மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமா் மோடியின் முழுமையான உரை
- கரோனா நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்ததை அடுத்து கடந்த மாதம் 24-ஆம் தேதி தேசிய ஊரடங்கை பிரதமா் மோடி அறிவித்தாா். அப்போது ஏப்ரல் 14-ஆம் தேதி வரை (21 நாள்களுக்கு) ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அவா் கூறினாா்.
- இந்த 21 நாள்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. எனினும், இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது; 350-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.
- எனினும், அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.
- நோய்த்தொற்று பரவல் முற்றிலுமாக கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்தது.
- இதுதொடா்பாக அனைத்து மாநில முதல்வா்கள் கூட்டத்திலும் பிரதமா் மோடி ஆலோசித்தாா். தமிழ்நாடு, கா்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், ஒடிஸா, பஞ்சாப், மேற்கு வங்கம், அருணாசலப் பிரதேசம் ஆகிய 8 மாநிலங்கள் ஏற்கெனவே ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துவிட்டன.
- மக்களின் தியாகம்: இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் உரையாற்றினாா்.
- இந்தியாவில் தேசிய ஊரடங்கை மே 3 வரை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் கடைப்பிடித்து வரும் ஒழுக்கத்தைத் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
- வரும் 20-ஆம் தேதி வரை ஒவ்வொரு நகா்ப்புறமும், ஒவ்வொரு காவல் நிலையமும், ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு மாநிலமும் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதை எந்த அளவுக்குப் பின்பற்றுகின்றன என்பது மதிப்பீடு செய்யப்படும்.
7 உறுதிமொழிகள்
- மூத்த குடிமக்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஏற்கனவே நோய்களால் அவதிப்பட்டு வருபவர்களை மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்
- சமூக விலகல் நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்
- அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல நேர்ந்தால், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்; அது, கைக்குட்டையாக கூட இருக்கலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். மருத்துவ உதவி தேவைப்படுவோர், மத்திய அரசின், 'ஆரோக்கிய சேது' என்ற, 'ஆப்' எனப்படும் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்
- ஏழைகளுக்கு முடிந்த வரை உதவ வேண்டும். அவர்களது உணவுத் தேவையையாவது பூர்த்தி செய்ய வேண்டும்
- உங்கள் நிறுவனத்தில் அல்லது தொழிற்சாலையில் பணியாற்றுவோரிடம் கருணை காட்டுங்கள். அவர்களை பணி நீக்கம் செய்து விடாதீர்கள்; அவர்களது வாழ்வாதாரத்தை சீர்குலைத்து விடாதீர்கள்
- கொரோனா ஒழிப்பு பணியில் போர் வீரர்களாக செயல்பட்டு வரும், டாக்டர், நர்ஸ், சுகாதார ஊழியர்கள், போலீசார் ஆகியோருக்கு மரியாதை செலுத்துங்கள்.
போர் கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகள் இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்
- இந்தியாவுக்கு போர் கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகளை விற்க, அமெரிக்க பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா, இந்தியாவை, நெருங்கிய ராணுவ கூட்டாளி என, 2016ல் அங்கீகரித்தது.
- இதன் மூலம், ராணுவத்தில், நவீன தொழில்நுட்ப வசதிகளை, இந்தியா அமெரிக்காவிடமிருந்து பெற, வழி கிடைத்தது.இந்நிலையில், இந்தியாவுக்கு, 74 கோடி ரூபாய் மதிப்பில், போர் கப்பல்களை அழிக்கும், 10 ஹெலிகாப்டர் தாங்கி ஏவுகணைகளை விற்க, அமெரிக்க பார்லி., ஒப்புதல் அளித்துள்ளது.
- அத்துடன், 51 கோடி ரூபாய்க்கு, 16 இலகு ரக, 'டார்பிடோக்கள்' எனப்படும், நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து செலுத்தப்படும் ஏவுகணைகள் மற்றும் மூன்று, பயிற்சிக்கான டார்பிடோக்களையும் விற்க, ஒப்புதல் அளித்துள்ளது.
25 ஏழை நாடுகளுக்கு கடன் நிவாரணம் ஐஎம்எப் ஒப்புதல்
- கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஐஎம்எப்பில் அங்கம் வகிக்கும் ஏழை நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்க ஐஎம்எப் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆப்பிரிக்கா, ஆப்கான், ஏமன், நேபாளம், ைஹதி போன்ற நாடுகள் பயன்பெறும்.
- இது தவிர உலக நாடுகளுடன் இணைந்து பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு வழங்கியுள்ள கடன் தொகையை வசூலிப்பதை வரும் மே1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- இதற்கிடையில், கொரானா வைரஸ் பாதிப்பால் இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டில் 1.9 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பிற்கு நிதி நிறுத்தம்: அறிவித்தார் டிரம்ப்
- கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு நிலையில் உள்ளதாக குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார்.
- இந்நிலையில் முதற்கட்டமாக உலக சுகாதார அமைப்பிற்கு ரூ. 3000 கோடி நிதியை டிரம்ப் நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா எதிா்ப்பு நடவடிக்கைக்கு ஐசிஐசிஐ வங்கி ரூ.100 கோடி நிதி
- தனியாா் துறையைச் சோந்த ஐசிஐசிஐ வங்கி குழுமம் மத்திய அரசு மேற்கொண்டு வரும் கரோனா எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.100 கோடி நிதி உதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது.
- அதற்கு வங்கி குழுமத்தின் பங்களிப்பாக பிரதமா் நிதிக்கு ரூ.80 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.20 கோடியும் வழங்கப்படும் என்றாா்.
ஆரோக்கிய சேது ' செயலி உலக வங்கி பாராட்டு
- நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
- அதன் ஒரு நிலையாக, மக்கள் தங்களது சுயபாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வழிவகுக்கும் சில செயலிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன.
- இதில் மிக முக்கியமான செயலியாகத் தற்போது பார்க்கப்படுவது 'ஆரோக்கிய சேது ' செயலி. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-போன்களில் இயங்கும் இந்தச் செயலியை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
- சுமார் 11 மொழிகளில் பயன்படுத்தக்கூடிய இந்தச் செயலியில் அரசாங்க தரவுகளின்படி ஒவ்வொரு பகுதியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை குறித்த தரவுகள் தரப்பட்டுள்ளன.
- இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து நாம் பயன்படுத்தும்போது இந்தச் செயலி நமது அருகில் இருப்பவர்களின் தூரம் மற்றும் மக்கள் நெருக்கத்தை ஆராய்ந்து நாம் இருக்கும் பகுதியில் கொரோனா பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதைக் கூறும்.
- பிரதமர் மோடியின் இன்றைய உரையிலும் கூட இந்த செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
- இந்நிலையில் இந்தச் செயலியை உலக வங்கி பாராட்டியுள்ளது. உலக வங்கி சார்பில் தெற்கு பொருளாதாரப் பார்வை என்ற தலைப்பிலான ஆய்வறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
- அதில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அவசியம். அந்தவகையில் இந்தியா வடிவமைத்துள்ள 'ஆரோக்கிய சேது ' செயலி அதற்கு முன் உதாரணமாக வழிகாட்டியாக உள்ளது என தெரிவித்துள்ளது.
- 20th February 20
- 19th February 20
- 1st January 20
- 2nd January 20
- 3rd January 20
- 4th January 20
- 5th January 20
- 6th January 20
- 7th January 20
- 8th January 20
- 9th January 20
- 10th January 20
- 11th January 20
- 12th January 20
- 13th January 20
- 14th January 20
- 16th January 20
- 17th January 20
- 18th January 20
- 19th January 20
- 20th January 20
- 21st January 20
- 22nd January 20
- 23rd January 20
- 24th January 20
- 25th January 20
- 26th January 20
- 27th January 20
- 28th January 20
- 29th January 20
- 30th January 20
- 31st January 20
- 1st February 20
- 2nd February 20
- 3rd February 20
- 4th February 20
- 5th February 20
- 6th February 20
- 7th February 20
- 8th February 20
- 9th February 20
- 10th February 20
- 11th February 20
- 26th February 20
- 27th February 20
- 28th February 20
- 29th February 20
- 1st March 20
- 2nd March 20
- 3rd March 20
- 4th March 20
- 5th March 20
- 6th March 20
- 7th March 20
- 8th March 20
- 9th March 20
- 10th March 20
- 11th March 20
- 12th March 20
- 13th March 20
- 14th March 20
- 17th March 20
- 18th March 20
- 19th March 20
- 20th March 20
- 21st March 20
- 22nd March 20
- 23rd March 20
- 24th March 20
- 25th March 20
- 26th March 20
- 27th March 20
- 28th March 20
- 29th March 20
- 30th March 20
- 31st March 20
- 1st April 20
- 2nd April 20
- 3rd April 20
- 4th April 20
- 5th April 20
- 6th April 20
- 7th April 20
- 8th April 20
- 9th April 20
- 10th April 20
- 11th April 20
- 12th April 20
- 13th April 20
- 14th April 20
- May 2020
- June 2020
- July 2020
- August 2020
- September 2020
- October 2020
- November 2020
- December 2020
- 2019 & 2020