s Fund) மற்றும் யுவா (YuWaah (Generation Unlimited in India)) ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- டிசம்.9 அன்று கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடத்தை பொருத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் லட்சத்தீவை 100% கரிம வேளாண் பகுதி (Organic Agricultural) என்று அறிவித்துள்ளது.
- பொது இடங்களில் பொது மக்களுக்கு இலவச வைஃபை இணையதள வசதி வழங்கும் திட்டமான பி.எம்.வாணி (PM-WANI – Prime Minister’s Wi-Fi Access Network Initiative) என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தியாவிற்கும் உஸ்பெகிஸ்தானிற்கும் இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
- இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான ராஜா ஜான் உர்புதூர் சாரி நிலவுக்கு செல்லும் குழுவில் நாசா தேர்வு செய்துள்ளது.
- டிசம்.17-ல் தகவல் தொடர்புக்கான சிஎம்எஸ்-01 செற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-50 விண்ணில் ஏவப்படுகிறது.
- கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி தன் உறுப்பு நாடுகளுக்கு 9 பில்லியன் அமெரிக்கா டாலர் (சுமார் ரூ.66,392 கோடி) நிதியை ஒதுக்கியுள்ளது.
- டைம் இதழ் இந்த ஆண்டின் சிறந்த நபராக ஜோபைடன், கமலா ஹாரில் இருவரையும் தேர்வு செய்துள்ளது.
- ய.மணிகண்டனுக்கு கோவை பாரதி பாசறை வழங்கும் “பாரதி விருது” வழங்கப்படுகிறது.
- கருப்பினத்தவர்களை வீட்டில் அடைக்கலம் தந்து காப்பற்றிய இந்திய வம்சாவளியரான ராகுல் துபே டைம் இதழின் ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
- கியர்மேன் என அழைக்கப்பட்ட சாந்தி சோஷியல் சர்வீஸ் அறங்காவலர் பி.சுப்பிரமணியன் காலமானார்.
- விம்பிள்டன் முன்னாள் சாம்பியன் அலெக்ஸ் அல்மிடோ காலமானார்.
13th & 14th December 2020
- திருவண்ணாமலை மாவட்டத்தின் கீழராவந்தவாடியில் உள்ள சிற்பக்குளம், அரியலூர் மாவடத்தின் அழகர்மலை கிராமத்தில் உள்ள யானை சிற்பம் ஆகியவற்றை பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
- டிசம்.14-ல் தமிழக முதல்வர் சென்னையில் முதற்கட்டமாக “47 மினி கிளினிக்” (Mini Clinic) தொடங்கி வைக்ககிறார்.
- ரூ.24,500 கோடி மதிப்பீட்டலான 24 தொழில் திட்டங்களை தொடங்க 18 தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலனையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- சைக்கிள் ஓட்டுவதும் ஒருவித விளையாட்டு என்ற விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்த சென்னை-ராமேசுவரம் இடையே ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்
- டிசம்.10 அன்று ரூ.266 கோடி மதிப்பில் 1.5 கி.மீ நீளத்தில் பீகாரின் சோன் ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்ட மூன்று வழி கோயில்வார் பாலத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்ரி திறந்து வைத்தார்.
- உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் இந்தியாவின் முன்னெடுப்பான பிட்னஸ் கா டோஸ், ஆதா கன்டா ரோஜ் (Fitness Ka Dose Aadha Ghanta Roz) என்னும் பிரச்சாரத்தை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.
- இந்தியர்கள் 2020-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடிய வார்த்தையில் “ஐ.பி.எல்” முதல் இடத்தையும், “கரோனா தொற்று” இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.
- அதிக மதிப்பிலான பரிவர்ததனைக்கு பயன்படுத்தும் “ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் சிஸ்டம் (RDGS)” என்ற 24 மணி நேர சேவை டிசம்.14 முதல் அமலுக்கு வந்தது
- ஐ.ஐ..டி மும்பை வெளியிட்டுள்ள “நகர்ப்புற வாழ்க்கை தர அட்டவணை 2020” (Urban Quality of Life (UQoL) Index 2020)-ல் முதல் நான்கு இடங்களை மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகியவை பெற்றுள்ளன.
- ஸ்டேட் பாங் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள இந்திய அளவில் கோவிட்-19 தொற்று நோயை நிர்வகிக்கும் மாநிலங்களில் 7வது மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
- நாடு முழுவதும் 2927 நீதி மன்ற வளாகங்கள், இ-நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் (eCoruts Mission Mode Project) “அதிவேக பெரும் வலையமைப்பு” (Wide Area Network (WAN)) மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
- தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு சோதனைத் திட்டத்தினை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
- பிரேசில் நாட்டினைச் சார்ந்த டாக்டர் கரோலினா அராஜோவுக்கு “2020 இளம் கணித மேதைக்கான ராமானுஜன் பரிசு” (Ramanujan Prize for Young Mathematicians 2020) வழங்கப்பட்டது.
- இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைமை ஆசிரியரும், எழுத்தாளருமான ராஜ் கமல் ஜா எழுதிய “தி சிட்டி அண்ட் தி சி (The City and the Sea)”-க்கு ரவீந்திரநாத் தாகூர் இலக்கிய பரிசு 2020 வழங்கப்பட்டுள்ளது
- டிசம்.8 முதல் 10 வரை சிந்து தொழில் முனைவோர் The Indus Entrepreneurs (TiE)) உலகளாவிய உச்சி மாநாடு – 2020 (Global Summit Summit – 2020) நடைபெற்றதுகருப்பொருள் – தொழில் முனைவோர் 360 (Entrepreneurship 360)
- இந்திய வம்சாவளியரான பிரமிளா ஜெயபால் அமெரிக்க ஜனநாயக கட்சியின் சக்தி வாய்ந்த பிரிவான காங்கிரஸின் முற்போக்கு காகஸின் (U.S. Congressional Progressive Caucus) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- “உலக கார்பன் திட்டம்” அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் 2020ம் ஆண்டில் உலகளாவிய கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வு (Carbon Dioxide Emissions) 7% குறைந்துள்ளது என அறிவித்துள்ளது
- கானா அதிபராக நானா அகுபோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- டிசம்.11-ல் இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் “மெய்நிகர் உச்சிமாநாடு” குறித்து விவாதிக்க நடந்தது.
- 2020 இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு விளையாட்டுத் துறையில் 2020-ம் ஆண்டிற்கான சிறந்த ஆண், பெண் விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- சிறந்த ஆண் வீரர் – பஜ்ரங் புனியா
- சிறந்த பெண் வீரர் – எலாவெனில் வலரிவன்
- செயற்கைகோள் அடிப்படையிலான நாரோபேண்ட் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் நெட்வெர்க் (NB-Io (Narrow Band-Internet of Things)) சேவையை துவக்க பிஎஸ்என்எல் நிறுவனம் ஸ்கைலோடெக் இந்திய (Skylotech India) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (Defence Research and Development Organsiation (DRDO)) கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கி பரிசோதனை முழு வெற்றி பெற்றுள்ளது. புனேவில் உள்ள டிஆர்டிஓ மையம் வடிவமைத்துள்ளது.
- டிசம்.10 அன்று இந்திய எரிசக்தி சேமிப்பு கூட்டணி மற்றும் ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு ஆகியவை இந்தியாவில் எரிசக்தி சேமிப்பில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
- இந்தியாவின் அங்கிதா ரெய்னா, ஜார்ஜியாவின் இகாடாரின் கோர்கோட்ஸ் இணை துபாயில் நடைபெற்ற ஐடிஎஃப் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது.
- ஜே.கே. டயர் எஃப்.எம்.எஸ்.சி.ஐ 23-வது தேசிய கார் பந்தயத்தின் எல்ஜிபி 4 பிரிவில் அஸ்வின் தத்தா பட்டம் வென்றார்
15th December 2020
- தமிழக முழுவதும் மக்களை தேடிச் சென்று மருத்துவ சேவை அளிக்க 2,000 அம்மா மினிகிளினிக் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
- டிசம்14-ல் தமிழகத்தில் தொழில் தொடங்க தேவையான நிலங்களை கண்டுபிடிக்க சிப்காட் சார்பாக உருவாக்கப்பட்ட தனி இணையதள வசதியை முதல்வர் தொடங்கி வைத்தார்.
- குஜராத்தில் 30,000 மெகாவாட் மின்உற்பத்திக்கான கட்டமைப்பு உள்ள உலகின் மிகப்பெரிய புதுபிக்கக்தக்க எரிசக்தி பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
- டிசம்.17-ல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சுமந்து செல்லும் பிஎஸ்எல்விசி-50 ராக்கெடின் கவுண்ட்டவுன் நாளை தொடங்க உள்ளதென இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன.
- இந்தியா மொபைல் போன் உற்பத்தியில் சீனாவினை முந்த தீவிரமாக உள்ளதென மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்.
- இந்திய படைகள் தரை, வான், கடலென எந்தவொரு இடத்திலும் எதையும் சந்திக்க தயாராக உள்ளதென முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
- தேசிய விருதுகள் பெற்ற திரைப்படக்கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்.
- இன்று (டிசடிசம்.15) புதுச்சேரியில் தொடங்க உள்ள இந்திய திரைப்பட விழாவில் பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம் சங்கரதாஸ் சுவாமி விருதினை பெறுகிறது.
- டிசம்.21-ல் இணைய வழியில் தமிழ் இசைசங்கத்தின் சார்பில் 78-ம் ஆண்டு இசை விழா தொடங்க உள்ளது.
- குவாஹாட்டியை தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக மாற்ற முழுமுயற்சியுடன் செயல்படுகிறது என அஸ்ஸாம் முதல்வர் சரவானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
- டிசம்.17-ல் பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பல்வேறு துறை சார்ந்த இரு நாட்டு உறவுகளை பற்றி ஆலாசனை நடத்த உள்ளார்.
- 2021 ஜனவரி 1 முதல் பொம்மைகள் தரக்கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வர உள்ளது.
- அவசர மருத்துவ குழு (Emergency Medical Team (EMT)) முன் முயற்சியை செயல்படுத்த உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு (Itnernational Federation of Red Crescent Socieites (IFRC)) “சிவப்பு சேனல் ஒப்பந்தம் (Red Channel Agreement)” என்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
- சிங்கப்பூரில் 2021 மே 13 முதல் 16 வரை உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum (WEF)) 2021-ம் ஆண்டிற்கான சிறப்பு வருடாந்திர கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிஎஸ்இ (Bombay Stock exchange)ன் துணை நிறுவனமான பிஎஸ்இ இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் விவசாயிகளுக்கான மின் சந்தையை பீம் (BEAM – BSE E-Agricultural Ltd) என்ற பெயரில் தொடங்கியுள்ளது.
- மணிப்பூரை சார்ந்த பாலாதேவி தொழில் முறை ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்களை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- விவசாயிகளை முதலிடம் வைத்தல் (Putting Farmers First) என்ற சிறு புத்தகத்தினை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
- புரெஜெக்ட் 17ஏ (பி17ஏ) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முதல் போர்கப்பல் கடற்படையில் டிசம்.14-ல் இணைக்கப்பட்டது.
- தேசிய குடும்ப நல ஆய்வு அமைப்பு நடத்திய ஆய்வில் நாடு முழுவதும் 20 மாநிலங்களில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு உடல்பருமன் வெகுவாக அதிகரிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16th December 2020
- தமிழகத்தின் கிரிஜா வைத்தியநாதன், சத்யகோபால் தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் குழுவில் இடம் பிடித்துள்ளன.
- டிசம்.17-ல் தகவல் தொடர்பு சேவைக்கான சிஎம்எஸ்-1 செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
- இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
- டிசம்.15-ல் கண்காணிப்பு பணிக்காக “சுஜித்” ரோந்துக் கப்பல் இந்திய கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்டது.
- டிசம்.15-ல் வல்லபபாய் படேலின் 70வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
- இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது இந்தியா-இங்கிலாந்து (பிரிட்டன்) உறவில் புதிய சகாப்தம் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
- புதுவையில் முதன் முறையாக கரும்புக்கு ரூ.10,000 மானியம் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
- பத்மவிபூஷன் விருது பெற்ற விஞ்ஞானி ரோத்தம் நரசிம்மா (87) காலமானார்.
17th & 18th December 2020
- டிசம்.16-ல் தா.லலிதா மதுரை உலக தமிழ் சங்க இயக்குநராக பொறுப்பேற்றார்.
- வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் சென்னை உயர் நீதிமன்ற ஏ.பி.சாஹி ஓய்வு பெற உள்ளதால் புதிய நீதிபதியாக கொல்கத்தா உயர்நீதிபதியான சஞ்சீவ் பானர்ஜியை நியமிக்க உச்சநீதிமனற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
- சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த நீதிபதியான வினித் கோத்தாரியை குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு இடம் மாற்ற செய்ய உச்சநீதிமனற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
- உச்சநீதிமன்றம் விவசாயிகள் பேராட்டத்திற்கு தீர்வு காண குழு ஒன்று அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
- இந்தியா 1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் 50வது ஆண்டு பொன் விழா டிசம்.16-ல் அனுசரிக்கப்படுகிறது.
- இந்திய வம்சாவளியைச் சார்ந்த ராஜா சாரி சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு நாசா அனுப்ப இருக்கும் குழுவின் தலைவராக நியமிக்கப்ட்டுள்ளார்.
- இந்திய வம்சாளியைச் சார்ந்த சித்தார்த் சாட்டர்ஜியை சீனாவிற்கான ஐ.நா. இருப்பிட ஒருங்கிணைப்பாளராக ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் நியமித்துள்ளார்.
- 55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-வங்கதேசம் இடையேயான ஹால்திபரி-சிலாஹதி ரயில் சேவை இரு நாட்டு பிரதமர்களும் தொடங்கி வைத்தனர். மேலும் இரு நாட்டிற்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
- ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது தளத்திலில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட் சி.எம்.எஸ்-01 செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
- 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான கல்வெட்டுகள் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலையில் கண்டெடுக்கப்பட்டன.
- டிசம்.17-ல் மங்கோலியாவின் சிசிவாங்கில் சீனாவின் சேஞ்சி-5 விண்கலம் நிலவின் பாறை துகள்களுடன் தரையிறங்கியது. இதனால் 44 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில் இருந்து பாறை துகள்களை சேகரித்த பட்டியலில் 3வது நாடாக இடம் பிடித்துள்ளது.
- முதல் இடம் – அமெரிக்கா
- இரண்டாம் இடம் – ரஷ்யா
- மத்திய அரசு யோகா பயிற்சிகளுக்கு விளையாட்டு போட்டி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் யெசா நாயக் ஆகியோர் தெரிவித்தனர்.
- ரூ.28,000 கோடி செலவில் முப்படைகளுக்கும் ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- ஐ.நா. பெண்கள் மேம்பாட்டு கொள்கை அமைப்புடன் கேரள பெண்கள் தொடங்கியுள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனமான வித்யுதி எரிசக்தி சேவைகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- டிசம்.17-ல் பெங்களூரு செளதாவில் நடைபெற்ற பெங்களூரு தொலைநோக்குத் திட்டம் 2020 தொடர்பான கலந்துரையாடலில் உலகத் தரமான மாநகரமாக பெங்களூரு மேம்படுத்தப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
- ரூ.4.50 லட்சம் கோடியை 2024-ம் ஆண்டு வரையில் எரிவாயு கட்டமைப்பில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
- செர்பிய தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்று வருகிற உலககோப்பை மல்யுத்த போட்டியின் 57 கிலோ எடை பிரிவில் அன்ஷூ வெள்ளி பதக்கம் வென்றார்.
- பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆமீர் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.
- சயித் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஜனவரி 10-ல் தொடக்கம்.
19th December 2020
- இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தகவல் அளிப்பதில் தமிழக தகவல் ஆணையம் 2வது இடத்தில் உள்ளதென மாநில தகவல் ஆணையர் ஆர்.பிரதாப்குமார் தெரிவித்துள்ளார்.
- கடந்த 4 வருடங்களில் தமிழக விவசாயிகளுக்கு ரூ.9,200 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதென முதல்வர் தெரிவித்துள்ளார்.
- சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்திய நாராயணனை தேசிய பசுமை தீர்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற சமூக ஊடக தளம் நடத்திய ஆய்வில் 70% இந்தியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.
- கார்களில் உயிர் காக்கும் ஏர்பேக் முன் இருக்கை பயணிகளுக்கு கட்டாயம் என்ற சட்டம் விரைவில் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
- எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக அடுத்த மாதத்தில் (ஜனவரி-2021) தேசிய வரைவு ரயில்வே திட்டம் (என்ஆர்பி) அறிவிக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்
- உடற்பயிற்சி, விளையாட்டு, உடல் ஆரோக்கியத்தின் முக்கியதுவத்தை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்ட “ஃபிட் இந்தியா” இயக்த்தில் அனைத்து தமிழக பள்ளிகளும் பதிவு சான்றிதழ் பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறபித்துள்ளது
- ஆண்டுதோறும் ஆகஸ்.29 அன்று “ஃபிட் இந்தியா தினமாக” கொண்டாட வலியுறுத்தப்பட்டுள்ளது
- ஜிபிஎஸ் தொழில்நுட்ப அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் நடைமுறை பயன்பாட்டுக்கு வர இருப்பதன் காரணமாக வரும் 2 ஆண்டுகளில் சுங்கச்சாவடி இல்லா இந்தியா உருவாக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக பூர்வகுடியைச் சார்ந்த டெர்போ ஹாலண்டை ஜோபைடன் தேர்ந்தெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- ஆஸ்திரேலியா இந்தியாவில் முதலீடு செய்ய அதிக வாய்ப்பு உள்ளதென மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
- தில்லி சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலரும், துணைத் தலைவருமான புலவர் விஸ்வநாதன் (89) காலமானார்.
20th December 2020
- பொங்கல் தொகுப்புடன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என சேலத்தில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் தெரிவித்தார்.
- இந்திய வம்சாவளியரான வேதாந்த் படேல் வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை தொடர்புத்துறை உதவி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இந்தியா மற்றும் பிரிட்டன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
- மேற்கு வங்கத்தில் 2 வாரங்கள் நடத்திய 10,000 அரசு சேவை மூலமாக ஒரு கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் என அம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
- டிசம்.14-ல் தொடங்கிய இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்பின் (அசோம்செம்) நூற்றாண்டு விழாவில் இந்த ஆண்டிற்கான சிறந்த நிறுவன விருதை டாடா நிறுவனம் பெற்றது.
- 400 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழும் அரிய நிகழ்வான “கோ-ஜங்ஷன் எனப்படும் பூமி, வியாழன், சனி ஆகிய கோள்கள் நேர்காேட்டில் சந்திக்கும் நிகழ்வு நாளை (டிசம்.21) அன்று நடைபெற உள்ளது.
- ஐனவரி 16 முதல் 25 வரை நடைபெற உள்ள கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தமிழில் இருந்து திரையிட “அசுரன்” “தேன்” என்ற படங்கள் தேர்வாகியுள்ளன.
- ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) வடிவமைத்த ஏ.டி.ஏ.ஜி.எஸ் (Advanced Soviet Artillery Gun System) பீரங்கி ஒடிசாவின் பாலசோர் சோதனை தளத்தில் நேற்று (டிசம்.19) சோதனை செய்ப்பட்டது.
- டிசம்.19-ல் கோவாவின் 60-வது விடுதலை தினம் கொண்டாடப்பட்டது.
- அமெரிக்க சந்தைகளில் கொழுப்பை குறைக்க உதவும் மருந்துகளை விற்பனை செய்ய அந்த நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாக (யுஎஸ்எஃப்டிஏ) அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
- சீன சாங்கி-5 விண்கலம் 1.73 கிலோ கற்களை நிலவிலிருந்து கொண்டு வந்துள்ளது.
- அமெரிக்க மக்களுக்கு அமெரிக்க மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கரோனோ தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு மருந்து ஒழுங்காற்று அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
- இந்தியாவின் அமித் பாங்கல் உலகக்கோப்பை குத்துச் சண்டை போட்டியில் 52கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார்.
- மேலும்
- +91 கிலோ பிரிவில் சதீஷ் குமார் வெள்ளி பதக்கம்
- பூஜாராஜ், முகமது ஹுஸாமுதீன், கெளரவ் சோலங்கி வெண்கலப்பதக்கம்வென்றனர்.
- சர்வதேச மனித ஒருமைப்பாட்டு தினம் (டிசம்.20).
21st December 2020
- ஆங்கில எழுத்துக்களை தலை கீழாக 5.071 நொடிகளில் தட்டச்சு செய்து சர்வதேச அளவில் காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை பகுதி குமார் என்ற இளைஞர் சாதனை படைத்துள்ளார்.
- சாலை விதிகளை பின்பற்றாமலும் சரியான கட்டமைப்பு வசதி இல்லாமலும் சாலை விபத்தில் இந்தியா முழுவதும் 2019-ஆம் ஆண்டில் 25,858 இறந்துள்ளனர்.
- 2018 ஆம் ஆண்டை விட 2019 இறப்பு 14% அதிகரிப்பு
- நேபாள அதிபரான வித்யா தேவி பண்டாரி அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் பரிந்துரையையின்படி நாடாளுமன்றத்தை (கீழவை) கலைத்துள்ளார்.
- டிசம் 22 முதல் 26 வரை இந்தியா-வங்கதேச எல்லை பேச்சுவார்த்தை குவாஹாட்டியில் நடைபெற உள்ளது.
- டிசம்.20-ல் தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்கள் கூடுதலாக ரூ.16,728 கோடி கடன் வாங்க மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
- இதில் அடங்கும் மாநிலங்கள்
- தமிழகம்
- ஆந்திரா
- கர்நாடகா
- மத்திய பிரதேசம்
- தெலுங்கானா
- டிசம்.20-ல் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் அம்மாநிலத்தின் முதலாவது எண்ணெய் வயலில் கச்சா எண்ணெய் உற்பத்திப்பணியை பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.
- இந்தியாவின் 8-வது ஹைட்ரோ கார்பன் திட்டம்.
- இன்று (டிசம்.21) வியத்நாம் பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
- இன்று (டிசம்-21) 397 ஆண்டுகளுக்கு பிறகு வியாழன், சனி இரு கோள்களும் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு நடக்க இருக்கிறது.
- இந்நிகழ்வு 1623 ஆண்டு நிகழ்ந்ததுள்ளது.
- உலகின் மிகப்பெரிய விலங்கியல் பூங்கா குஜராத் மாநிலத்தில் 280 ஏக்கர் பரப்பளவில் ரிலையன்ஸ் குழுமம் அமைக்க உள்ளது. .
- இந்த பூங்கா கிரீன்ஸ் ஜுவாலஜிகல், ரெஸ்க்யூ அண்ட் ரிஹாபலிடேஷன் கிங்டம் என அழைக்கப்படும்.
- இதன் அருகே ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்ச்சாலை அமைய உள்ளது
- 1971-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் வென்றதன் காரணமாக இந்திய கடற்படை வாரம் (டிசம் 4 தேதி முதல் ஒருவார காலம்) கொண்டாடப்பட்டு வருகிறது.
- உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 9 பதங்களுடன் 2வது இடம் பிடித்ததுள்ளது.
- ஜெருசலேம் புனித யாத்திரை உதவித்தொகை ரூ.37 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
- பார்சிலோனா வீரர் லயோனல் மெஸ்ஸி கால்பந்து போட்டியில் ஒரே கிளப் அணிக்காக அதிக கோல் (643 கோல்கள்) அடித்து கால்பந்து நட்சத்திர வீரர் பீலேவின் சாதனையை சமன் செய்யதார்.
- தற்காப்பு கலைகளான “கட்கா, களரிப்பயட்டு, தங்டா, மல்லர்கம்பர்” ஆகிய விளையாட்டுகளை 2021 “கேலா இந்தியா விளையாட்டு” போட்டியில் சேர்க்க மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
22nd December 2020
- தமிழக முதல்வரால் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சேவை புரிந்த 35 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
- 2020 ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர் விருது அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரிக்கு தமிழக முதல்வர் வழங்கினார்.
- 2018 ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர் விருது அப்போதைய ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பிரபாகருக்கு
- 2019 ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர் விருது அப்போதைய சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தனுக்கும் வழங்கப்பட்டது.
- திருந்திய நெல்சாகுபடியின் மூலம் அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக வழங்கப்படும் விருதினை “நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது” என்ற பெயரில் வழங்கபடும் என முதல்வர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- கரோனா தடுப்பூசி அடுத்த மாதம் (2021-ஜனவரி) இந்தியாவின் வழங்கப்படுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
- இந்தியா – வியட்நாம் இடையே பாதுகாப்பு, அணுசக்தி, பெட்ரோ கெமிக்கல், புதுப்பிக்கதக்க எரிசக்தி, புற்றுநோய் உள்ளிட்டவை தொடர்பான 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
- சீனா – பாகிஸ்தான் இணைந்து சிந்து மாகாணத்தில் “வாஹீன்” என்ற கூட்டுப் பயிற்சியை நடத்தி வருகின்றன.
- “இந்தியாவில் 2018-ம் ஆண்டு சிறுத்தை புலிகளின் நிலை என்ற அறிக்கையை சமீபத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்
- சிறுத்தை புலிகளின் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளது என இந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது
- 2014-ல் 8000-ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 12,852 என்ற அளவில் அதிகரித்துள்ளது. இதில்
- முதல் இடம் – மத்திய பிரதேசம் (3,421)
- இரண்டாம் இடம் – கர்நாடகம் (1,783)
- மூன்றாம் இடம் – மகாராஷ்டிரம் (1,690)
- முல்லாக் மெடல் என்ற சிறப்பு பதக்கம் பாக்ஸிங் டே டெஸ்டில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்படும் வீரருக்கு வழங்கப்பட உள்ளது.
- 2021 தொடக்கத்தில் நடைபெற உள்ள பாட்மிண்டன் போட்டிக்கான இந்திய அணியில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சாய்னா நெவால் இடம் பிடித்துள்ளனர்
- நாசா 2024-ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பவுள்ள திட்டத்திற்கு ஆர்ட்டெமிஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
23rd December 2020
- திருப்பத்தூர் மாவட்டம் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவினை டிசம்.23 முதல் 29 வரை அனுசரிக்கிறது.
- நடிகர் தனுஷ் “தி க்ரே மேன்” (The Gray Man) என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
- அமெரிக்க உயரிய விருதான “லெஜியன் ஆப் மெரிட்” மோடிக்கு வழங்கினார்.
- மத்திய எரிசக்தி அமைச்சகம் முதன் முறையாக மின்சார நுகர்வோரின் உரிமைகளை விளக்கும் விதி முறைகளான மின்சார விதிகள் 2020 (Electricity Rights of Consumers) Rules, 2020) -ஐ வெளியிட்டது.
- மத்திய துறைமுக, கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகமானது ரோ-ரோ, ரோ-பேக்ஸ் படகு சேவைகளுக்கான புதிய வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ளது.
- 2020 செப்.21 முதல் சுங்க விதிகள் 2020 (வர்த்தக ஒப்பந்தங்களின் கீழான நிர்வாக விதிகள்) (Customs (Administraion of Rules of Origin Under Trade Agreements) Rules, 2020) அமலுக்கு வந்தன.
- கேட்டா நிறுவனம் மற்றும் ஃப்ரேசர் நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள 2020 மனித சுதந்திர குறியீட்டில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது.
- முதலிடம் – நியூசிலாந்து
- இரண்டாமிடம் – சுவிட்சர்லாந்து
- மூன்றாமிடம் – ஹாங்காங் பெற்றுள்ளது.
- 2020 யுனெஸ்கோ (UNESCO – United Nations Educational, Scientific and Cultural Organization) கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பபிற்கான ஆசிய-பசுபிக் விருதுகளில் (Unesco Asia-Pacific Awards for Cultural Heritage Conservation) ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநர் அமர் சிங் கல்லூரி சிறப்புத் தகுதி விருது (Award of Merit) பெற்றுள்ளது.
- ஹரியானாவின் குவர் பஹாரி, குருகிராம் என்னுமிடத்திலுள்ள தேசிய சூரிய ஆற்றல் நிறுவனம் (National Institute of Solar Energy (NISE)) வளாகத்தில் இந்தியாவின் முதலாவது, மின்துறையில் திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 20வது இந்தியப் பெருங்கடல் ரிம் அசோசியேஷன் அமைச்சர்கள் குழு கூட்டம் 2020-ஐ நடத்தியது.
- இந்திய துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு மிசோரம் ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை எழுதிய “ஓ, மிசோரம்” என்ற கவிதைகளின் தொகுப்பு புத்தகத்தை வெளியிட்டார்.
- ஆசியா நியூஸ் இன்டர்நேஷனல் (Asia News International (ANI)) தலைவர் பிரேம் பிரகாஷ் Reporting India : My Seventy – Year Joureny as a Journalist” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
- திருவள்ளுவர் மாவட்டத்தை சார்ந்த எல்.அபினேஷ் உலக வலு தூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.
- ஏடிபி விருதுகளுக்கு ஜோகோவிச், ஃபெடரர், நடால் தேர்வாகியுள்ளனர்
- ஜோகோவிச் – ஆண்டு இறுதியில் முதல்நிலை வீரர் விருது (தொடர்ந்து 6வது முறையாக)
- நடால் – ஸ்டெஃபான் எட்பர்க் சிறந்த விளையாட்டு வீரர் விருது (4வது முறையாக)
- ஃபெடரர் – ரசிகர்களின் விருப்த்துக்குறிய ஒற்றையர் பிரிவு வீரர் விருது (தொடர்ந்து 18வது முறையாக)
- பிரிட்டனின் ஜேமி முர்ரே/நீல் ஸ்குப்ஸ்கி இணை – இரட்டையர் பிரிவில் “ரசிகர்களின் விருப்பமான வீரர்கள் விருது
- இரட்டையர் பிரிவில் குரோஷியாவின் மேட் பாவிச்/பிரேசிலின் புருனோ சோர்ஸ் ஜோடி – இரட்டையர் பிரிவில் முதல்நிலை வீரர்கள் விருது
- கனடாவின் வாசெக் போஸ்பிஸி – சிறந்த மீண்டு வந்த வீரர் விருது
- ரஷ்யாவின் ஆன்ட்ரே ரூபேல – ஆண்டின் மிகவும் மேம்பட்ட வீரர் விருது
- அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ ஆர்தர் ஆஷே மனித நேயத்திற்கான விருது
- ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான் பிராட்மேன் தொப்பி ரூ.2.50கோடிக்கு ஏலம் போனது.
- இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளான டிசம்பர் – 23 தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
24th December 2020
- பார்சிலோனா அணியின் லியோனஸ் மெஸ்ஸி (அர்ஜென்டீனா) ஒரே கால்பந்து கிளப் அணிக்காக அதிக கோல் பந்து அடித்த பிரேசில் வீரர் பீலேவின் சாதனையை முறியடித்துள்ளார்.
- அபுதாபியில் நடைபெற உள்ள ஆசிய லே மேன்ஸ் கார் பந்தயத்தில் நரேன் கார்த்திகேயன் தலைமையில் ரேசிங் டீம் களம் காண்கிறது
- அபுதாபியில் உள்ள யாஸ்மெரினா சர்க்யூட்டில் 2021 பிப்.5-6 மற்றும் 19-20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
- ரேசிங் டீம் சார்பில் நரேன் கார்த்திகேயன், அர்ஜுன் மைனி மற்றும் நவீன் ராவ் பங்கேற்கின்றனர்.
- இங்கிலாந்தில் புதிதாக பரவுக்கூடிய வீரமிக்க வைரஸிற்கு VUI-202012/0 என பெயரிடப்பட்டுள்ளது.
- தீபக் சாகெல் என்கிற விஞ்ஞானி கூறுகையில் கொரோனா வைசின் முன் புரதம் 13 விதங்களில் மாற்றம் அடைவதாகவும், இதில் N501Y வைரஸ் மட்டுமே 70% வேகமாக பரவுகிறது என கூறுகிறார்
- அமேசான், ஒன்வெப் உள்பட 24 நிறுவனங்கள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி வர்த்தகத்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளன.
- டிசம்.23-ல் ஒடிசா மாநிலம், பாலசோரில் உள்ள அப்துல்கலாம் தீவில் தரையில் இருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் நடுத்தர ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
- 1270 ஆண்டுகள் பழமையான பள்ளிச்சந்த வட்டெழுத்து கல்வெட்டு திருப்பத்தூர் அருகே உள்ள குண்டுரெட்டியூர் மலைச்சரிவில் கண்டெடுக்கப்பபட்டுள்ளது.
- இந்திய வம்சாவளியர்களான கவுதம் ராகவன், வினய் ரெட்டி ஆகியோருக்கு வெள்ளை மாளிகையில் கூடுதல் உறுப்பினராக ஜோபைடன் நியமனம் செய்தார்.
- கவுதம் ராகவன் – அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக துணை இயக்குனராகவும்
- வினய் ரெட்டி – வெள்ளை மாளிகையின் மூத்து உறுப்பினர்களுக்கான கூடுதல் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளன
- மத்திய அமைச்சரவை டிடிஹெச் துறையில் 100% அந்நிய நேரடி மூதலீட்டை அனுமதிப்பதற்கு ஒப்பதல் வழங்கியுள்ளது.
- ஐசிசி-யின் டி20 தரவரிசையில் பேட்ஸ்மேன் பட்டியில் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 7வது இடத்தையும், லோகேஸ் ராகுல் 3வது இடமும் பிடித்துள்ளன.
- டிசம்.22-ல் கிரிக்கெட் தமிழ் வர்ணணையாளர் அப்துல் ஜாபர் (81) காலமானார்
- தேசிய நுகர்வோர் தினம் (டிசம்.24)
25th December 2020
- அனைத்து துப்புரவுப் பணியாளர்களையும் தூய்மை பணியாளர்கள் என அழைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
- இந்தியா மட்டும் தான் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் குறிக்கோளை நோக்கி முன்னேறும் ஒரே நாடாக இருக்கிறது என பிரதர் தெரிவித்துள்ளார்.
- 2019-ம் ஆண்டிற்கான விருது, தங்கப்பதக்கத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்கிய ராணிப்பேட்டை பெல் நிறுனவத்திற்கு தமிழக அரசு வழங்கியுள்ளது.
- விஸ்வபாரதி பல்கலைகழக விழாவில் சுற்றுசூழல் பாதுகாப்பில் இந்தியா உலகினை வழி நடத்துகிறது என மோடி கூறியுள்ளார்.
- டிசம்24-ல் குஜராத்தின் ஆமாதாபாத்தில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் 2022 நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டியில் 8 அணிகளுக்கு பதிலாக 10 அணிகள் விளையாட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- டிசம்.24-ல் சீனியர் தேர்வுக்குழு தலைவராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சர்மா தேர்வனார்.
- 100% குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்படுத்த தில்லியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு காற்று தர ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- இந்திய இரயில்வே சரக்கு போக்குவரத்து வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது.
- ப்ரிமியன் இன்டன்ட் என்ற பிரிவில் கோரிக்கை வைப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 2 நாட்களுக்குள் ரயில் பெட்டிகள் ஒதுக்கப்படும்.
- உத்திர பிரதேச பல்லியா மாவட்டத்தின் தெஹ்ரி கிராமத்தின் நேஹா சிங் “மோட்சத்துக்கான மரம் (Tree of Salvation)” என்ற ஓவியத்தை 675.12 சதுர அடி நீளத்தில் வரைந்து நவம்.18-ம் தேதி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்
- 2021 ஜனவரி 1 முதல் ரூ.50,000-க்கு மேல் காசோலை பரிவர்த்தனைகளுக்கு “நேர்மறை செலுத்தும் முறை” (Positive Pay System) ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது .
- R-கிளஸ்டரிலிருந்து எரிவாயு உற்பத்தியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிெடட் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் தொடங்குவதாக அறிவித்துள்ளன.
- R-கிளஸ்டர் (R-Cluster) என்பது ஆசியாவின் ஆழமான ஆஃப்-ஷோர் எரிவாயு துறை
- கிராமப்புறங்களில் உள்ள சொத்துக்கள் மற்றும் தொடர்புடைய சச்சரவுகளை முடிவுக்கு கொண்டுவர 2020 டிசம்.15 முதல் 2021 பிப்ரவரி 15 வரை நடைபெறும் “வரசத் (இயற்கை வாரிசு)” என்ற பிரச்சாரத்தை டிசம்.15-ல் உத்திர மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்ககி வைத்தார்.
- தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்துடன் திரைப்படப் பிரிவு, திரைப்படத் திருவிழா இயக்குநரகம், இந்தியாவின் தேசிய திரைப்படக் காப்பகம், இந்திய குழந்தைகள் திரைப்படச் சங்கம் ஆகியவற்றை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- அனில் பிரோஜியா கரோனா வைரஸ் பொது முடக்கத்தின் போது மக்களுக்கு அதிகம் உதவிய மக்களவை எம்.பி.க்களில் முதல் 10 இடங்களில் 77 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்றுள்ளார்.
- வாகன உமிழ்வைக் குறைப்பதற்கும், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கும் வாகன எரிபொருளாக 20% எத்தனால் மற்றும் பெட்ரோலின் கலவையான இ20-யை ஏற்றுக்கொள்ள சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
- பாங்காக்கில் “இந்தியாவின் சுவை” என்னும் பிரச்சாரத்தின் மூலம் இந்தியாவில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக செய்யப்பட்டது.
- உலக வங்கி வெளியிட்டுள்ள எளிதாக தொழில் தொடங்க வல்ல நாடுகளின் பட்டியலின் 17வது பதிப்பில் இந்தியா 63வது இடம் பிடித்துள்ளது
- முதல் இடம் – நியூசிலாந்து
- இரண்டாம் இடம் – சிங்கப்பூர்
- மூன்றாம் இடம் – சீனா
26th December 2020
- இன்று (டிசம்.26) ஜம்மு காஷ்மீருக்கான ஆயுஷ்மான் பிரதான் மந்திரி பாரத் ஜெய் செஹத் (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana SEHAT Scheme for Jammu & Kashmir) திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்
- இந்திய வர்ததக தொழில் கூட்டமைப்பு விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தை (Air Force Sports Control Board (AFSCB)) விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த நிறுவனம் 2020 என்ற பிரிவில் அறிவித்துள்ளது.
- இந்திய அரசு தனது 42-வது ராம்சார் தளமாகவும், (Ramsar Site) லடாக் யூனியன் பிரதேசத்தின் இரண்டாவது ராம்சார் தளமாகவும் சோ கார் சதுப்பு நிலத்தை (Tso Kar) அறிவித்துள்ளது
- இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வாகனத்திற்கும் 2020 ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என மத்திய அமைச்.சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
- டிசம்.24-ல் சுகாதாரமற்ற கழிவறைகள் மற்றும் மனிதக் கழிவுகளை அகற்றுவோர்களின் மறுவாழ்வுக்கு உதவும் வகையிலான ஸ்வசதா அபியான் (Swachhata Abhiyan) செல்போன் செயலி என்ற பெயரில் மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்தார்.
- மத்திய அமைச்சரவை டைரக்ட் டு ஹோம் (Direct to Home (DTH)) ஒளிபரப்பு சேவைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை அங்கிகாரமளித்துள்ளது.
- இவை டி.டி.எச்-ல் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கிறது
- இதன் உரிமைகாலம் 10 ஆண்டிலிருந்து 20 ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது
- சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India (SII)) நிமோனியாவுக்கு எதிரான முதல் உள்நாட்டு இந்திய தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
- அஸ்ஸாம் மாநில அலுவல் மொழியாக போடோ (Bodo) மொழியை மாற்றும் மசோதாவுக்கு அஸ்ஸாம் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து பசுமை சேனல் அந்தஸ்தை (Green Channel Status) எல் அண்டு டி டிஃபென்ஸ் (L & T Defence) எனப்படும் தனியார் பாதுகாப்பு உற்பத்தி மையம் பெற்றுள்ளது.
- இந்தியா கடலோர கண்காணிப்பு வலையமைப்பை (Coastal Surveillance Network (CSN)) விரிவுபடுத்தும் திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக மாலத்தீவு, மியான்மர் மற்றும் பங்களாதேஷில் கடலோர ராடார் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
- குஜராத்தில் ரூ.1000 கோடி முதலீட்டில் மணிகரன் பவர் லிமிெடட் நிறுவனம் இந்தியாவின் முதல் லித்தியம் சுத்திரிகரிப்பு நிலையத்தினை அமைக்க உள்ளது.
- ராஜஸ்தான் அரசின் சாலை பாதுகாப்பிற்கான தரவு சார்ந்த அமைப்புகள் அணுகுமுறைக்கான கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் (Indian Institute of Technology (IIT) கையெழுத்திட்டுள்ளது.
- கோவிட்-19 தடுப்பூசி சந்தை டாஷ்போர்டை (COVID-19 Vaccine Market Dashboard) ஐக்கிய நாடுகளின் குழந்தைகளின் நிதியம் (United Nations Children’s Fund (UNIFECF))அறிமுகப்படுத்தியுள்ளது.
- டிசம்.21-ல் இந்தியாவும் இஸ்ரேலும் சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டன.
- முதன் முறையாக இந்திய சாஃப்ட்பால் விளையாட்டு சம்மேளத்தின் தலைவராக நீத்தல் நரங் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள 2020 தரவரிசைப்படி இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 4வது இடத்திலும், இந்திய பெண்கள் ஹாக்கி அணி 9வது இடத்திலும் இடம்பிடித்துள்ளன
- ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தில் பெல்ஜியம் ஆண்கள் அணியும்
- பெண்கள் பிரிவில் முதலாவது இடத்தில் நெதர்லாந்து பெண்கள் அணியும் பிடித்துள்ளன
27th & 28th December 2020
- இன்று (டிசம்.28) மயிலாடு துறை மாவட்டம் தமிழ்நாட்டின் 38வது மாநிலமாக உதயமாகிறது. இதனை தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார்
- டிசம்.28-ல் நாட்டின் ஓட்டுநர் (Driver) இல்லாத முதலாவது இரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
- இச்சேவை மெஜந்தா வழித்தடத்தில் (ஜனக்புரி மேற்கு முதல் தாவரவியல் பூங்கா மெட்ரோ இரயில் நிலையம்) 37கி.மீ தூரம் செயல்படுத்தப்படுகிறது.
- டிசம்.28-ல் பயணத்திற்காக “ஒன் நேஷன் ஒன் கார்டு” என்ற என்.சி.எம்.சி அட்டையை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.
- இந்த அட்டை மூலம் மெட்ரோ மற்றும் பஸ் சேவைக்காகவும், சுங்கவரி, பார்க்கிங், சில்லறை ஷாப்பிங் உள்ளிட்டவற்றிற்கும் பயன்படுத்தலாம்.
- சந்தியாரன்-2 விண்கலம் மூலம் பெறப்பட்ட தகவல்களை இஸ்ரோவின் இணையதளம் உள்பட 4 இணையதளங்களில் அதிராகாரபூர்வமாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
- ஐயப்பனின் புகழ் பரப்பும் ஹரிவராசனம் விருது வீரமணி ராஜுவுக்கு கேரள அரசு 2020 ஜனவரி 14-ல் வழங்க உள்ளது.
- டிசம்.28-29 வரை முதற்கட்டமாக கரோனோ தடுப்பூசி பரிசோதனை ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- தடுப்பூசி தொடர்பான பணிகளுக்காக “கோ-வின்” என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
- தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு
- தேசிய அளவில் தொடர்புக்கு “1075” என்ற தொலைபேசி எண்ணும்
- மாநில அளவில் தொடர்புக்கு “104” என்ற தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் (மார்க்சிஸ்ட் கட்சி) திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்வானார். இதன்மூலம் நாட்டின் மிகஇளைய வயது மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் தாக்கினால் 7 புதிய அறிகுறிகள் தென்படும் என அந்நாட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளன.
- வரும் கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர பொதுத்தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வி செயலாளர் அமித் க்ரே தெரிவித்துள்ளார்.
- இங்கிலாந்தை தலையிடமாக கொண்டு செயல்படும் பொருளாதாரம் மற்றும் வரத்தக ஆராய்ச்சி மையத்தின் ஆண்டறிக்கையில் 2025-ம் ஆண்டுக்குள் 5வது பெரிய பொருளாதார நாடாகா இந்தியா வளரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் 2027-ல் ஜெர்மெனியையும், 2030-ல் ஜப்பானையும் பின்னுக்கு தள்ளி 3வது பொருளாதார நாடாகா மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிசம்.27-ல் 13-ம் நூற்றாண்டை சார்ந்த சோழர் கால ஆநிரை நடுகல் தர்மபுரி மாவட்டம், வத்தல்மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், மாநில வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் 12,852 சிறுத்தைகள் உள்ளதென தெரிவிக்கபட்டுள்ளது.
- மாநிலங்கள் அளவில் சிறுத்தைகள்
- முதல் இடம் – மத்திய பிரதேசம் (3,421)
- இரண்டாம் இடம் – மாகராஷ்டிரா (1,690)
- மூன்றாவது இடம் – தமிழ்நாடு (868) உள்ளதென தெரிவிக்கபட்டுள்ளது.
- அமெரிக்காவின் நாசா விண்வெளித்தளத்திலிருந்து தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக் கழக மாணவர் எஸ்.ரியாஸ்தீன் (18) கண்டுபிடித்த சிறிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
- சிறிய செயற்கைக்கோளுக்கு பெமிடோ என பெயரிடப்பட்டுள்ளது
- 37 மி.மீ உயரமும் 33 கிராம் எடையும் கொண்டது
- பெமிடா என்பது சிறியது என்று பொருள்
- அரசு கலைக் கல்லூரிகளில் கற்போருக்கு “கல்வி கற்போர் உதவி மையம்” திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் தொடங்கப்பட உள்ளது.
29th & 30th December 2020
- பிரான்சில் இருந்து 3 ரபேல் விமானங்கள் இந்திய படைக்கு வலுசேர்க்க அடுத்த (ஜனவரி – 2021) மாதம் இந்தியாவிற்கு வருகை தருகின்றன
- டிசம்.28-30 வரை நடைபெறவுள்ள 2020-ம் ஆண்டுக்கான உலகத் தமிழர் பொருளாதார இணையவழி உச்சி மாநாடு மற்றும் 7வது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டினை புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி துவக்கி வைக்கிறார்.
- பிரதமர் டிசம்.28-ல் நூறாவது விவசாயிகள் இரயிலை துவக்கி வைத்தார்.
- இந்த இரயில் மகாராஷ்டிராவின் சங்கோலாவிலிருந்து மேற்கு வங்க ஷாலிமார் வரை செல்லும்
- முதலாவது விவசாயிகள் இரயில் தேவ்லாலி – தனபூர் இடையே ஆகஸ்.7 2020ல் துவக்கபட்டது. பின் இந்த சேவை முசாப்பூர் வரை நீட்டிக்கப்பட்டது.
- மத்திய நிதி அமைச்சக செலவீனங்கள் துறையால் வணிகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்களை நிறைவு செய்த 6வது மாநிலமாக ராஜஸ்தான் ஆனது.
- காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (Khadi and Village Industries Commission(KVIC)) அருணாச்சலப் பிரதேச தவாங்கில் உள்ள மக்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஆயிரம் வருடப் பழமை வாய்ந்த பாரம்பரியக் கலையான கையால் செய்யப்படும் “மோன்பா காகித ஆலையை” (Monpa Handmade Papaer) தவாங்கில் அமைத்துள்ளது.
- டிசம்.27-ல் நடன வரலாற்றாசிரியரும், விமர்சகருமான சுனில் கோத்திரி காலமானார்.
- விசாகப்பட்டினம் மாநகராட்சியை சிறப்பாக செயல்படும் குடிமை அமைப்பாக வீட்டு வாரியம் மற்றும் நகர்புற விவகார அமைச்சகம் (Ministry of Housing and Urban Affairs) தேர்வு செய்துள்ளது.
- மிர்சாபூர் – சிறப்பாக செயல்படும் நகராட்சி அமைப்பாகவும்
- மலிஹாபாத் லக்னோ – நகர் பஞ்சாயத்தில் முதல் இடத்திற்கு தேர்வானது
- 2020 ஆம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா விருதுகளில் தொற்றுநோய் பிரிவில் (Pandemic Categroy) வெற்றியாளர்களாக பீகார் முதலமைச்சரின் செயலகம் (Chief Minister Secretariat) தேசிய தகவல் மையம் (National Informatics Centre) மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை (Disaster Management Department) ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- உத்திரப்பிரதேச உணவு மற்றும் சிவில் வழங்கல் துறை 2020 டிஜிட்டல் இந்தியா விருதை “டிஜிட்டல் ஆளுமையின் சிறப்பு” (Excellence in Digital Govermance) விருதினை வென்றுள்ளது.
- மத்தியப் பிரேதச பந்தவ்கர் புலி காப்பகத்தில் இந்தியாவின் முதல் வெப்ப காற்று பலூன் சஃபாரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
- இந்திய வம்சாவளியரான ஆயிஷா ஷா ஜோ-பைடனின் டிஜிட்டல் வியூக மேலாளராக அடுத்த மாதம் (ஜனவரி -20 ) பதவியேற்க உள்ளார்.
- 48 விநாடிகளில் 36 மாநில தலைநகரை கூறி தஞ்சை சாரந்த 2 வயது சிறுவனான ஆதவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்
- ஏகலைவன் விருது இந்திய ஹாக்கி வீராங்களை நமிதாவுக்கு வழங்கப்பட்டது.
- டிசம்.28-ல் ஐசிசி-யின் தசாப்தங்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.
- ஐசிசியின் டி-20 கனவு அணியின் அணிக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக தேர்வு. மேலும் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதும் கிடைத்துள்ளது.
- ஐசிசியின் ஒருநாள் கனவு அணியின் அணிக்கு விராத் கோலி கேப்டனாக தேர்வு.
- திருவள்ளூர் மாவட்ட பெருமாள்பட்டு கிராமத்தை சார்ந்த எல்.ஹபினேஷ் உலக கோப்பை பளு தூக்குதல் சப்ஜூனியர் பிரிவில் வெள்ளிபதக்கம் வென்றார் .
- அமெரிக்க டாலருக்கு நிரகான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் அதிகரித்துள்ளது.
31st December 2020
- டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலப் பிரிவில் தமிழக அரசுக்கு “டிஜிட்டல் இந்தியா 2020” தங்க விருதினை குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் வழங்கினார்.
- தமிழக மருத்துவர் ஜெயபால் இந்திய மருத்துவ சங்கத்தின் (Indian Medical Association) தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
- மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனால் லே-பகுதியில் 3500மீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிகவும் உயரமான வானிலை மையம் திறந்து வைக்கப்பட்டது.
- நிரஞ்சன் பனோத்கர் யெஸ் வங்கியின் (YES Bank) தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
- வங்கியின் தலைமை மனிதவள பிரிவு அதிகாரியாக அனுராக் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது
- பிரிட்டன் அரசு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கரோனோ தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- முதன் முதலில் பிரிட்டன் அரசு பைசர் நிறுவன தடுப்பூசிக்கு அங்கிகாரம் அளித்திருந்தது.
- மத்திய அமைச்சரவை ஆகாஷ் ஏவுகணை ஏற்றுமதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- ரூ.7,725 கோடி மதீப்பீட்டில் சென்னை-பெங்களூரு தொழில் வழித்தட (சிபிஐசி) திட்டத்தின் கீழ் ஆந்திராவின் கிருஷ்ணாபட்டணம், கர்நாடகாவின் துமகுருவில் தொழில் முனையம், நொய்டாவில் மல்டி லாஜிஸ்டிக் மையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
- மத்திய அமைச்சரவை எஸ்தோனியா, பராகுவே, டொமினிக் குடியரசு நாடுகளில் ஒப்புதல் இந்திய தூதரகம் அமைக்க அளித்துள்ளது.
- எச்டிஎஃப்சி வங்கியின் தற்போதைய தலைவர் சியமாளா கோபிநாத்தின் பதவிகாலம் முடிவடையும் நிலையில் அடுத்த தலைவராக பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் முன்னாள் செயலர் அதானு சக்கரவர்த்தி பெயரை ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.
- டிசம்.29-ல் பிரதமர் மோடி உத்திரபிரதேச நியூபாபுர் முதல் நியூ குர்ஜா வரையிலான (351கிமீ) சரக்கு ரயில் சேவைக்கு தனி வழித்தடத்தினை தொடங்கி வைத்தார்.
- யாக்ராஜ்ஜில் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு போக்குவரத்தின் கட்டுபாட்டு மையத்தையும் தொடங்கி வைத்தார்.
- கோவா மாநிலத்தின் தடை செய்யப்பட்ட கஞ்சா செடியினை இனி மருத்து பயன்பாட்டிற்கு மட்டும் பயிரிடலாம் என அம்மாநில சட்டத்துறை சட்ட ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது
- போக்குவரத்து வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருந்தால் வாகனத்தை புதுபிக்க காலாவதி சான்று தேவையில்லை என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
- 2021 ஏப்ரல் 1 முதல் கார் ஓட்டுனர் இருக்கை மட்டுமல்லாமல் முன்சீட்டினிலும் ஏர்பேக் வைக்கப்படுவது கட்டாயமாக்க பொருத்தப்பட வேண்டும் என மத்திய போக்குவரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
- சீனாவின் ஜிகுவான் ஏவுதளத்தில் இருந்து லாங்மார்ச்-4சி ராக்கெட் உதவியுடன் யோகன் வெய்க்சிங்33ஆர் (Yohan Weixing 33R) தொலையுணர்வு செயற்கைகோளை விண்ணில் சீனா ஏவியது.
- இந்தியாவில் அமேசான் நிறுவனம் 2019-20 நிதியாண்டில் ரூ.11,400 கோடியை முதலீடு செய்துள்ளது.
- 20th February 20
- 19th February 20
- 1st January 20
- 2nd January 20
- 3rd January 20
- 4th January 20
- 5th January 20
- 6th January 20
- 7th January 20
- 8th January 20
- 9th January 20
- 10th January 20
- 11th January 20
- 12th January 20
- 13th January 20
- 14th January 20
- 16th January 20
- 17th January 20
- 18th January 20
- 19th January 20
- 20th January 20
- 21st January 20
- 22nd January 20
- 23rd January 20
- 24th January 20
- 25th January 20
- 26th January 20
- 27th January 20
- 28th January 20
- 29th January 20
- 30th January 20
- 31st January 20
- 1st February 20
- 2nd February 20
- 3rd February 20
- 4th February 20
- 5th February 20
- 6th February 20
- 7th February 20
- 8th February 20
- 9th February 20
- 10th February 20
- 11th February 20
- 26th February 20
- 27th February 20
- 28th February 20
- 29th February 20
- 1st March 20
- 2nd March 20
- 3rd March 20
- 4th March 20
- 5th March 20
- 6th March 20
- 7th March 20
- 8th March 20
- 9th March 20
- 10th March 20
- 11th March 20
- 12th March 20
- 13th March 20
- 14th March 20
- 17th March 20
- 18th March 20
- 19th March 20
- 20th March 20
- 21st March 20
- 22nd March 20
- 23rd March 20
- 24th March 20
- 25th March 20
- 26th March 20
- 27th March 20
- 28th March 20
- 29th March 20
- 30th March 20
- 31st March 20
- 1st April 20
- 2nd April 20
- 3rd April 20
- 4th April 20
- 5th April 20
- 6th April 20
- 7th April 20
- 8th April 20
- 9th April 20
- 10th April 20
- 11th April 20
- 12th April 20
- 13th April 20
- 14th April 20
- May 2020
- June 2020
- July 2020
- August 2020
- September 2020
- October 2020
- November 2020
- December 2020
- 2019 & 2020